Monday, July 16, 2012

காஞ்சி குமரக்கோட்டம்

முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை திருவுருவங்கள் நாகம் குடைபிடித்த நிலையில் காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் காணப்படுகின்றன. இது இங்கு மட்டுமே காணப்படும் விசேஷ உருவமாகும். முருகப்பெருமானுக்கு 5 தலை நாகம் குடை பிடித்திருக்கிறது. வள்ளி, தெய்வானைக்கு 3 தலை நாகம் குடை. இந்த திருக்கோலத்தை கல்யாணசுந்தரர் கோலம் என்பர். சுப்பிரமணியருக்கு வைகாசி பிரம்மோற்சவத்தில் 11ம் நாள் வள்ளியுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஐப்பசி கந்தஷஷ்டி திருவிழாவில் தெய்வானையுடன் திருமணம். மிகவும் அபூர்வமான இந்த திருக்கோலத்தை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்களும் நீங்கும். கால சர்ப்ப தோஷம் அகலும். திருமணத்தடைகள் விலகி கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும்.

No comments: