Tuesday, February 26, 2013

மார்ச் மாத ஆன்மீகக் குறிப்புகள்:

மார்ச் மாத ஆன்மீகக் குறிப்புகள்:

குறிப்பு: கீழ்க்காணும் அனைத்தும் சென்னை அயனாம்சத்திற்கு கணிக்கப்பட்டவை.

சதுர்த்தி - 1, 15*
ஷஷ்டி - 3, 17*
கிருத்திகை - 17*
கரிநாள் - 1, 19, 28
காகபுஜண்டர் குருபூஜை - 23
வாஸ்து - 6ம் தேதி - காலை 9.36 முதல் காலை 9.50 வரை
ஏகாதசி - 7, 23*
மஹாசிவராத்திரி - 10
அமாவாசை - 11
மாஸவிஷு தர்ப்பன நாள் - 14*
பிரதோஷம் - 9, 24*
ஹோலிப் பண்டிகை, பங்குனி உத்திரம், பௌர்ணமி விரதம் - 26
சந்திர தரிசனம் - 13*
காரடையான் நோன்பு - 14*

* - இக்குறியிட்டவை யாவும் வளர்பிறை என்று அறியவும்

Sunday, February 24, 2013

மகிமை மிக்க மாசிமகம்

மகிமை மிக்க மாசிமகம்

பிப்., 25 - மாசிமகம்

கும்பகோணத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது மாசிமகத் திருநாள். 

இதற்கு காரணம்.

முன்னொரு காலத்தில், தண்ணீரால் உலகம் அழிய இருந்தது. பிரம்மா, சிவனிடம் சென்று, உலகம் மீண்டும் உருவானதும், தன் படைப்புத் தொழிலை எங்கு ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், "கும்பம் ஒன்றில் அமுதத்தை நிரப்பி, படைப்புக்கலன்களை அதனுள் வைத்து நீரில் மிதக்க விடு. உலகம் அழியும் நேரத்தில், அது எங்கு கரை ஒதுங்குகிறதோ, அங்கே சென்று எடுத்து, மீண்டும் உலகை படைக்கலாம். உலகமே அழிந்தாலும், அந்த நகரம் மட்டும் அழியாது...' என்றார்.
 

இதன்படியே, பிரம்மா செய்த கும்பம், வெள்ளத்தில் மிதந்தது. அந்த குடம் ஒரு இடத்தில் ஒதுங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். கும்பத்தின் மூக்கு சிதைந்தது. அதிலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அதுவே தற்போது, "மகாமகக் குளம்' எனப்படுகிறது. அமுதம், அங்கு சிதறிக்கிடந்த வெண்மணலுடன் கலந்து, ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே, "கும்பேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது. கும்பகோணத்தில் இது பிரதிஷ்டை செய்யப்பட்டது.
 

பெரும்பாலான கோவில்களில், சுவாமி, அம்பாள் பிரகாரங்களை தனித்தனியே சுற்றிவரும் அமைப்பே இருக்கிறது. ஆனால், இக்கோவிலின் பிரகார அமைப்பு, சுவாமியையும், அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. அம்மையப்பனே உலகம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இந்த அமைப்பு இருக்கிறது. கும்பேஸ்வர லிங்கம் மணலால் ஆனதால், அபிஷேகம் கிடையாது. இந்த லிங்கம், கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும்.
 

கோவிலின் முன், பொற்றாமரைக்குளம் இருக்கிறது. நவகன்னியரான நதிகள், மகாமக குளத்தில் நீராடிய பிறகு, பொற்றாமரை குளத்தில் நீராடினர் என்பது ஐதீகம். இதன்படி, மாசிமகத்திற்கு வரும் பக்தர்கள், மகாமக குளத்தில் நீராடிய பின், பொற்றாமரைக்குளத்து நீரையும் தலையில் தெளித்துக் கொள்வர். வெளிப்பிரகாரத்தில் கும்பமுனிசித்தர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால், கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
 

இங்குள்ள அம்மனுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள், வளர்மங்கை ஆகிய திருநாமங்கள் உண்டு. சிவபெருமான் தன் திருமேனியில் பாதியை, அம்மனுக்கு வழங்கியதைப்போல், தன் மந்திர சக்திகளில், 36 ஆயிரம் கோடியை, இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். ஏற்கனவே அம்பாளுக்கென தனியாக, 36 ஆயிரம் கோடி மந்திர சக்தி உண்டு. இதையும் சேர்த்து, 72 ஆயிரம் கோடி மந்திர சக்தி இந்த அம்பாளிடம் உள்ளது. எனவே, இவளை, "மந்திரபீடேஸ்வரி' என்ற திருநாமமிட்டு அழைக்கின்றனர். அம்மனுக்குரிய சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானது.
 

மகாமகத் திருவிழா, நீர்நிலைகளின் மேன்மையை மக்களுக்கு போதிக்கிறது. நீர்நிலைகளைப் பாதுகாக்கவே, அவற்றை தெய்வத்துக்கு சமமாக முன்னோர் மதித்தனர். நதிகளில் புதுநீர் வரும்போது, அவற்றுக்கு பூஜை செய்தனர். மாசிமகத்தன்று, கும்பகோணத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து மகாமக குளத்திற்கும், காவிரியாற்றுக்கும் சுவாமிகள் எழுந்தருளுவர். சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோவில் தெப்பக்குளக் கரையில், திருமணம் நடக்கவும், தீர்க்கசுமங்கலி பாக்கியத்திற்கும், பெண்கள் விளக்கேற்றுவது வழக்கமாக உள்ளது.
 
நம் ஊரிலுள்ள ஆறு, குளங்களைச் சுத்தப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென்பதே, மாசிமகம் நமக்கு கற்றுத்தரும் பாடம். நீர்நிலைகளைப் பாதுகாக்க உறுதியெடுப்போமா!
 
***

தி. செல்லப்பா

Saturday, February 23, 2013

இன்று சனிப்பிரதோஷம்

இன்று சனி பிரதோஷம்; 23-02-2013



சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

Monday, February 18, 2013

அறிவிப்பு - மீண்டு விட்டேன்

அன்பின் சொந்தங்களுக்கு,

எங்களுக்கு கடந்த வாரம் செவ்வாய்கிழமை (12.02.2013) அன்று காலை சென்னை அம்பத்தூர் புதூர் அருகில் விபத்து ஏற்பட்டது. கொஞ்சம் காயம்தான். வலது கையில்தான் உள்காயம் அதிகம். கைவீக்கம் குறைந்து இன்றுதான் இணையம் பக்கம் வரமுடிந்தது. இருந்தபோதிலும் வெள்ளிக்கிழமையன்று பழனியிலும் (15.02.2013), ஞாயிற்றுக்கிழமையன்று (17.02.2013) சென்னையிலும் நாம் ஏற்றுக்கொண்டு நடைபெற்ற ஸ்ரீமஹாகணபதி ஹோமங்களை பெரியவர்களின் ஆசீர்வாதங்களால் சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்தோம். 

இனி கொஞ்ச நாட்களுக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.


Saturday, February 9, 2013

1600 சொந்தங்களைத் தாண்டி - முகப்புத்தகம்

கிட்டத்தட்ட 1600 சொந்தங்களைத் தாண்டி எங்களது முகப்புத்தகத்தில் இணைந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.

இங்கே சொடுக்கவும்.

Wednesday, February 6, 2013

டோண்டு ராகவன் மறைவு

மூத்த வலைப்பதிவரும் எங்களுக்கெல்லாம் முன்னோடியுமான ’சமீபத்தில்’ டோண்டு ராகவன் ஐயா இறைவனடி சேர்ந்தார். மிகவும் சீரிய ஞானமும் அபாரமான ஞாபக சக்தியும் கொண்டவர்.




அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.