Monday, November 18, 2013

அறிவிப்பு:


[1] சில சொந்த காரணங்களால் கார்த்திகை மாத குறிப்புகள் தர இயலவில்லை. இன்று தருகிறோம். 
[2] மூவராகிய ஒருவன் பதிவு போட்டாலும் போட்டோம், சனி 5ல் இருப்பவர்கள் அனைவருக்கும் தோஷமா என பதில்கள்.

அதற்கான விளக்கம்:

அன்பின் சொந்தங்களே, நாம் சொன்னது பொதுவில்தான். 5ல் சனி இருக்கும் அனைவருக்கும் தோஷம் வந்து சேர்வதில்லை.

Monday, November 4, 2013

மூவராகிய ஒருவன்:


கடலூருக்கு அருகில் இருக்கும் திருவஹீந்திரபுரத்தில் தேவநாதப் பெருமாள் ஆலயம் உள்ளது. 



இங்கு கோவிலின் உற்சவராக ‘மூவராகிய ஒருவன்’ விளங்குகிறார். இவரது வலது உள்ளங்கையில் பிரம்மதேவரின் தாமரைப்பூ சின்னமும், நெற்றியில் சிவபெருமானின் சின்னமான நெற்றிக்கண்ணும், சிரசில் ஜடையும், இரண்டு கரங்களிலும் விஷ்ணுவின் சின்னமான சங்கு சக்கரங்களும் காணப்படுகின்றன. இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண இயலாது. இங்கு குன்றின் மீது சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவர் சந்நிதி உள்ளது.

குறிப்பு: லக்னத்திற்கு 5ல் சனி இருக்கும் அமைப்பு உள்ளவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் தோஷம் நீங்கும்.

கொஞ்சம் சின்ன சின்ன செய்திகள்:


தேரில் பவனி வரும் சூரிய பகவான்:
கருநாடக மாநிலம் பட்டடக்கல் என்னும் திருத்தலத்தில் உள்ள விருபாக்ஷர் திருக்கோவிலில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் நின்ற நிலையில் பவனி வருவதைப் போன்று காட்சி அளிக்கிறார். அவருக்கு முன்னால் அவரது தேரோட்டியான அருணன் உட்கார்ந்த நிலையில் இருக்கிறார். இது ஒரு அரிய காட்சியாகும்.

ஆனந்தத் தாண்டவத்தில் நடராஜர்:
மயிலாடுதுறை ஆனந்தத் தாண்டவபுரத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் உள்ள நடராஜர் அபூர்வ சிறப்பு கொண்டவர். நடராஜர் காலின் கட்டை விரலால் மட்டுமே நின்று கொண்டு திருவாச்சியில் ஓர் இடத்திலும் பிடிப்பு இல்லாமல் மூக்குக்கு நேராக காலைத் தூக்கி கால் சாயாமல் நர்த்தனம் ஆடுகிறார். ஆனந்த மாமுனிவருக்காக நடனம் ஆடியதால் இந்த ஊருக்கு ஆனந்த தாண்டவபுரம் என்று அழைக்கப்படுகிறது.


ஏழு தலை நாகத்தின் மீது ஸ்ரீரங்கநாதர்:
கருநாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீரங்கநாதர் ஏழுதலை நாகத்தின் மீது ஆயாசம் தீர பள்ளி கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம். ஒரு தலை நாகம் ஐந்து தலை நாகங்கள் என்று இருக்க இந்த தலத்தில் ஏழு தலை நாகம் மீது பெருமாள் பள்ளி கொண்டுள்ளார்.

இந்த ஸ்தலம் பஸ்சிரங்கநாத க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
 

தவிடு அபிஷேகம்:
கொடுங்கோளூர் அம்மன் கோவிலில் தவிடு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள சிவாலயத்தின் கோபுரம் மரக்கூரையால் ஆனது.

அமாவாசை மலை:
சேலம் - கஞ்சமலையில் கஞ்சமலை சித்தர் என்பவர் வாழ்ந்தார். இவரது சீடர்கள் அகோரர், மாளிகைத்தேவர், நாதாந்தர் போகர், பரமானந்தர் ஆகியவர்கள் அமாவசையன்று இந்த மலைக்கு வருவதாக கூறுகிறார்கள். எனவே இந்த மலை அமாவாசை மலை என்று அழைக்கப்படுகிறது.