Wednesday, March 5, 2025

வள்ளுவ பார்ப்பாரியம்

 எதேச்சையாக ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. அவர் ஓர் ஜோதிட பேராசிரியர். பல பட்டங்களுக்கு சொந்தக்காரர். ராசிபலன் சொல்லும் ஜோதிடர்கள் அனைவரையும் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு செய்தியை போகிற போக்கில் சொன்னார். அதாவது ”தமிழ்நாட்டில் இருக்கும் எவருக்குமே ஜோதிடம் தெரியாது. தெலுங்கு பிராமணர்கள் வந்துதான் இங்கு ஜோதிடம் சொல்லி கொடுத்தார்கள். மேலும் இங்கு இருப்பவர்களுக்கு ஜோதிடத்தில் ஒரு அ ஃ கூட தெரியாது. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எதற்கும் லாயக்கில்லை” என சொல்லி விட்டு தனது அடுத்த கருத்துக்கு போய் விட்டார். அந்த பேராசிரியர் தான் சொன்னதை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் எழுதி வைத்துவிட வேண்டியதுதான்.




 

சரி நம்ம விஷயத்திற்கு வருவோம். ரொம்பல்லாம் மெனக்கெட வேண்டாம். இங்கு ஜோதிடம் இருந்தது என சொல்வதற்கு ஒரு சிறிய ஆதாரமே போதுமானது. வானிலை கணிப்பதற்கு கணியர் என்றொரு சாதியும் - அவர்கள் கணித்ததை பலன்கள் சொல்ல வள்ளுவர் என்றொரு சாதியும் இருந்தது, இருக்கிறது. அரசியல் காரணமாக இருவரையும் பிரித்தார்கள். தமிழ் அறிஞர் குணா அவர்கள் எழுதிய வள்ளுவ பார்ப்பாரியம் படிக்க வேண்டும். 

இன்னும் என்னென்னல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறதோ?

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Friday, March 29, 2024

ஹர்திக் பாண்டியா.....

 எதிர்நீச்சல் - நாகேஷ் நடித்த ஒரு பழைய படம். அதில் ஒரு காட்சி வரும். நாகேஷ் - மனோரமா - சௌகார் ஜானகி மூவரும் பர்வதம் அம்மா மகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது சௌகார் கேட்பார் “அந்த பொன்னு என்ன அவ்வளவு அழகா? சினிமா ஸ்டார் மாதிரி இருப்பாளா?”. அதற்கு நாகேஷ் சொல்வார் “அழகா இருப்பான்னு சொன்னேன் அழகுபடுத்திக்குவான்னா சொன்னேன்!”. 





இப்படித்தான் இருக்கிறது ஹர்திக் பாண்டியா செய்வது. ஹீரோவாக இருப்பது வேறு - ஹீரோவாக நடிப்பது வேறு. புரட்டாசி ஆயில்யத்தில் பிறந்துள்ள அவருக்கு தற்போது அஷ்டமத்து சனி நடக்கிறது. கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Wednesday, March 13, 2024

எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்?

 ID: 202419


தஎ
பி. தேதி: 17.06.1992
நேரம்: 11.20 காலை.
ஊர்: கரூர்.
தற்போது வேலை இல்லை. எப்போது நிரந்தர வேலை கிடைக்கும். உடல் நிலை குறைபாடு பற்றி சொல்லவும்.

பதில்:
நீங்கள் பிறந்தது ஆனி மாதம் பூராடம் நக்ஷத்ரம் தனுசு ராசி. சிம்ம லக்னத்தில் பூரம் சாரம் பெற்றிருக்கிறீர்கள். ராகு தசை சனி புத்தி நடக்கிறது. இன்னும் 1 வருடம் பாக்கி இருக்கிறது. 2025 பிப்ரவரி வரை சிறிது சிரமமான காலகட்டம். அதன் பின் வாழ்வில் மாற்றங்கள் வரும். நீங்கள் நினைத்தது நடக்கும். எடுக்கும் முயற்சிகள் பலிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தினசரி சிவபுராணம் சொல்லி வரவும்.


Tuesday, March 12, 2024

திருமணம் எப்போது?

 

ID: 202417
கேள்வி:
பிறந்த தேதி: 20-08-1991; நேரம்: இரவு 10:05; ஊர்: கோயம்புத்தூர். திருமணம் எப்போது?
பதில்:
நீங்கள் பிறந்தது ஆவணி மாதம் 4ம் தேதி. லக்னம் மேஷம் - அசுபதி பாத சாரம். தனுசு ராசி - மூல நட்சத்திரம். உங்களுக்கு தற்போது சந்திர தசை - சனி புத்தி நடக்கிறது. சந்திர பகவான் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. மேலும் அவர் பாக்கிய ஸ்தானத்தில் அவரது நட்பு வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுடைய பாக்கிய ஸ்தானம் குரு பகவானின் வீடாகும். சனி பகவான் 10க்குடையவர். அவரது வீட்டிலேயே ஆட்சி நிலையில் இருக்கிறார். இது விஷேஷமான அமைப்பாகும். திருமணத்திற்கு 7 - 8 ஆகிய இடங்கள் முக்கியமாக கருதப்படுகிறது. 7 மற்றும் 8க்குடைய சுக்கிர பகவானும், செவ்வாய் பகவானும் இணைந்து சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார்கள். இது அவர்களுக்கு பகை வீடாகும். 30 வயதைக் கடந்தவர் என்பதால் உங்களுக்கு இவர்கள் இருப்பால் தோஷம் ஒன்றுமில்லை. கோச்சாரப்படி குருபகவானின் ஒன்பதாம் பார்வை உங்களின் ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கான திருமண ஆகக்கூடிய நேரமாக இப்போது இருக்கிறது.
செவ்வாய் பகவான் மற்றும் சுக்ர பகவானை வணங்க திருமணம் விரைவில் கை கூடி வரும். முருகப்பெருமான் மற்றும் மஹாலட்சுமி தேவியை தொடர்ந்து வணங்கி வர நன்மையே நடக்கும்.

பொருளாதார நிலைமை குறித்தும், கடன்கள் எப்போது தீரும் என்பது குறித்தும்.

ID:202418

கேள்வி:
பிறந்த தேதி: 09-03-1963; நேரம்: இரவு 08:01; ஊர்: வேலூர். பொருளாதார நிலைமை குறித்தும், கடன்கள் எப்போது தீரும் என்பது குறித்தும்.
 
பதில்:
உங்கள் ஜாதகப்படி நீங்கள் பிறந்தது மாசி மாதம் 25ம் தேதி. கன்னி லக்னம் - ஹஸ்தம் பாதசாரம். சிம்ம ராசி - பூரம் நட்சத்திரம். உங்களுக்கு 15-07-2024 வரை குரு தசை - சனி புத்தி நடந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு புதன் புத்தி தொடங்குகிறது. புதன் பகவான் உங்கள் ஜாதகப்படி தொழில் ஸ்தான அதிபதி ஆவார். மேலும் குரு பகவான் சுகஸ்தான அதிபதி ஆவார். குரு பகவான் ஆட்சியாகவும் இருக்கிறார். இருவரின் ஆசிர்வாதமும் சேர்ந்து வரும் போது உங்கள் பொருளாதார நிலை உயர வாய்ப்பிருக்கிறது. அதவாது இந்த குரு தசையில் புதன் புத்தியில் உங்களின் பொருளாதார பிரச்சனைகள் தீர வழி பிறக்கும். 2025 - அக்டோபர் மாதத்திற்குள் உங்களின் கடன்கள் குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள். கவலை வேண்டாம்.
 
குரு பகவான் வரும் சித்திரை மாதம் உங்கள் ராசியைப் பார்க்கிறார். உங்களின் நிலை உயரும் நேரம் இந்த காலகட்டமே. தினமும் புதன் அதிபதி பெருமாள் மற்றும் குரு பகவானையும் பிரார்த்தனை செய்து வர உங்களின் பிரச்சனைகள் தீரும்.


Wednesday, March 6, 2024

குல தெய்வ வழிபாட்டை விட்டு விடாதீர்கள்

 அவன் சொன்னான்
இவன் சொன்னான்னு
குல தெய்வ வழிபாட்டை விட்டு விடாதீர்கள். 

அதுவே என்றும் நம்மை காக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542

எனது ஜாதகம் சுத்த ஜாதகமா

SD

1.4.1991,
பிறந்த நேரம் 6.50 இரவு,
பிறந்த இடம் அரூர்.
எனது ஜாதகம் சுத்த ஜாதகமா எனக்கு எப்போது திருமணம் நடக்கும்தெரிவிக்கவும் சார்
 
பதில்:
நீங்கள் பிறந்தது பங்குனி மாதம் - ஸ்வாதி நக்ஷத்ரம் - துலா ராசி - கன்னியா லக்னம் - சித்திரை 1ம் பாதம். சனி தசை சுக்கிர புத்தி நடக்கிறது. ஏழாமிடத்தில் சூரியன் இருக்கிறார். பொதுவாக சூரியன் ஏழாமிடத்திலோ அல்லது லக்னத்திலோ இருந்தால் தோஷம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனாலும் சப்தமாதிபதி குரு பகவான் உச்சமாக இருப்பது சிறப்பு. வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நல்லபடியாக திருமணம் நடைபெறும். வரும் பெண் சொந்தமில்லை - அசல். ஒரே பெண்ணாக இருக்க மாட்டாள். குழந்தை பாக்கியம் சிறப்பு. ஒருமுறை ஏகாதச ருத்ர ஹோமம் செய்யவும்.

Sunday, March 3, 2024

எனக்கு எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும். எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.

 Name: AJ D O B : 29 / 03 / 1991, 4.20 AM, KUMBAKONAM. எனக்கு எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும். எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். 

 

பதில்: பங்குனி மாதம் பூரம் நக்ஷத்ரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது ராகு தசை புதன் புத்தி நடக்கிறது. கும்ப லக்னத்தில் சதயம் சாரம் பெற்று இருக்கிறீர்கள். தற்போதைய நேரம் மிகுந்த அலைச்சலையும் விரையத்தையும் உண்டாக்கலாம். அலுவலக மேலாண்மை போன்ற வேலை உங்களுக்கு கிடைக்கும். அதே போல் கன்சல்டண்ட், ஏற்பாட்டாளர் போன்ற வேலைகளும் சிறப்பாக இருக்கும். திருமணம் 2025ல் நடக்கும். நல்ல வாழ்க்கை அமையும். தினசரி முன்னோர்கள் வழிபாடு செய்யவும். குலதெய்வத்தை பிடித்துக் கொள்ளவும். 

 

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan