Thursday, July 2, 2020

பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?

பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?
************



சில அடிப்படைத் தகவல்கள்:

ஆண்டுகளைக்  நமது முன்னோர் சுழற்சி முறையில் (in rotation) அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டனர்.

வான் மண்டல தொகுதி அல்லது  ராசி மண்டல தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் (Degrees) கொண்டுள்ளது. 

நாம் முக்கியமானவையாக நம்பும 27 நட்சத்திரங்களும் இந்த பாதையில் உள்ளன. 

 இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும் சஞ்சாரம் செய்கின்றன. 

360 பாகைகளில் (degrees)
 12 ராசிகள் அடங்கியுள்ளன. 

எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளை (degrees) கொண்டுள்ளது.

 சூரியன் வான் பாதையில் தினசரி 1 பாகை(degree)  நகர்கிறது.

ஒருமுறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது.

குரு சுமார் ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும். 

சனி மாதத்துக்கு ஒருபாகை (degree) நகரும்.

 எனவே குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 12வருடங்கள் ஆகின்றன. 

சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 30வருடங்கள் ஆகின்றன.

சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. 

அதுவே பிரபவ வருடம்.
இதுவே முதல் வருடம். 

இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன.

 ஒவ்வொரு ஆண்டின் பெயரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.

ஆண்டுகள் 60

1.பிரபவ 2.விபவ 3.சுக்கில
4.ப்ரமோதூத, 5. ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ 7. ஸ்ரீமுக 8.பவ
9.யுவ,10.தாது, 11.ஈசுவர
12.வெகுதான்ய, 13.ப்ரமாதி 
14.விக்கிரம,15.விஷு
16.சித்ரபானு,17.சுபானு
18.தாரண,19.பார்த்திப ,20.விய
21.ஸர்வஜித், 22.ஸர்வதாரி
23.விரோதி,24.விக்ருதி, 25.கர
26.நந்தன,27.விஜய, 28.ஜய
29.மன்மத, 30.துர்முகி,
31.ஹேவிளம்பி, 32.விளம்பி
33.விகாரி, 34.சார்வரி, 35.ப்லவ
36.சுபகிருது, 37.சோபக்கிருது
38.குரோதி, 39.விசுவாவசு
40.பராபவ, 41.ப்லவங்க,
42.கீலக, 43.சௌமிய
44.சாதாரண,45.விரோதிகிருது
46.பரிதாபி,47.ப்ரமாதீ,
48.ஆனந்த, 49.ராக்ஷஸ,50.நள
51.பிங்கள, 52.களயுக்தி,
53.சித்தார்த்தி, 54.ரௌத்ரி
55.துன்மதி, 56.துந்துபி
57.ருத்ரோத்காரி,58.ரக்தாக்ஷி
59.குரோதன, 60.அக்ஷய

தமிழ்மாதங்கள்

சூரியன்  ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் 30 நாட்கள் ஒரு மாதம் என கணக்கிடப்பட்டுள்ளது.

சூரியன்  எந்த ராசியில் என்று பிரவேசிக்கிறதோ அதுவே மாதத்தின் தொடக்க நாள். அந்த ராசியின் பெயரே அந்த மாதத்தின் பெயர்.

வீட்டில் பூஜைகள் செய்யும்போது ஸங்கல்பத்தில் நாம்  சொல்வது மாதத்தின் இந்தப் பெயர்களையே.. 

  நடைமுறையில் தமிழ் மாதங்களின் பெயர்கள்-
அந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரையே கொண்டதாக அமைந்துள்ளது.

மாதங்களின் பெயர்கள்

நடைமுறை  -     ஸங்கல்பம் 
===========       ===========
சித்திரை     -    மேஷ மாசம்
வைகாசி      -    ரிஷப மாசம்
ஆனி.            -    மிதுன மாசம்
ஆடி.               -    கடக மாசம்
ஆவணி.      -    சிம்ம மாசம்
புரட்டாசி      -    கன்னி மாசம்
ஐப்பசி.            - துலா மாசம்
கார்த்திகை -  விருச்சிக மாசம்
மார்கழி.         - தனுர் மாசம்
தை.               -    மகர மாசம்
மாசி.             -   கும்ப மாசம்
பங்குனி.      -    மீன மாசம்

எந்த மாதத்தில் பெளர்ணமி, அமாவாஸ்யை இல்லையோ அந்த மாதத்துக்கு விஷமாதம் என்று பெயர்.

எந்த மாதத்தில் இரண்டு பெளர்ணமி,   அல்லது இரண்டு அமாவாஸ்யை  வருகிறதோ அதற்கு மலமாதம் என்று பெயர்.

விஷ மாதத்திலும், மல மாதத்திலும் சுபகார்யங்கள் செய்யக்கூடாது.

 ஆனால் சித்திரை, வைகாசி, மாதங்களில் இவைகள்  ஏற்பட்டால்  அந்த இரண்டு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.

அயனங்கள் (Path)
----------------------------------
ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் (Half yearly paths) பிரிக்கப்பட்டுள்ளது. 

சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் ஆரம்பம். 

சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் போது தட்சிணாயனம் ஆரம்பம். 

தைமாதம் முதல் ஆனி மாதம் வரை 6 மாதங்கள் உத்தராயன காலம்.

இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம்.

 கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம் போன்றவை  இக்காலகட்டத்தில்  செய்வது
உத்தமம்.

ஆடி மாதம் முதல்  மார்கழி மாதம் வரை  6 மாதங்கள் தட்சிணாயன காலம். 

இக்காலகட்டத்தில் நல்ல காரியங்கள் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.

ருதுக்கள் (Season s)  - 6

ஒரு வருடம் 6 ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சித்திரை, வைகாசி - வஸந்த ருது

ஆனி, ஆடி, -   க்ரீஷ்ம ருது

ஆவணி, புரட்டாசி -  வர்ஷ ருது

ஐப்பசி, கார்த்திகை -  சரத் ருது

மார்கழி, தை  -  ஹேமந்த ருது

மாசி, பங்குனி -   சிசிர ருது

கிழமைகள் (days)  - 7

ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. 

சூரிய உதயத்திலிருந்து மறுநாள் சூர்ய உதயம்  வரை ஒரு நாள்.

சாயா கிரகங்கள் இரண்டு (ராகு, கேது) நீங்கலாக மீதமுள்ள ஏழு கிரகங்களின்  ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம்.
 
ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் சொல்லப்படும் 

நடைமுறை -   ஸங்கல்பம்   
*****      *****
 ஞாயிறு.   -  பானு வாஸரம்

திங்கள்.    -   இந்து வாஸரம்

செவ்வாய் -   பௌம வாஸரம்

புதன்.      -   ஸௌம்ய வாஸரம்

வியாழன்   -     குரு வாஸரம்

வெள்ளி      -     ப்ருகு வாஸரம்

சனி              -     ஸ்திர வாஸரம்

திதிகள் (Lunar day)  - 15
**********
சூரியன் இருக்கும் இடத்தில் இருநது 12 பாகைகள்(Degrees) சந்திரன் நடப்பினில் ஒரு திதியாகும்.

1. ப்ரதமை

 2. த்விதியை

 3. த்ருதியை

 4. சதுர்த்தி

 5. பஞ்சமி,

6. ஷஷ்டி

 7. ஸப்தமி

8. அஷ்டமி

9. நவமி

10. தசமி

11. ஏகாதசி

12. துவாதசி

13. த்ரயோதசி

14. சதுர்த்தி

15. பூர்ணிமா (அல்லது) அமாவாஸ்யை.

ஒரு மாதம்  இரண்டு பட்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

அமாவாஸ்யை அடுத்த பிரதமை முதல் பௌர்ணமி வரை  சுக்லபட்சம்.

 பௌர்ணமியை அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை கிருஷ்ணபட்சம்.

தமிழில் இதை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் கூறுஇவர்கள். 

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பவை பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களாகும்.

இவற்றில் திதி, வாரம், (வாஸரம்) ஆகிய  பற்றி  மேலே கூறப்பட்டுள்து.

இனி மற்ற மூன்றை பற்றி  அறிவோம்.

நட்சத்திரங்கள் - 27

வான் வட்டப்பாதையில் உள்ள நட்சத்திரங்கள் இருபத்தேழும் பன்னிரண்டு ராசிகளுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

நக்ஷத்திரங்கள் - 27 -  
*********

நடைமுறை  -   ஸங்கல்பம்   

அஸ்வதி       -  அஸ்வினி

பரணி            -  அபபரணீ

கார்த்திகை  -   க்ருத்திகா

ரோகிணி.   -  ரோகிணீ

மிருகசீர்ஷம்   - ம்ருகசிரோ

திருவாதிரை  -   ஆர்த்ரா

புனர்பூசம்.     -    புனர்வஸூ

பூசம்.                 -     புஷ்யம்

ஆயில்யம்     -    ஆஸ்லேஷா

மகம்                 -    மகா

பூரம்            -      பூர்வபல்குனி

உத்திரம் - உத்ரபல்குனி

ஹஸ்தம் - ஹஸ்த

சித்திரை - சித்ரா

சுவாதி - ஸ்வாதீ

விசாகம் - விசாகா

அனுஷம் - அனுராதா

கேட்டை - ஜ்யேஷ்டா

மூலம்  - மூலா

பூராடம் - பூர்வ ஆஷாடா

உத்திராடம் - உத்ர ஆஷாடா

திருவோணம் - ச்ரவண

அவிட்டம் - ஸ்ரவிஷ்டா

சதயம் - சதபிஷக்

பூரட்டாதி - பூர்வப்ரோஷ்டபதா

உத்திரட்டாதி - உத்ரப்ரோஷ்டபதா

ரேவதி - ரேவதி

ராசிகள் - 12

1. மேஷம் 2. ரிஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி
7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்

மேலே சொன்ன நக்ஷத்திரங்கள் இருபத்தி ஏழும் ஒவ்வொரு ராசிக்கும் 21/4 நக்ஷத்திரம் விதம் பங்கிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. 
ஆகவே, ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் அல்லது 2 1/4 நக்ஷத்திரங்கள் உண்டு.

யோகங்கள் - 27

1. விஷ்கம்பம்  2. ப்ரீதி
 3. ஆயுமான், 4.சௌபாக்யம்
5. சோபனம் 6. அதிகண்டம்
7.சுகர்மம், 8.த்ருதி,  9.சூலம்
10.கண்டம்,  11.வ்ருத்தி, 
12. துருவம்,13. வியாகாதம்
 14.ஹர்ஷணம்,  15.வஜ்ரம்
16.ஸித்தி ,17.வ்யதீபாதம்,
 18.வரியான், 19.பரீகம்,
 20.சிவம்,  21.ஸித்தம்
22. ஸாத்தியம்,  23.சுபம் 
24.சுப்ரம், 25. பராம்யம் 
26.மாஹேந்த்ரம் 27.வைத்ருதி
 
கரணங்கள் - 11

1. பவம்   -  சிங்கம்
2. பாலவம்   - புலி
3. கௌலவம்  -   பன்றி
4. தைதிலம்   - கழுகு
5. கரம்     - யானை
6. வணிஜை   - எருது
7. பத்ரம் -   கோழி
8. சகுனி -   காக்கை
9. சதுஷ்பாதம் -   நாய்
0. நாகவம் -   பாம்பு
11. கிமுஸ்துக்னம்   - புழு

இராகு காலம்

ஒவ்வொரு கிழமையிலும் இராகு காலம் எப்போது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வரிப்பாட்டு ஒன்று சொல்லுவார்கள். 

"தி"ருவிழா "ச"ந்தையில் "வெ"ளியில் "பு"குந்து "வி"ளையாட "செ"ல்வது "ஞா"யமா?"

கிழமை     =  இராகு காலம்

ஞாயிறு.      = 04.30 - 06.00
திங்கள்        = 07.30 - 09.00
செவ்வாய்  =  03.00 - 04.30
புதன்             = 12.00 - 01.30
வியாழன்   =  01.30 - 03.00
வெள்ளி      = 10.30 - 12.00
சனி.              = 09.00 - 10.30

எமகண்டம்

இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.

"வி"ழாவுக்கு "பு"திதாக "செ"ன்று "தி"ரும்பும் "ஞா"பகம் "ச"ற்றும் "வெ"றுக்காதே

கிழமை -    எமகண்டம் : பகல் 

ஞாயிறு :     12.00 - 01.30
திங்கள் :      10.30 - 12.00
செவ்வாய் : 09.00 - 10.30
புதன் :           07.30 - 09.00
வியாழன் :  06.00 - 07.30
வெள்ளி :     03.00 - 04.30
சனி :              01.30 - 03.00

கிழமை -  எமகண்டம் :இரவு 

ஞாயிறு :     06.00 - 07.30
திங்கள் :      03.00 - 04.30
செவ்வாய் : 01.30 - 03.00
புதன் :           12.00 - 01.30
வியாழன் :  10.30 - 12.00
வெள்ளி :     09.00 - 10.30
சனி :             07.30 - 09.00

இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை தவிர்க்க வேண்டும். 

குளிகை நேரம்

கிழமை     -  குளிகை  - பகல் 

ஞாயிறு =        03.00 - 04.30
திங்கள் =         01.30 - 03.00
செவ்வாய் =    12.00 - 01.30
புதன் =              10.30 - 12.00
வியாழன் =      09.00 - 10.30
வெள்ளி =         07.30 - 09.00
சனி =                  06.00 - 07.30

கிழமை     =   குளிகை- இரவு  

ஞாயிறு =      09.00 - 10.30
திங்கள் =        07.30 - 09.00
செவ்வாய் =   06.00 - 07.30
புதன் =             03.00 - 04.30
வியாழன் =     01.30 - 03.00
வெள்ளி =        12.00 - 01.30
சனி =                 10.30 - 12.00

குளிகை காலத்தில் அசுபச் செயல்களை தவிர்க்க வேண்டும்.

ராசிகள் -          Tamil Signs
நட்சத்திரங்கள் - Tamil Stars

மேஷம்.  -  Aries

அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய - 

ரிஷபம்    -   Taurus

கிருத்திகை 2ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2ஆம் பாதம் முடிய - 

மிதுனம்   -  Gemini

மிருகசிரீஷம் 3ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம்3ஆம் பாதம் முடிய - 

கடகம்   -   Cancer

புனர்பூசம் 4ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய - 

சிம்மம்    -  Leo

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய - 

கன்னி   - Virgo

உத்திரம் 2ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2ஆம் பாதம் முடிய - 

துலாம்.  -    Libra

சித்திரை 3ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3ஆம் பாதம் முடிய - 

விருச்சிகம்.   -Scorpio

விசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய -

தனுசு.  -   Sagittarius

முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் முடிய - 

மகரம்.  - Capricorn

உத்திராடம் 2ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம்2ஆம் பாதம் முடிய - 

கும்பம் - Aquarius

அவிட்டம் 3ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய - 

மீனம் - Pisces

பூரட்டாதி 4ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய -

( டயடர்டா ஆகியிருப்பீங்க.. ஒரு கப் காப்பி குடிச்சுட்டு, திரும்பவும் படியுங்க டைம் பாசாகும்)

No comments: