Thursday, July 9, 2020

பேச்சியம்மன்: இது பலரின் குல தெய்வம்.

பேச்சியம்மன்:
இது பலரின் குல தெய்வம்.

ஒரு ப்ரஸ்ணத்தில் மிக முக்கியமானது குலதெய்வ கிருபை இருக்கிறதா? என்பதை பார்ப்பதுதான்.

சில ஜோதிடர்கள் ஜாதகத்தை பார்த்தே உங்கள் குலதெய்வம் இதுதான் என சொல்கிறார்கள். ஆனால் அப்படி சொல்ல முடியும் என்பதை அறுதியிட்டு கூற இயலாது. 

சரி விஷயத்திற்கு வருவோம்.



குலதெய்வ விஷயங்களில் மிக முக்கியமாக கருத்துரைப்பது உத்தமம். தெரியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்வது உத்தமோத்தமம். ஒருவருக்கு குலதெய்வம் தெரியவில்லை என்றால்  குலதெய்வ விஷயங்களில் உங்கள் சொந்த ஊரில் இருக்கும் ஜோதிடர்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். முக்கியமாக நீங்கள் உங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ இருப்பவர்களாக இருந்தால் உங்கள் சொந்த ஊரில் இருக்கும் ஜோதிடரை முதலில் அணுகி உங்கள் குடும்பத்தின் முன்னோர்களை சொல்லி என்ன குலதெய்வம் என்பதை கண்டுபிடியுங்கள். 

அதன் பின் டீவி பிரபலம் - பத்திரிகை பிரபலம் - அகில உலக பிரபலம் ஆகியோரை அணுகுங்கள். முக்கியமாக அடுத்த மாநிலங்களில் இருக்கும் ஜோதிடரை அணுகாதீர்கள். 

ஏனென்றால் பேச்சியம்மன் என எடுத்துக் கொண்டாலே 16 வகையான பேச்சியம்மன் தமிழகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி பேச்சியம்மன் சொல்லியிருக்கிறார்கள். தனித்தனி வழிபாடு வேறு உண்டு. மந்திரங்கள் தனித்தனி உண்டு. படையல் வேறு வேறு. எனவே புரிந்து கொள்ளுங்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: