Saturday, June 27, 2026

என் வாழ்வின் முதல் ஹீரோ... என் முதல் குருநாதர்

 "என் வாழ்வின் முதல் ஹீரோ... என் முதல் குருநாதர்...

பெருங்குளம் வெங்கிடாஜல ஜோஸ்யர் @ கண்ணாமணி

- பரமபதிக்கும் வரை மாயக்கூத்தரையே சுவாசமாக கொண்டவர்
- பிறந்து 40-வது நாளிலிருந்து எங்களைத் தன் மகனாக வளர்த்து, வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் வழிகாட்டியவர்.
- பஞ்சாங்கம் வாசிப்பதிலிருந்து ஜோதிடத்தின் நுணுக்கங்கள் வரை எங்களுக்குக் கற்றுத் தந்த எங்கள் முதல் ஆசான்.
- கல்வியே மிகப் பெரிய செல்வம் என்று நம்பி, எத்தனை சிரமங்கள் வந்தாலும் எங்களை எம்.சி.ஏ. வரை படிக்க வைத்தவர்.
- அரசுப் பணியில் உயர்ந்த பதவியில் இருந்தும், நேர்மையை உயிராகக் காத்து வாழ்ந்த மனிதர்.

இன்று பெருங்குளம் வெங்கலாஜல ஜோதிடர் அவர்களின் 18-ஆம் ஆண்டு நினைவு நாளில், எங்கள் நன்றியையும் வணக்கத்தையும் கண்ணீருடன் சமர்ப்பிக்கிறோம்.

'குரு என்பது பாடம் மட்டும் சொல்லுபவர் அல்ல; வாழ்க்கையையே செதுக்குபவர்.'

எங்கள் வாழ்வை செதுக்கிய உங்களின் ஆசிகளும், நீங்கள் விதைத்த அறிவும், நேர்மையும் என்றென்றும் எங்களுடன் பயணிக்கும்.

உங்கள் நினைவு என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.

ஓம் சாந்தி.
🙏

அடியேன் ராமானுஜ தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42