சைக்கிள் - கடந்த தலைமுறையிடம் முக்கியமாக 70’s - 90's kids மனிதர்களிடம் ஓர் கனவு.
எப்படியாவது ஓர் சைக்கிள் வேண்டும் என்று பெற்றோரிடம் சண்டை போட்டவர்கள் பலர்.
1992ல் 7ம் வகுப்பு படிக்கும் போது சைக்கிள் வாங்கித் தந்தால்தான் பள்ளிக்கூடம் போவேன் என அடம்பிடித்து சைக்கிள் வாங்கினேன். ஒரு வழியாக ஜூனில் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் சைக்கிள் வந்த போது ஏதோ இந்த உலகத்தையே வாங்கியதாக ஓர் உணர்வு.
சைக்கிள் வந்த பின் அதை அலங்காரம் செய்வது அடுத்த வேலை. அதன் பின் சோடா மூடியில் உள் இருக்கும் அந்த ப்ளாஸ்டிக்கை போக்ஸ் கம்பியில் வைப்பது - பழைய டேப் கேஸட்டில் இருக்கும் ரோலை எடுத்து Handbarக்கு கொடுத்து சைக்கிளை வேகமாக ஓட்டும் போது சிறகடிக்கும் ஓர் உணர்வு - சனிக்கிழமைதோறும் நாம் எண்ணை தேய்த்து குளிக்கும் போது சைக்கிளுக்கும் தேங்காய் எண்ணை குளியல் செய்வது - பெருங்குளம் பத்திரகாளியம்மன் குளக்கரையில் சைக்கிளை குளிப்பாட்டியது - தினமும் பள்ளிக்கு செல்லும் போது கிராமங்களில் இருந்து நடந்து வருவோரில் யாரேனும் ஒருவருக்கு கண்டிப்பாக லிப்ட் கொடுப்பது - கிராம கதைகளை அசை போடுவது - செல்லும் வழியில் நட்டாத்தி கிராமத்தில் ஓய்வெடுத்து அதன் பின் அங்கிருக்கும் கேணியில் தண்ணீர் குடித்தது - கண்ணாண்டிவிளை சென்று அங்கிருக்கும் இனிப்பு கிணற்றில் தண்ணீர் குடிப்பது - 147 பஸ்ஸூக்கு இணையாக வேகமான சென்றது....... என ஏகப்பட்ட நினைவுகள்.
கடந்த தலைமுறையினருக்கு சைக்கிள் ஓர் உறவு - உணர்வு - பாசப்பிணைப்பு.
இன்று சைக்கிள் தினம்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com
No comments:
Post a Comment