Friday, January 13, 2023

எந்த தேவதை சும்மா விட்டாலும் அக்னி விட மாட்டார்

என்றைக்கும் பஞ்சபூதங்களுக்கு துரோகம் செய்யக்கூடாது. அதுவும் அக்னி என்பது முக்கியமானதாகும்.

அக்னிக்கு செய்யும் துரோகம் வம்சத்தையே நாசம் பண்ணும். நித்ய கர்மானுஷ்டானத்தில் இருக்கும் ஸமிதாதானம் - ஔபாஸனம் - அக்னி ஹோத்திரத்திற்கே மிக முக்கிய விதிகள் இருக்கிறது. 
 
இதில் கிரகப்ரவேசம் - காம்யார்த்த ஹோமங்கள் - கும்பாபிஷேகம் ஆகியவற்றிகெல்லாம் மிக தெளிவான ஆகமங்கள் இருக்கிறது. இன்றைய சூழலில் சிலர் அதை மதிப்பதில்லை. முகூர்த்த நாள் அல்லது கும்பாபிஷேக நாட்கள் குறிக்கும் போதெல்லாம் மிகப் பெரிதாக மெனக்கெடுவதில்லை. எளிதாக வைத்து விடுகிறார்கள். பஞ்சகம் எல்லாம் பார்ப்பதில்லை. சூப்பராக அக்னி பஞ்சகத்தில் வைத்து விடுகிறார்கள். அக்னி கார்யம் கொண்ட கும்பாபிஷேகத்திற்கு அக்னிக்கு தோஷத்தை கொடுக்கக் கூடிய அக்னி பஞ்சகத்திலேயே வைத்து விடுகிறார்கள். இந்த தவறு நிகழும் போது அது அந்த கோவிலை மட்டுமல்ல - அந்த கோவில் இருக்கும் கிராமத்தையும் - அரசாள்பவனையும் - கிராம மக்களையும் பாதிக்கும். 
 
இது நியதி - தர்மம்.
 

 
 
எந்த தேவதை சும்மா விட்டாலும் அக்னி விட மாட்டார். 
 
”சப்ததே அக்னி சப்த ஜிஹ்வா” - அக்னி பகவானின் ஏழு நாக்குகள்....
 
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
ramjothidar@gmail.com

No comments: