கிரகநிலை 18 10 2024
Thursday, October 17, 2024
Tuesday, April 9, 2024
Friday, March 29, 2024
ஹர்திக் பாண்டியா.....
எதிர்நீச்சல் - நாகேஷ் நடித்த ஒரு பழைய படம். அதில் ஒரு காட்சி வரும். நாகேஷ் - மனோரமா - சௌகார் ஜானகி மூவரும் பர்வதம் அம்மா மகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது சௌகார் கேட்பார் “அந்த பொன்னு என்ன அவ்வளவு அழகா? சினிமா ஸ்டார் மாதிரி இருப்பாளா?”. அதற்கு நாகேஷ் சொல்வார் “அழகா இருப்பான்னு சொன்னேன் அழகுபடுத்திக்குவான்னா சொன்னேன்!”.
இப்படித்தான் இருக்கிறது ஹர்திக் பாண்டியா செய்வது. ஹீரோவாக இருப்பது வேறு - ஹீரோவாக நடிப்பது வேறு. புரட்டாசி ஆயில்யத்தில் பிறந்துள்ள அவருக்கு தற்போது அஷ்டமத்து சனி நடக்கிறது. கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Wednesday, March 13, 2024
எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்?
ID: 202419
Tuesday, March 12, 2024
திருமணம் எப்போது?
பொருளாதார நிலைமை குறித்தும், கடன்கள் எப்போது தீரும் என்பது குறித்தும்.
Wednesday, March 6, 2024
குல தெய்வ வழிபாட்டை விட்டு விடாதீர்கள்
அவன் சொன்னான்
இவன் சொன்னான்னு
குல தெய்வ வழிபாட்டை விட்டு விடாதீர்கள்.
அதுவே என்றும் நம்மை காக்கும்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
எனது ஜாதகம் சுத்த ஜாதகமா
SD
Sunday, March 3, 2024
எனக்கு எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும். எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.
Name: AJ D O B : 29 / 03 / 1991, 4.20 AM, KUMBAKONAM. எனக்கு எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும். எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.
பதில்: பங்குனி மாதம் பூரம் நக்ஷத்ரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது ராகு தசை புதன் புத்தி நடக்கிறது. கும்ப லக்னத்தில் சதயம் சாரம் பெற்று இருக்கிறீர்கள். தற்போதைய நேரம் மிகுந்த அலைச்சலையும் விரையத்தையும் உண்டாக்கலாம். அலுவலக மேலாண்மை போன்ற வேலை உங்களுக்கு கிடைக்கும். அதே போல் கன்சல்டண்ட், ஏற்பாட்டாளர் போன்ற வேலைகளும் சிறப்பாக இருக்கும். திருமணம் 2025ல் நடக்கும். நல்ல வாழ்க்கை அமையும். தினசரி முன்னோர்கள் வழிபாடு செய்யவும். குலதெய்வத்தை பிடித்துக் கொள்ளவும்.
#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan
Saturday, March 2, 2024
அரசாங்க வேலைக்கு அல்லது நிரந்தர பணிக்கு வாய்ப்பு உள்ளதா
பெயர்: க.ஜெ
Sunday, February 25, 2024
குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்.
ஷாலினி
D.O.F. 12.10.1989
Tlme. 9.24.p.m
Birth place. Pattukkottai
திருமணமாகி 6 வருடமாகிறது. குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்.
பதில்:
நீங்கள் பிறந்தது வ்ருச்சிக லக்னம் - அனுஷம் 3ம் பாதம் சாரம். புரட்டாசி மாதம் சதய நக்ஷத்ரத்தில் பிறந்துள்ளீர்கள். தற்போது சனி தசை ராகு புத்தி நடக்கிறது. சனி பகவான் தைரிய சுகாதிபதியாக இருக்கிறார். அவர் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் சாரம் பெற்று சிம்மத்தில் அம்சம் பெற்றார். இந்த வருடம் சித்திரையிலிருந்து அடுத்த சித்திரைக்குள் நல்லபடியாக குழந்தை கிடைக்கும். பரிகாரம் ஏதும் தேவையில்லை.
குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய குறிப்புகள்:
குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய குறிப்புகள்:
⦁ எந்த நக்ஷத்ரமும் நல்ல நக்ஷத்ரம்தான்
⦁ எந்த ராசியும் நல்ல ராசிதான்
⦁ எந்த லக்னமும் நல்ல லக்னம்தான்
⦁ எந்த கிரகமும் நல்ல கிரகம்தான்
⦁ யோகங்களை பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமில்லை
⦁ கரிநாள் – தனிய நாள் – பஞ்சகம் – ராகு காலம் – எமகண்டம் – குளிகை என எதுவும் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
⦁ குழந்தை பிறந்தவுடன் ஜோதிடரிடம் ஆலோசனை செய்து பெயர் வைக்கவும். முடிந்தவரை வீட்டிலுள்ள பெரியவர்களின் பெயரையோ அல்லது குல தெய்வத்தின் பெயரையோ வைக்கவும்.
⦁ குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் வாங்குவது அவசியம்
⦁ குழந்தை பிறந்தவுடன் ஏதேனும் தானம் செய்யவும்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
குரு பரம்பரை ஜோதிடம்
+91 7845 11 9542
Monday, February 19, 2024
கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி சீமையில் சுற்றிய போது சில தகவல்கள்
கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி சீமையில் சுற்றிய போது சில தகவல்கள்:
1. இன்னும் பல இடங்களில் சாலை வசதி சரியாகவில்லை.
2. பல குடும்பத்தினர் இன்னும் வெள்ளத்தின் கஷ்டங்களில் இருந்து வெளியே வரவில்லை.
3. பெரும்பாலான பொருட்கள் அனைத்துமே தொலைத்திருக்கிறார்கள்.
4. பலர் தொழிலை இழுத்து மூடி விட்டனர்.
5. கிட்டத்தட்ட 15 வருடங்கள் பின்னோக்கி இருப்பதை பார்க்க முடிகிறது.
6. பலருக்கு அரசு கொடுத்த 6000 நஷ்ட ஈடு பற்றவில்லை.
7. பலர் வாகனங்களை இழந்திருக்கிறார்கள்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Wednesday, February 14, 2024
அரசு வேலை கிடைக்குமா? குடும்பத்துடன் இணைந்து வாழ்வேனா?
கேள்வி:
பிறந்த தேதி: 3-செப்-1982; நேரம்: 2.00 பகல்; ஊர்: திருச்சி
அரசு வேலை கிடைக்குமா? குடும்பத்துடன் இணைந்து வாழ்வேனா?
பதில்:
நீங்கள் பிறந்தது ஆவணி மாதம் 18ம் தேதி. உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு தனுசு லக்னம் - மூலம் பாத சாரம். கும்ப ராசி - சச்தய நட்சத்திரம். சனி பகவான் தசை - குரு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. சனி பகவான் உங்கள் ஜாதகப்படி குடும்ப ஸ்தானம் மற்றும் தைரிய ஸ்தானத்திற்குரியவர். அவர் பத்தாம் வீட்டில் புதன் பகவானுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். மேலும் அது அவருக்கு நட்பு வீடாகும். அரசு சம்பந்தப்பட்ட விஷய்ங்களுக்கு அதிபதி சூரிய பகவான். அவர் ஆட்சி நிலையில் இருக்கிறார். தொழில் ஸ்தானம் பத்தாம் வீடு. தொழில் காரகன் சனி பகவான். இரண்டும் இணைந்தே உங்கள் ஜாதகத்தில் இருப்பதால் நீங்கள் முயற்சி எடுத்தால் நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும். ஜூன் - 06 -2024க்குள் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. பயனபடுத்திக் கொள்ளுங்கள். மேலும் குடும்பாதிபதியும் சனி பகவானாகவே இருப்பதால் நல்லதே நடக்கும். முன்னோர்கள் வழிபாடு, சிவ வழிபாடு, மேலும் சித்தர்கள் வழிபாடு உங்கள் முயற்சிக்கு கைகொடுக்கும்.
#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan
Tuesday, February 13, 2024
என்றைக்கும் பஞ்சபூதங்களுக்கு துரோகம் செய்யக்கூடாது.
என்றைக்கும் பஞ்சபூதங்களுக்கு துரோகம் செய்யக்கூடாது. அதுவும் அக்னி என்பது முக்கியமானதாகும்.
அக்னிக்கு செய்யும் துரோகம் வம்சத்தையே நாசம் பண்ணும். நித்ய கர்மானுஷ்டானத்தில் இருக்கும் ஸமிதாதானம் - ஔபாஸனம் - அக்னி ஹோத்திரத்திற்கே மிக முக்கிய விதிகள் இருக்கிறது.
இதில் கிரகப்ரவேசம் - காம்யார்த்த ஹோமங்கள் - கும்பாபிஷேகம் ஆகியவற்றிகெல்லாம் மிக தெளிவான ஆகமங்கள் இருக்கிறது. இன்றைய சூழலில் சிலர் அதை மதிப்பதில்லை. முகூர்த்த நாள் அல்லது கும்பாபிஷேக நாட்கள் குறிக்கும் போதெல்லாம் மிகப் பெரிதாக மெனக்கெடுவதில்லை. எளிதாக வைத்து விடுகிறார்கள். பஞ்சகம் எல்லாம் பார்ப்பதில்லை. சூப்பராக அக்னி பஞ்சகத்தில் வைத்து விடுகிறார்கள். அக்னி கார்யம் கொண்ட கும்பாபிஷேகத்திற்கு அக்னிக்கு தோஷத்தை கொடுக்கக் கூடிய அக்னி பஞ்சகத்திலேயே வைத்து விடுகிறார்கள். இந்த தவறு நிகழும் போது அது அந்த கோவிலை மட்டுமல்ல - அந்த கோவில் இருக்கும் கிராமத்தையும் - அரசாள்பவனையும் - கிராம மக்களையும் பாதிக்கும்.
இது நியதி - தர்மம்.
எந்த தேவதை சும்மா விட்டாலும் அக்னி விட மாட்டார்.
”சப்ததே அக்னி சப்த ஜிஹ்வா” - அக்னி பகவானின் ஏழு நாக்குகள்....
#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
ramjothidar@gmail.com
Friday, February 2, 2024
நடிகர் விஜயின் கட்சிப் பெயர் "தமிழக வெற்றி கழகம்"
நடிகர் விஜயின் கட்சிப் பெயர் "தமிழக வெற்றி கழகம்"