அனைவருக்கும் வணக்கம்.
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கட்டுரை இடுகிறேன்.
பாவ ஸாம்மியம் என்றால் என்ன? ஜாதகத்தில் பாவம் என்றால் என்ன? உண்மையிலேயே பாவம் என்ற ஒன்று உள்ளதா?
செவ்வாய் தோஷம், நாக தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம், போன்ற சொற்றொடர்களை பலர் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனினும் நான் அடிப்படையிலிருந்தே ஆரம்பிக்கிறேன்.
உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் பாவக சக்கரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதில் ல அல்லது லக்னம் அல்லது Lagnam or Ascendant என்று போட்டிருக்கும்.
அதுதான் உங்கள் ஜாதகத்தில் முதல் பாவம்(Paavam அல்ல Bhavam)
உங்கள் லக்னம் எந்த இடத்தில் இருக்கிறதோ அதை மேற்கண்ட டேபிளில் பொருத்திப் பார்த்து உங்கள் லக்னத்தை கண்பிடித்து விடுங்கள்..
உங்கள் லக்னம் என்ன?
தொடரும்......
No comments:
Post a Comment