கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4 – ம் தேதி தொடங்கி 29 - ம் தேதி வரை நீடிக்கவுள்ளது.
அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் வரை காணப்படும் என்பதால் அந்த நாட்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய் தாக்காத வகையில் குளிர்ச்சியான பொருட்களை உண்ணவேண்டும். இதில் முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மிதமாகவும் பின் 7 நாட்கள் கடுமையாகவும், கடைசி 7 நாட்கள் உஷ்ணம் தணிந்தும் காணப்படும்.
இது தோஷகாலமாக கருதப்படுவதால் ஏராளமானோர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடுகின்றனர்.
சூரிய பகவான்
சித்திரை மாதம் முதல் மேஷராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். எனவே மேஷ ராசியில் உள்ள அசுவினி, பரணி, கார்த்திகை போன்ற நட்சத்திரங்கள் அதற்குண்டான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டது. சித்திரை முதல்நாளில் அசுவினியில் நுழையும் சூரியன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சார காலம் முடிந்து கார்த்திகையில் தொடங்கும் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது.
சந்திரனும், பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதனால் அக்னி நட்சத்திரத்தில்
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காரணம் என்கிறது விஞ்ஞானம். ஆனால் புராணத்தில் அதற்கு சுவையான கதை ஒன்று உண்டு.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை
கார்த்திகை நட்சத்திரத்திற்குரியவர் அக்னிபகவான். இவர் நெருப்பு ரூபமாய்
காணப்படுவதால், இதனையே அக்னி நட்சத்திரம் என்கின்றனர். முன்னொரு காலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவிடாது நடைபெற்ற சுவேதகி யாகத்தில் ஊற்றிய நெய்யினை உண்ட அக்னி தேவனுக்கு உடல் நலிவு ஏற்பட்டது. அதற்கு மருந்தாக காண்டவ காட்டை அழித்து உண்பதற்கு அக்னி தேவன் புறப்பாட்டார்.
இதனை அறிந்து காண்டவ காட்டில் வசித்து வந்த உயிரினங்களும், தாவரங்களும், தங்களை காக்க வேண்டும் என்று வருணபகவானிடம் வேண்டிக் கொண்டனர். வருணபகவானும், விடாது மழை பொழியவே அக்னியால் காட்டை எரிக்க முடியாமல் போனது.
காட்டை எரிக்க தனக்கு உதவுமாறு மகாவிஷ்ணுவிடம் அக்னிதேவன் முறையிட்டதால் அவர், அர்ஜுனனை துணைக்கு அனுப்பி வைத்தார். அர்ஜுனனும், தனது அம்புகளினால் காட்டை சுற்றி அரண் எழுப்பி தீ அணையாமல் எரியுமாறு பார்த்துக்கொண்டார். அப்போது அக்னிதேவனுக்கு திருமால் ஒரு நிபந்தனை விதித்தார்.
21 நாட்கள் மட்டுமே காண்டவ காட்டை எரிக்க வேண்டும் என்பதே அது. இதனை ஏற்று அக்னி தேவனும் 21 நாட்கள் மட்டுமே காட்டை எரித்துவிட்டு கிளம்பினார். இந்த நாளே அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது என்கின்றன புராணங்கள்..
அக்னி ரூபானை வழிபடுவோம்
அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அக்னி ரூபாமாய் இருக்கும்
சிவபெருமானையும், தீப்பொறியில் உதித்த முருகனையும், மீனாட்சி அம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவனுக்கும் அபிஷேகம் செய்து குளிர்விக்க வேண்டும் என்கின்றன புராணங்கள்.

No comments:
Post a Comment