Wednesday, June 29, 2011

இன்றைய பஞ்சாங்கம் (30-06-2011)


முக்கிய அறிவிப்பு: ஒரு அன்பர் கேட்டிருந்தார். ஐயா தங்களது ஜோதிடக் குறிப்பை நான் எனது புத்தக பதிப்பில் போட்டுக் கொள்ளலாமா? என்று. அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே நான் சொல்ல நினைப்பது, நீங்கள் தாராளமாக இதை பயன்படுத்தி கொள்ளலாம். மக்கள் இதன்மூலம் விழிப்படைய வேண்டும் என்பதே எமது அவா.


[ என்ன ஐயா திடீர் திடீரென காணாமல் போய் விடுகிறீர்களே என ஏகப்பட்ட மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள். சொந்த விஷயமாக செல்ல வேண்டி இருந்தது.  புதிய பணியில் வேறு சேர்ந்தாகி விட்டது. அதனால் ஏற்படும் பணிச்சுமை வேறு. ஆதலால் எம்மால் எழுத இயலவில்லை. இனி இதுபோல் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன் ]
In Tamil - பஞ்சாங்கம் - 30-06-2011

வருஷத்தின் பெயர் : கர வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 15ம் தியதி; ஆங்கிலம் ஜூன் 30 2011
அயணம் : உத்தராயணம்
ரிது : கிரீஷ்ம ரிது
கிழமை : வியாழக்கிழமை
திதி :
சதுர்த்தசி  மாலை மணி 03.10 வரை பின் அமாவாஸ்யை
நக்ஷத்திரம் :
மிருகசீர்ஷம் நக்ஷத்ரம் இரவு மணி 11.40 வரை பின் புனர்பூசம்
யோகம் :
கண்  யோகம் நாழி 10.52
கரணம் :
சகு கரணம் நாழி 22.56
சூரிய உதயம் :
காலை மணி 6.04
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.35
அஹசு :
நாழிகை 31.33
லக்ன இருப்பு :
மிதுனம் -  நாழி 02.53  (காலை மணி 07.31 வரை)
இராகு காலம் :
மதியம்  01.34 முதல் 03.04 வரை
எமகண்டம் :
காலை 06.04 முதல் 07.34 வரை
சூலம் :
மேற்கு


o வியா செ  கே சூரி புத சுக் 
o
இன்றைய கிரஹநிலை
o
o o
o ரா o சனி


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
[1] போதாயன அமாவாஸ்யை.
[2] சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: அனுஷம், கேட்டை
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 3
சந்திரன் மிதுனம் (13.13 நாழிகைக்குப் பிறகு) -
செவ்வாய் உரோஹினி 2
புதன் பூசம் 2
குரு அசுபதி 4
சுக்ரன் மிருகசீரிஷம் 3
சனி வக்ர நிவர்த்தி -
ராகு கேட்டை 4
கேது மிருகசீரிஷம் 2


இன்றைய ஜோதிடக்குறிப்பு:
கேள்வி: ஒரு வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்றி வழிபடலாமா? - பாகம் 01
பதில்: தாராளமாக ஏற்றலாம். இரண்டுமே ஒரே வகை விளக்குகளாக(உதாரணம்: குத்து விளக்கு, காமாக்ஷி விளக்கு) இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. இரண்டு விளக்குகள் தாராளமாக ஏற்றலாம். ஒருவர் என்னிடம் கேட்டார், “ஐயா, விளக்கு ஏற்றுவதற்கு தனியாக ஏதேனும் எண்ணை வாங்க வேண்டுமா?” என்று. என்னுடைய பதில் தனியாக கடையில் விற்கும் எண்ணையைத்தான் உபயோகிக்க வேண்டும் என்பது இல்லை. சுத்தமான தூய நல்லெண்ணையோ அல்லது நெய்யோ எதிலும் விளக்கு ஏற்றலாம். என்னிடம் கேட்டால் ந.எண்ணையில் ஏற்றுவது சிறந்தது என்பேன்.  விளக்கு ஏற்றும் போது அவரவர்க்கு பிடித்தமான மந்திரங்கள், பாசுரங்களை சொல்லி விளக்கு ஏற்றலாம்.
தொடரும்.....
------------------------------------------------
இனி வரும் நாட்களில் வரப்போகும் கேள்விகள்:
[1] ஸ்ரார்த்த விதிமுறைகளை கூறவும் - திரு.பஞ்சாபகேசன், சென்னை
[2] ஒரே வீட்டில் இரண்டு சிவலிங்கங்கள், இரண்டு சாளக்கிராமங்களை வைத்து வழிபடலாமா? - திரு.மூர்த்தி, நெல்லை.
[3] அதிர்ஷ்டக்கல் அணிந்தால் பலன் தருமா? - செல்வி.ஹேமா, சென்னை
[4] எனக்கு ஜோதிடப்படி எந்த திசையில் வீட்டின் வாசல் இருக்க வேண்டும்? - திரு.மகேந்திரன், படப்பை
[5] எனது பெயரை எண் கணிதப்படி மாற்றியமைக்கலாமா? - திரு.ஜான், திருச்சி.
------------------------------------
இன்றைய அறிவிப்பு:
[1] தங்களுடைய ஜோதிடம், ஆன்மீகம் சார்ந்த கேள்விகளை எனக்கு தனி மடலில் அனுப்பி வைக்கவும்.
[2] தாங்கள் பகுதியில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள், விழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை எனக்கு தனி மடலில் அனுப்புங்கள்.
[3] ஜோதிடம் சம்பந்தப்பட்ட மடல்கள் தங்கள் நண்பர்களுக்கும் போய் சேர்வதற்கு தங்களுடைய நண்பர்களின் இமெயில் முகவரிகளையும் எனக்கு அனுப்பலாம்.
[4] தங்களுக்கு இன்னும் நக்ஷத்ரம் தெரியவில்லை, ஜாதகம் கணிக்கவில்லை என்பவர்கள் எனக்கு தனி மடலிடவும். அவர்களுக்கு இலவசமாக ஜாதகம் கணித்து மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
[5] தங்களுடைய மேலான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது.

No comments: