மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம். உழைப்பால் உயரும் மேஷ ராசி வாசகர்களே ராசியில் சுக்கிரன், குரு, இரண்டில் கேது, ஐந்தில் செவ்வாய், ஏழில் ராகு, எட்டில் ராகு, பதினொன்றில் சூரியன், பன்னிரெண்டில் புதனுமாக கிரக நாயகர்களின் சுழற்சி அமைந்துள்ளது. மார்ச் 12ம் தியதி 11ம் இடத்திற்கு வக்ரகதியில் புதனும், 14ம் தியதி விரையஸ்தானத்திற்கு சூரியனும் பெயர்ச்சியாகிறார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். ஐந்தில் அமைந்துள்ள செவ்வாயால் சுகங்களும், சந்தோஷங்களும் பெருகும். நிலம், வீடு போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தையின் ஆதரவும் உண்டு. இரண்டு, ஏழுக்குரிய சுக்கிரன் ஒன்றில் அமைந்துள்ளதால் வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். மூன்றாம் வீட்டுக்குரியவர் பன்னிரெண்டில் உலவுவதால் இளைய சகோதரர் சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. கலைத்துறையினருக்கு மிக சிறந்த காலகட்டமிது. வாய்ப்புகள் தேடி வரும். அரசியலில் குறுக்கு வழிகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பான தேர்ச்சியினைக் காண்பார்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 14, 15
பரிகாரம்: செவ்வாய்க் கிழமை தோறும் அம்பாளுக்கு இளநீர், பன்னீர் அபிஷேகங்கள் செய்யலாம். ஏதேனும் ஒரு அம்பாள் கோவிலுக்கு நல்லெண்ணை சமர்ப்பிக்கவும்.
No comments:
Post a Comment