பொதுவாக தமிழர்களிடம் உள்ள பழக்கம்.
தமிழ் புத்தாண்டு அன்று
காலையில் ஊர் பொது கோவிலுக்கு செல்வார்கள். கோவிலில் மக்கள் கூட்டத்தில்
நடுவில் அமர்ந்து அந்த ஊருக்குரிய ஜோதிடர் (ஸ்தல ஜோதிடர்) அந்த வருட
பஞ்சாங்கத்தில் உள்ள முக்கியமான விஷயங்களை சத்தமாக வாசிப்பார்.
குழுமியிருக்கிற மக்கள் தங்களுக்குரிய சந்தேகங்களை கேட்க அவற்றை ஜோதிடர்
நிவர்த்தி செய்து வைப்பார். உதாரணமாக இவ்வருடம் மழை எப்படி இருக்கும், எந்த
வகையான பயிர்களை பயிர் செய்யலாம், கால்நடைகள் ஜீவராசிகள் எவ்வாறு
இருக்கும் போன்ற கேள்விகள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் பஞ்சாங்க படணம்.
இந்த நிகழ்ச்சி எமது பாட்டனார் காலத்தில் நடந்து வந்திருக்கிறது. 1960 வருடத்திற்குப் பிறகு இந்நிகழ்ச்சி ஒரு சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது அவ்வளவே. ஆனால் எனது குருநாதர் பிரும்மஸ்ரீ இளைய குப்பு ஜோஸ்யர் பெருங்குளம் வெங்கடாசல ஜோஸ்யர் இருக்கும் காலம் வரை அவர் இடைவிடாமல் செய்து வந்தார். (2008ம் ஆண்டு வரை). அதன் பின் நான் இப்போது செய்து வருகிறேன். கடந்த வருடம் மட்டும் பஞ்சாங்க சிரவணம் 4000 பேருக்கு மேல் கேட்கப்பட்டிருக்கிறது. 250 பேர் Download செய்திருக்கிறார்கள்.
பஞ்சாங்க சிரவண பலன்:
இதை தமிழ் புத்தாண்டு அன்று வீட்டில் ஒலிக்க செய்தாலோ அல்லது கேட்டாலோ அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
ஓம் ஸ்ரீநவக்ரஹ தேவதாப்யோ நம
வரப்போகும் மன்மத வருட பஞ்சாங்க சிரவணம்:
http://bit.ly/1Fg1Zli
Download link: http://bit.ly/1acWFGF

No comments:
Post a Comment