Saturday, June 6, 2020

ஜோதிட உண்மை - 10: இரண்டு குல தெய்வம்

ஜோதிட உண்மை - 10:
செய்தி:
ஒரு ஜோதிடரின் பதிவு: ரிஷப லக்னத்திற்கு இரண்டு குல தெய்வம் வரும்.

உண்மை:
இன்றைய சூழ்நிலையில் இந்த குலதெய்வம் பிரச்சனை பெரிய விஷயம். எம்முடைய பணிவான தயவான வேண்டுகோள். தயவுசெய்து சில ஜோதிட நண்பர்கள் மனிதர்களுக்கு பலன் சொல்வதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. அதை மீறி தெய்வம் சம்பந்தமான விஷயங்களில் நாம் தலையிடும் போது பல பிரச்சனைகள் வரலாம். உதாரணமாக சமீபத்தில் ரிஷப லக்னத்தில் பிறந்த ஒருவர் - ஒரு ஜோதிடரிடம் பலன் கேட்பதற்காக சென்றிருக்கிறார். அந்த ஜோதிடர் இவர் ஜாதகத்தைப் பார்த்து உங்களுக்கு இரண்டு குல தெய்வங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் தேடு தேடென்று தேடி கடைசியில் நொந்து போய் மீண்டும் ஜோதிடரை பார்க்க வந்திருக்கிறார். அதன் பிறகு நடந்தது வேறு விஷயம். ஒருவேளை மேஷம்னா ஒன்னு - ரிஷபம்னா இரண்டுன்னு சொல்லிருக்கார் போல.



ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்பது ஒன்றுதான் வரும். காவல் தெய்வம் - படை தெய்வம் - கொடி தெய்வம் - வீட்டு தெய்வம் - நில தெய்வம் என்று வேறு சிலவும் உண்டு. இதை தெரியாமல் சிலர் தானும் குழம்பி போய் மற்றவர்களையும் குழப்புவது மனதிற்கு பாரமாக உள்ளது. இதைத் தவிர கிராம தெய்வம் வேறு உண்டு. இதைத் தவிர இஷ்ட தெய்வம் என்று ஒன்று உண்டு.

உதாரணமாக ஒருவருக்கு குலதெய்வம் அய்யனார் என வைத்துக் கொள்வோம். அவரின் காவல் தெய்வம் முனியாண்டி. படை தெய்வம் கருப்பண்ணசாமி. கொடி தெய்வம் - முன்னடி சுடலை சாமி. வீட்டு தெய்வம் - தென்னைமரத்தடியான் சாமி. நில தெய்வம் - பெரும்பாச்சி அம்மன். இப்படி இருக்கிறது. இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு ஸாந்நித்யம் உள்ளது. ஒவ்வொரு விழா உண்டு. 

முதலில் தமிழகத்தில் உள்ள குடிமக்கள் கோவில்களை படிக்கவும்.

நன்றி.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: