2023 - புத்தாண்டு பகுதி 01
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு - 17ம் தேதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு - ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்லபக்ஷ தசமியும் - அஸ்வினி நக்ஷத்ரமும் - ஸிவ நாமயோகமும் - கௌலவ கரணமும் - மேஷ ராசியில் - ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில் - கன்னியா லக்னத்தில் - ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35க்கு - நள்ளிரவு 12.00க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.
திசா இருப்பு கேது திசை 03 வருஷம் 06 மாதம் 21 நாட்கள்.
வருடம் பிறக்கும் போது கிரகங்களுடைய பாதசாரங்கள்
லக்னம் - ஹஸ்தம் 2ல் - சந்திரன் சாரம்
சூரியன் - பூராடம் 1ல் - சுக்கிர சாரம்
சந்திரன் - அஸ்வினி 2ல் - கேது சாரம்
செவ்வாய்(வ) - ரோகினி 3ல் - சந்திர சாரம்
புதன்(வ) - மூலம் 3ல் - கேது சாரம்
குரு - உத்திரட்டாதி 3ல் - சுய சாரம்
சுக்கிரன் - உத்திராடம் 2ல் - சூர்ய சாரம்
சனி - திருவோணம் 4ல் - சந்திர சாரம்
ராகு - பரணி 3ல் - சுக்கிரன் சாரம்
கேது - விசாகம் 1ல் - குரு சாரம்
No comments:
Post a Comment