Thursday, March 3, 2011

சிவராத்திரி பெருவிழா

மஹா சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு யாகங்கள், பூஜைகள் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் சார்பில் அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்பாள் ஸமேத ஸ்ரீ திருவழுதீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு இலவசமாக சிறப்பு அர்ச்ச்னை ஆராதனைகள் செய்யப்பட்டன.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரமேஷ் குருக்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட குருக்கள் ஒன்று கூடி லட்சார்ச்சனை நடந்தது. மாலை 6 மணிக்கு ராஜகோபுரம் எதிரில், 108 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் அருணாசலேஸ்வரரை போற்றி இசை வழிபாடு நடத்தினர். 24ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவில் வளாகம் முழுவதும் வண்ணம் கலந்த உப்புகளால் பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டு ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Wednesday, March 2, 2011

சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் நடைதிறப்பு

மாத பூஜை மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நிகழ்ச்சிகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 9ம் தேதி திறக்கப்படும். வரும் 19ம் தேதி நடை பெற உள்ள உத்திர நிகழ்ச்சிக்காக 10ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும்.கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜை மற்றும் உற்சவங்களுக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அதே போல், பங்குனி மாத பூஜைகளுக்காக வரும் 9ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார்.அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் ஏதுமிருக்காது. மறு நாள் (10ம் தேதி) அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். தொடர்ந்து பங்குனி உத்திர வைபவத்திற்காக கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடை பெறும்.




வரும் 19ம்தேதி பங்குனி உத்திரம் மற்றும் ஆராட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.கோவிலில் சிறப்பு பூஜைகளான களபாபிஷேகம், படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகளும் நடைபெறும். பங்குனி உத்திர வைபவம் மற்றும் மாத பூஜைகள் முடிவடைந்து 19ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும்.

kuppuastro.in துவக்க விழா

அன்பு கொண்ட அனைவருக்கும் வணக்கம்.

எனது நீண்ண்ண்ண்ண்ட நாளைய விருப்பமான kuppuastro இணையதளம் கடந்த ஞாயிறன்று துவக்கப்பட்டது. ப்ரும்மஸ்ரீ குப்பு ஜோஸ்ரவர்கள் எனது முப்பாட்டனார் ஆவார்(அதாவது எனது தாத்தாவின் தகப்பனார்). அவரது பெயரில் ஒரு இணையதளம் ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. அது இப்போதுதான் பகவானின் கிருபையால் துவக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். அதனுடைய Updates வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அமாவாசை முதல் செயல்பட துவங்கும்.

ஜோதிடர் தேதியூர்.ஸ்ரீ.ராமன் அவர்கள், ஸ்ரீ.வாஸன்(ஆசிரியர், பிராமின் டுடே) அவர்கள் முன்னிலையில் எனது இணையதளத்தை தொடங்கி வைத்தார்.






முதலில் காலஞ்செனற எனது வளர்ப்பு பெற்றோர்களுக்கும்(ப்ரும்மஸ்ரீ வெங்கிடாஜலம் & ப்ரும்மஸ்ரீ கோமதி அம்மாள்), பின் எனது பெற்றோர்களுக்கும் (ஸ்ரீ சுப்பிரமணியன் & ஸ்ரீமதி உமா) இந்த நேரத்தில் நமஸ்காரம் செய்கின்றேன். எனது ஆதிகுரு திரு.குப்பு ஜோஸ்ரவர்களுக்கும், கருங்குளம் ப்ரும்மஸ்ரீ அனந்தாச்சாரியார் அவர்களுக்கும், பொள்ளாச்சி ஸ்ரீ மோகன் அவர்களுக்கும், பாலக்காடு ஜோதிட விபூஷணம் ஸ்ரீ மஹாதேவய்யர் அவர்களுக்கும், அம்மன் அருள் வாக்கு சித்தர் ஸ்ரீ.குருநாதன்(அம்பி அப்பா) சித்தப்பா அவர்களுக்கும், வாழும் ஞானி ஸ்ரீ சுந்தராஜ சித்தப்பா அவர்களுக்கும் என்னுடைய பணிவான நமஸ்காரங்கள். இந்த இணையதளத்தை தொடங்கி வைத்த ஜோதிடர் தேதியூர்.ஸ்ரீ.ராமன் அவர்கள், ஸ்ரீ.வாஸன்(ஆசிரியர், பிராமின் டுடே)அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்த இணையதளம் தொடங்குவதற்கு காரணமாக எனது நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

அவர்களில் சிலர்:
[1] ஸ்ரீ ரோமிங் ராமன் அவர்கள்
[2] ஸ்ரீ இட்லிவடை அவர்கள் (என்னை இணையத்தில் அறிமுகப்படுத்தியவர்)
[3] ஸ்ரீ நிலாரசிகன் (எனக்கு இணையத்தை அறிமுகப்படுத்தியவர்)
[4] ஸ்ரீ மதி விஜயராணி அவர்கள் (எனக்காக இணையத்தில் kuppuastro.in Domainஐ புக் செய்தவர்)
[5] எனது சகோதரர் ஸ்ரீ நாகராஜன் அவர்கள்
[6] எனது அண்ணா நாக்பூர் ஸ்ரீ தர்மபிரபாகர் அவர்கள்
[7] எனது இனிய நண்பர் ஸ்ரீ சுரேஷ்குமார் அவர்கள்
[8] ஸ்ரீ பாண்டுரங்கன் சுரேஷ், பிரமிட் பாண்டுரங்கா டிரஸ்ட், சென்னை
[9] எனது அன்புத்தங்கை சௌ.சார்மிலி அவர்கள்
[10] எனது தோழி சௌ.செல்வி அவர்கள்
[11] எனது அண்ணா வேளச்சேரி ஸ்ரீ. ஜா.ஸ்ரீனிவாசன் & ஸ்ரீ மதி தம்பதியினர்
[12] எனது அண்ணா திருவான்மியூர் ஸ்ரீ. ஸ்ரீதர் & ஸ்ரீமதி. இந்துமதி தம்பதியினர்
[13]  எனது அண்ணா அம்பத்தூர் ஸ்ரீ.வாசு அவர்கள்
[14] அன்பின் அம்மா ஸ்ரீமதி.ரத்னமாலா, கோயம்புத்தூர்


சில நண்பர்களது பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அவர்களுக்கும் எனது மனமர்ந்த நன்றி.

இந்த இணையத்தில் செய்ய திட்டமிட்டிருப்பவை:
[1] பஞ்சாங்கம்
[2] ராசிபலன்கள்
[3] திருமண பொருத்தம்
[4] நியுமராலஜி
[5] ஆன்மீக ஸ்தலங்கள் பற்றிய விபரங்கள், புகைப்படங்கள்
[6] ஆன்மீக பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகள், பேட்டிகள், கட்டுரைகள்
[7] ஜோதிடத்தில், ஆன்மீகத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை அகற்றுதல் பற்றிய கட்டுரைகள்
[8] எளிய பரிகார மந்திரங்கள் - ஒலி வடிவில்
[9] சேவைகள் பற்றிய விபரங்கள்

மற்றும் பல.....

நண்பர்களே என்னுடைய ஒரே வேண்டுகோள் தயவுகூர்ந்து தாங்கள் பயனடைந்தது மட்டுமல்லாமல் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு என்னுடைய இணையதளத்தை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

அறிவிப்பு

அனைவருக்கும் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் வழக்கம் போல் சிவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது. அதற்கு ஸங்கல்பம் செய்ய விருப்பமுடையவர்கள் தங்கள் கோத்திரம், பெயர், நக்ஷத்ரம், ராசி, லக்னம், வேண்டுதல்(திருமணம், வேலை, குழந்தை Etc) போன்றவற்றை எனக்கு மெயில் செய்யலாம்.

குறிப்புகள்:
[1] இது முற்றிலும் இலவச சேவை.
[2] ஒரு குடும்பத்திற்கு 5 பெயர்கள் மட்டுமே சேர்க்கப்படும்.
[3] நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் நடைபெற்ற சனிப் பெயர்ச்சி மஹா யாகம், குருப் பெயர்ச்சி யாகம், புரட்டாசி சனிக்கிழமை துவாதச ஸகஸ்ரநாம பாராயணம், நவராத்திரி போன்றவற்றில் கலந்து கொண்டு பெயர் பதிவு செய்தவர்களுக்கு இது முற்றிலும் இலவசம்.
[4] நீங்கள் கொடுக்கும் பெயர்கள் 4 காலங்களிலும் ஸங்கல்பம் செய்யப்படும்.
[5] இது அனைத்து மக்களுக்கும் உரிய சேவை.

Tuesday, March 1, 2011

கிழக்கு மொட்டை மாடி

கிழக்கு மொட்டை மாடி: இந்திய வானியல்
மார்ச் 3-ம் தேதி, வியாழக்கிழமை, இந்திய வானியல் வரலாறு பற்றிய கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் நடைபெறுகிறது.

* வானியல் துறை இந்தியாவில் எப்போது தோன்றியது?
* தோற்றுவித்தவர்கள் யார்?
* இந்திய வானியலின் அடிப்படைக் கருத்துகள் என்ன?
* வேத ஜோதிடம் மெய்யா, பொய்யா?

வானியலின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க இருக்கிறார் டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன். இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.

இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை - 18
நாள்: 3 மார்ச் 2011, வியாழக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி

மற்றைய விபரங்களுக்கு:- இங்கே சொடுக்கவும்

குறிப்பு: முதலில் லிங்க் கொடுக்காமல் செய்தியை போட்டு விட்டேன். இதை எனக்கு உணர்த்திய நண்பர் திரு.ரோமிங் ராமன் அவர்களுக்கு நன்றி.

Sunday, February 27, 2011

Important - எனது விளக்கம்

அனைவருக்கும் வணக்கம்.

இதற்கு மேலும் நான் பொறுமையாக இருந்தால் நான் மிருகத்திற்கும் கேவலமாகி விடுவேன் என்ற காரணத்தினால் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலர்(ஏன் ஜோதிட துறையில் இருப்பவர்கள் கூட) எனக்கு வழங்கிய அறிவுரை என்னவென்றால் “டேய் ராமகிருஷ்ணா, ஜோதிடத்தை தொழிலாக செய்!!! சேவையாக செய்யாதே. மக்களில் சிலருக்கு சேவை செய்பவனை கண்டால் இந்த காலத்தில் இளிச்சவாயனாக தெரியும். நீ மட்டும் ஆய்வு, நல்லது என்றெல்லாம் பேசி உன்னுடைய காலத்தை கெடுத்து கொள்ளாதே” என சொன்னார்கள். அதையும் மீறி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் என்னுடைய நேரத்தையெல்லாம் வீணாக்கி விட்டேன் என இப்போது உணர்கிறேன். மக்களுக்கு பயன்படும் வகையினில் எவ்வளவோ காரியங்கள் செய்திருக்கிறேன். ஏன் இதே சென்னையில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நான் காசு வாங்கி ஜோதிடம் சொன்னதில்லை. இதுவும் எனது நண்பர்கள் பல பேருக்கு தெரியும்.கடந்த 1999 உலகக்கோப்பை முதல் ஒவ்வொரு Occasionsன் போதும் நான் ஜோதிட ரீதியாக சில விளக்கங்களை அளித்து வருகிறேன். அது போலதான் கடந்த இந்திய வங்கதேசம் போட்டியின் போதும் சரி, இன்று நடைபெற்ற இந்திய இங்கிலாந்து போட்டியின் போதும் சரி, நான் இந்தியா வெற்றி பெறும் என ஜோதிட ரீதியாக சில விளக்கங்களை அளித்தேன்.இன்றைய போட்டி டையில் முடிவடைந்தது. ஜோதிட ரீதியாக சில விஷயங்களை சொன்னேன். அது நடக்கவில்லை. ஆனால் ஏதோ நான் சொன்னது நடக்கவில்லை என்பதற்காக என்னையும், எனது குடும்பத்தினரையும், எனது பரம்பரை தொழிலான ஜோதிடத்தையும் கேவலமாக திட்டி எனக்கு மெயில் செய்திருக்கிறார்கள்.

நான் என்ன ஊரை ஏமாற்றி காசு சம்பாதித்து விட்டேனா? அல்லது பரிகாரம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் சம்பாதித்து விட்டேனா? இல்லையே. இதுவரை நான் காசாகவோ, பொருளாகவோ வாங்கி யாருக்கும் எந்த ஜோதிடமும் சொன்னதுமில்லை. பரிகாரங்கள் செய்து கொடுத்ததும் கிடையாது.

நான் செய்தது என்ன?

மக்களுக்கு இருக்கும் ஆன்மீக அறியாமையை அகற்றுதல், ஜோதிடம் படிப்பவர்களுக்கு பலன் சொல்வதற்கு வசதியாக ஆய்வுகளுக்கு பயன்படும் கருத்துக்களை பரப்புதல், ஜோதிடத்தில் பரிகாரம் என்பதே கிடையாது என விளக்குதல் என என்னை பின் தொடர்ந்து வருபவர்களுக்கு தெரியும். இதற்கெல்லாம் பயந்து ஓடி விட மாட்டேன். ஏனென்றால் ஜோதிடத்தை நாங்கள் தொழிலாக செய்யவில்லை. எங்களது பரம்பரை ஜோதிடத்தை தொண்டாக செய்கிறது. இன்றளவும் நாங்கள் செய்து வருகிறோம். எனது தாழ்மையான கருத்து என்னவென்றால் எனது பதிவு என்றில்லை எந்த பதிவாக இருந்தாலும் சரி தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக டெலிட் செய்து விடலாம். அதற்காக என்னை கருத்தே சொல்லக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. என்னை திட்டி யாரும் மெயில் செய்தால் நான் கவலைப்படவும் மாட்டேன். கோபமும் அடையமாட்டேன்.

எனினும் நான் இப்போதும் சொல்கிறேன். யாருக்கும் பயந்து எனது கருத்துகளை சொல்லாமல் விடமாட்டேன். வழக்கம்போல் எனது பதிவுகள் தொடர்ந்து வரும். என்ன இனி இலவச சேவையாக ஜோதிடமே சொல்லபோவதில்லை என முடிவுக்கு என்னையும் வரவைத்து விட்டனர். எனவே ஜோதிடம் சொல்வதற்கு சிறு கட்டணம் வசூலிக்கபடும். அந்த கட்டணத்தை நான் செலவழித்தால் அது எனது பரம்பரைக்கு களங்கம் சேர்க்கும் விதமாக அமைந்துவிடும். எனவே அப்படி வாங்கும் கட்டணத்தை தமிழ்நாட்டில் உள்ள நலிந்த கோவில்களுக்கும், அனாதை ஆசிரமங்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் எமது நண்பர்கள் மூலமாக நற்காரியங்கள் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். நானாக யாரிடத்திலும் நன்கொடைகளும் வசூலிக்க போவதில்லை. என்னிடம் ஜோதிடம் பார்க்கும் தொகையை மட்டுமே செலவழிக்க போகிறேன்.

இப்பொதும் சொல்கிறேன்.....

ஜோதிடம் எனது தொழிலல்ல.....எனது உயிர்.

என்றும் நன்றிமறவா..

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

Friday, February 18, 2011

இந்தியா வங்கதேசம் போட்டி முடிவு - India Bangladesh Result - ஜோதிட ரீதியாக

உலகக் கோப்பை துவங்கி விட்டது. எத்துனையோ பேர் “ஐயா! ஜோதிடர் அவர்களே! தாங்கள் உலகக் கோப்பை தொடர்பாக ஏதேனும் பதிவு உண்டா?” என என்னிடம் கேட்க நான் இட்லிவடையிடம் கேட்டேன். அவர் உடனடியாக ஒரு ஐடியா கொடுத்தார். அதனால் விளைந்தது இந்த பதிவு.

முதலில் இந்திய அணியின் தலைவர் தோனி ஜாதகத்தை ஆராய்வோம்.

dhoni.JPG

தோனிக்கு ராகு திசை சனி புக்தி நடக்கிறது.

-----------------------------------

வங்கதேச அணியின் தலைவர் ஷாகிப் அல் ஹாஸன் ஜாதகத்தை ஆராய்வோம்.

Shakib Al Hasan.JPG

ஹாஸனுக்கு ராகு திசையில் வியாழ புக்தி நடக்கிறது.

போட்டி நடைபெறும் நாளன்றைய கிரஹ நிலை

19022011.JPG

ஜோதிடத்தில் ஒரு விஷயாதி ஆரம்பிக்கும் போதுதான் நேரம் காலம் பார்க்க வேண்டுமே தவிர விசேஷம் நடக்கும் நேரம் எடுத்துக் கொள்ள கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. எனவே முதலில் நாம் அதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நல்லது. தோனிக்கு ராகு திசையில் சனி புக்தி நடக்கிறது. ஹாஸனுக்கு ராகு திசையில் வியாழ புக்தி நடக்கிறது. இனி சில பாய்ண்ட்டுகள் ஜோதிட ரீதியாக இருக்கும். புரியாதவர்கள் விட்டு விடலாம்.

போட்டி நடைபெறும் அன்றுள்ள ஜாதக நிலைப்படி லக்னேசன் புதன். தோனி பிறந்த லக்னேசன் புதன். ஹாஸன் பிறந்த லக்னேசன் சுக்கிரன். ராகு லக்னத்திற்கு 7ல் அமர்ந்திருக்கிறார். இங்கு இருவருக்குமே ராகு திசை நடக்கிறது. புக்தி மட்டுமே வேறுவேறு. தோனியின் புக்திநாதன் சனி 4ல் அமர்ந்திருக்கிறார்(பாவத்தில் 5ல் அமர்ந்திருக்கிறார்). ஹாஸனின் புக்திநாதன் வியாழன் 10ல் அமர்ந்திருக்கிறார்(பாவத்திலும்). போட்டி நடைபெறும் அன்றைய ஜாதகப்படி லக்னேசன் வியாழ பகவானின் 12ல் அமர்ந்திருக்கிறார். இதே போன்று பல விதமான ஆராய்ச்சிகள் செய்து முடிவு:

இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் போராட்ட வெற்றியாகத்தான் இருக்கும். இரு அணிகளுக்குமே ஸம வாய்ப்பு இருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

சதவீத கணக்கு: இந்தியா: 66% - வங்கதேசம்: 34%

Monday, December 6, 2010

செவ்வாய் தோஷம் - குஜ தோஷம்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குப் பரிகாரம் இருக்கிறதா?

இதைப் பற்றியே தனியாக ஒரு பதிவு போட வேண்டி வரும். சரி, உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் "ல" என்றோ அல்லது "லக்னம்" என்றோ அல்லது "Asc" என்றோ[ஆங்கில ஜாதகங்கள் மட்டும்] போட்டுருக்கும், அதுதான் உங்களது லக்னம். அதிலிருந்து Clockwise ஆக எண்ணுங்கள், செவ்வாய் அமர்ந்திருக்கும் இடத்தை எண்ணுங்கள். எண்ணிவிட்டீர்களா? கிடைத்திருக்கும் விடை: 2, 4, 7, 8, 10, 12 ஆகிய விடை உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று பொருள். ஆனால் கீழ்க்கண்ட நிலையில் ஏதாவது ஒரு Exception இருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி உண்டு, நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. [ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்]

[1] நீங்கள் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.


[2] நீங்கள் மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.


[3] உங்கள் ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ, 8ம் இடத்தையோ[பெண்களுக்கு மட்டும்] குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.


[4] 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.


[5] செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.


இதே போல் 100க்கும் மேற்ப்பட்ட Exceptions உள்ளன. எனவே செவ்வாய் தோஷம் என்றால் பயப்பட வேண்டியதில்லை.

பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்

அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.

யாம் எழுதிய குருப் பெயர்ச்சி பலன்களை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

அதில் பல பேருக்கு சந்தேகம் என்னவென்றால் தமது ஜாதகத்திற்கும் இதுதான் பலன்களா என்று. நான் அதிலேயெ குறிப்பிட்டிருக்கிறேன். நான் கொடுத்திருப்பது பொதுவான பலன்களே. இந்த பலன்கள் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும் என்று. எனவே நான் கொடுத்திருக்கும் பலன்கள் 30% - 40% சதவீதம் சரியாக இருக்கலாம். உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் வீற்றிருக்கும் இடம், திசா புத்தி பொறுத்து பலன்கள் மாறலாம்.

மேலதிக விபராதிகளுக்கு எமக்கு தனி மடலிடவும்.
--
ஜோதிடம் எமது தொழிலல்ல...எமது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
பிரமிட் பாண்டுரங்கா டிரஸ்ட் - ஸ்ரீ விட்டல் ஆஷ்ரமின் ஆஸ்தான ஜோதிடர்.
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/
செய்திகளின் விமர்சனங்கள்:http://newsjournalist.blogspot.com/