Saturday, April 25, 2026

சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நடைபெற்ற யந்திர பூஜை மற்றும் கும்பாபிஷேக அனுபவம்

 சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நடைபெற்ற யந்திர பூஜை மற்றும் கும்பாபிஷேக அனுபவம்

அன்பின் சொந்தங்களுக்கு வணக்கம்.
சமீபத்தில் அம்பத்தூரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவிலில் நடந்த ஆன்மீக நிகழ்வில் நமக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
அந்த சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பலமுறை நாள் குறிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு தடைகள் காரணமாக அது நிறைவேறாமல் தாமதமாகிக் கொண்டே இருந்தது.
அந்த சூழ்நிலையில், கோவில் நிர்வாகம் நம்மை அணுகி “பிரஸ்னம்” பார்த்து தீர்வு கூறுமாறு கேட்டுக் கொண்டனர். நாங்கள் பிரஸ்னம் பார்த்து, அந்த நிலத்திற்கும் கோவிலுக்கும் தேவையான சில முக்கியமான பிராயச்சித்தங்கள் மற்றும் ஆன்மீக பரிகாரங்களை பரிந்துரைத்தோம். மேலும், கோவில் வளம் பெறவும், கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெறவும் வேண்டிய அனைத்து வழிபாடுகளையும் நம் தலைமையில் செய்து கொடுத்தோம்.



அதன் பிறகு, கும்பாபிஷேகத்திற்கு வேறு ஒருவரை அவர்கள் தேர்வு செய்திருந்தாலும், கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நடைபெறும் யந்திர பூஜையை அடியேன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
"யந்திர பூஜை என்பது கும்பாபிஷேகத்தில் மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான ஒரு ஆன்மீக நிகழ்வாகும். எனவே, எங்களது நித்ய அனுஷ்டான அனுபவத்துடன், அந்த கோவிலில் உள்ள அனைத்து யந்திரங்களுக்கும் முறையாக பூஜைகள் செய்து கொடுத்தோம்"
இறுதியாக, கடந்த வாரம் கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவேறியது. கும்பாபிஷேகம் அன்று எங்களால் கலந்து கொள்ள இயலவில்லை. நேற்று கோவிலுக்கு சென்றோம். அப்போது கோவில் நிர்வாகம் சார்பாக எங்களுக்கு அளித்த மரியாதையும் அன்பும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42

No comments: