Sunday, June 24, 2012

பஞ்சாங்கம் - 25.06.2012

In Tamil - பஞ்சாங்கம் - 25-06-2012







வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 11ம் தியதி - ஜூன் 25 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : திங்கட்கிழமை
திதி :
ஷஷ்டி இரவு மணி 8.32 வரை பின் ஸப்தமி
நக்ஷத்திரம் :
பூரம் மறுநாள் காலை 4.17 வரை பின் உத்திரம்
யோகம் :
ஸிதிடியோகம் 39.58
கரணம் :
கௌலவம் 8.05 வரை பின் தைதுகம் 36.30
சூரிய உதயம் :
சூரிய உதயம் 05.56
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.30
அஹசு :
நாழிகை 31.34
லக்ன இருப்பு :
மிதுனம் 1.25
இராகு காலம் :
காலை 07.26 முதல் 8.56 வரை
எமகண்டம் :
காலை 10.26 முதல் 11.56 வரை
சூலம் :
கிழக்கு - தென்கிழக்கு பரிகாரம்: தயிர்

o o கேது
குரு சுக்(வ)
சூர்
o
இன்றைய கிரஹநிலை
புதன்
o சந்
o ராகு o செவ்சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:- சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: உத்திராடம், திருவோணம். சுக்ல பக்ஷ குமாரஷஷ்டி, பின்னிரவு நடராஜர் அபிஷேகம், அமர்நீதியார் குருபூஜை
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 2
சந்திரன் ஸிம்ஹம் -
செவ்வாய் உத்திரம் 3
புதன் பூசம் 1
குரு கிருத்திகை 2
சுக்ரன் ரோகினி 3
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4



இன்றைய ஜோதிட குறிப்பு - ஐந்தாம் வீடு

இன்றைய ஜோதிடக் குறிப்பு: ஐந்தாம் வீடு:


இன்றைய ஜோதிடக் குறிப்பு:

ஐந்தாம் வீடு:

லக்னத்திலிருந்து ஐந்தாம் வீடு. சந்தான பாக்கியம், புத்திர பாக்கியம், மக்கட்பேறு என்பார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றெல்லாம் சொல்வார்கள். சந்ததியை விருத்தி செய்யும் வீடு. நம்மை கரையேற்றி விடவைக்கும் உரிமையுள்ளவர்கள் நம் மக்கட்செல்வம்.

புத்திரன் என்று ஏன் பெயர் வந்தது?
‘புத்’ என்றால் ஒரு நரகம். அந்த நரகத்திற்கு நாம் போகாதவாறு அதைப் போக்குபவன் அவன், புத்திரன். ஆதலால் அவனுக்கு அந்தப் பெயர் அமைந்தது.

மழலை பேசும் மக்கட் செல்வத்தை தருவதும் தராமற்போவதும் ஐந்தாம் வீட்டினைப் பொறுத்தே அமையும்.

‘குரு’வுக்குப் புத்திரகாரகன் என்று பெயர். மக்களைப் பிரதிபலிக்கும் கிரகம் குரு. இந்த ’குரு’ தம்பதிகளின் ஜாதகத்தில் வலுத்திருந்து, புத்திர பாவமான ஐந்தாம் பாவமும் பலம் பெற்றிருக்குமானால்(படம் 01)

புத்திரவிருத்திக்கு தங்கதடை இருக்காது. இதிலும் ஒரு விஷயம் உண்டு. இதே புத்திரகாரகனாகிய ’குரு’  அதே ஐந்தாம் பாவத்தில் இருந்தால் புத்திர பாக்கியத்திற்கு குறை ஏற்படுத்தலாம். (படம் 03)



குறிப்பிட்ட இந்த காரகன், அதே பாவத்தில் இருக்கக்கூடாது என்பது சாத்திரத்தில் உள்ள கூற்று (காரகோ பவ நாஸ்தி). இதற்கும் ஒரு விதிவிலக்கை பெரியோர் கூறுகின்றனர். ஐந்தாம் வீட்டின் பலமும், ஐந்தாம் வீட்டோனும் பலமும், லக்னாதிபதி பலமும், 9ம் வீட்டோன் சிறப்பும், சுபக்கிரஹங்களின் கூடுதலும் ஒன்று சேருமானால், ஐந்தாம் வீட்டில் இருக்கும் குருவினால் ஏற்படும் குறையைப் போக்குவர். (படம் 02)


நமக்குத் தெரிந்து எத்தனையோ ஜாதகர்களுக்கு ‘குரு’ ஐந்தில் இருந்தும் கூடப் புத்திர சந்தானம் கிட்டியிருக்கிறது. அதற்குக் காரணம் யாம் மேற்சொன்ன இதர பலன்களே காரணம்.

அடுத்து குலதெய்வம்:

நம் குடும்பத்திற்கும் நமக்கும் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வம் என்று ஒன்று உண்டு. எல்லாத் தெய்வங்களும் ஒன்றுதான் என்றாலும், எந்த ரூபத்தில் எந்தத் தெய்வத்தை ஆராதித்தால், குறிப்ப்பிட்டவருக்கு நன்மை பயக்கும் என்பதை அறிய இந்த 5-ம் வீடு பயன்படும். இந்த வீட்டுக்கு அதிபதி, இந்த வீட்டினில் இருப்பவர் மற்றும் இந்த வீட்டினைப் பார்ப்பவர் ஆகிய மூவரில் பலம் வாய்ந்தவருக்கு யார் அதிதேவதையோ, அவரே அந்த ஜாதகருக்கு இஷ்ட தெய்வமாக முடியும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை:

சூரியன் - ருத்ரன்
சந்திரன்: துர்க்கை
செவ்வய்: முருகன் - ஆஞ்சநேயர்



தொடரும்......


இனிவரும் நாட்களில் வர உள்ள  குறிப்புகள்:



வீட்டிற்கு குடிபுகும் முன் பால் காய்க்க வேண்டிய முறைகளும் வழிபாடுகளும்
தூய தமிழில் எளிய முறை முன்னோர் வழிபாட்டு தோத்திரங்கள்
கோவிலிலும் வீட்டிலும் நமக்கு நாமே அர்ச்சனை செய்து கொள்ளும் முறைகள்

Saturday, June 23, 2012

கடகம் சந்திராஷ்டம நாட்கள்

ஆனி    23, 24, 25
ஆடி    19, 20, 21
ஆவணி    14, 15, 16
புரட்டாசி    10, 11, 12
ஐப்பசி    8, 9, 10
கார்த்திகை    5, 6, 7
மார்கழி    3, 4, 5
தை    1, 2, 3, 28, 29, 30
மாசி    26, 27, 28
பங்குனி    24, 25, 26






இது தொடர்பான பதிவுகள்:

மிதுனம் ராசி சந்திராஷ்டம தினங்கள்

ரிஷப ராசிக்குரிய சந்திராஷ்டம தினங்கள்

 சந்திராஷ்டமம் என்றால் என்ன?

மேஷ ராசிக்குரிய சந்திராஷ்டம நாட்கள்

 

 

 





மிதுனம் ராசி சந்திராஷ்டம தினங்கள்


ஆனி    21, 22, 23
ஆடி    17, 18, 19
ஆவணி    12, 13, 14
புரட்டாசி    8, 9, 10
ஐப்பசி    6, 7, 8
கார்த்திகை    3, 4, 5
மார்கழி    1, 2, 28, 29
தை    1, 26, 27, 28
மாசி    24, 25, 26
பங்குனி    22, 23, 24

ரிஷப ராசிக்குரிய சந்திராஷ்டம தினங்கள்

ஆனி    19, 20, 21
ஆடி    15, 16, 17
ஆவணி    10, 11, 12
புரட்டாசி    06, 07, 08
ஐப்பசி    04, 05, 06
கார்த்திகை    01, 02, 03, 29, 30
மார்கழி    26, 27, 28
தை    24, 25, 26
மாசி    22, 23, 24
பங்குனி    20, 21, 22

இது தொடர்பான பதிவுகள்:

Friday, June 22, 2012

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீகக் குறிப்புகள்

In Tamil - பஞ்சாங்கம் - 23-06-2012





வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 09ம் தியதி - ஜூன் 23 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : சனிக்கிழமை
திதி :
சதுர்த்தி இரவு 10.37 வரை பின் பஞ்சமி
நக்ஷத்திரம் :
ஆயில்யம் மறுநாள் காலை 5.06 வரை
யோகம் :
ஹர்ஷ 49.23
கரணம் :
வணிஜை 12.10 வரை
சூரிய உதயம் :
சூரிய உதயம் 05.56
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.30
அஹசு :
நாழிகை 31.35
லக்ன இருப்பு :
மிதுனம் 1.34
இராகு காலம் :
காலை 08.56 முதல் 10.26 வரை
எமகண்டம் :
மதியம் 01.26 முதல் 2.56 வரை
சூலம் :
கிழக்கு - தென்கிழக்கு பரிகாரம்: தயிர்

o o கேது
குரு சுக்(வ)
சூர் புதன்
o
இன்றைய கிரஹநிலை
சந்
o செவ்
o ராகு o சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:- சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: பூராடம், உத்திராடம் , இன்று சுக்ல பக்ஷ சதுர்த்தி
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 1
சந்திரன் கடகம் -
செவ்வாய் உத்திரம் 1
புதன் புனர்பூசம் 4
குரு கிருத்திகை 2
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4




தூங்கி விழித்தவுடன் பார்க்க தக்கவை:
தனது தாயார், தாமரைப்பூ, பொன், மலை, தீபம், கண்ணாடி, சூரியன், வயல், கடல், சந்தனம், நெருப்பு, கோபுரம், சிவலிங்கம், சாளக்கிராமம், தனது வலக்கை, கன்றுடன் சேர்ந்த பசு, மிருதங்கம், மனைவி பார்க்க உத்தமம்.

எட்டு திசைகளுக்கும் உரிய சக்திகள்:
ப்ரஹ்மணி, கௌமாரி, வாராஹீ, சித்தா, வைஷ்ணவீ, மஹேந்திரி, சாமுண்டி, மஹேஸ்வரி ஆகும்.

எட்டு திசைகளுக்கும் உரிய கஜங்கள்:
ஐராவதம், புண்டரீகம், யாமனம், குமுதம், அஞ்சனம், பஷ்பந்தம், சர்வ பௌமம், ஸூப்ர தீபம் ஆகியன.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு எட்டாம் ராசியில், அதாவது அஷ்டம ராசியில் கோசார சந்திரன் பயணம் செய்யும் நாட்களே சந்திராஷ்டமம் ஆகும். உதாரணமாக அசுவினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவரது ஜென்ம ராசி மேஷம். மேஷத்திற்கு எட்டாம் ராசியான விருச்சிகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

எப்படி உங்கள் ராசியை கண்டுபிடிப்பது?

உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் ’சந்’ என்று எதில் போட்டிருக்கிறதோ அதுவே உங்கள் ராசியாகும்.

மேஷ ராசிக்குரிய சந்திராஷ்டம நாட்கள்

ஆனி    16, 17, 18
ஆடி    12, 13, 14
ஆவணி    08, 09, 10
புரட்டாசி    03, 04, 05
ஐப்பசி    01, 02, 03, 29, 30
கார்த்திகை    01, 26, 27, 28
மார்கழி    24, 25
தை    22, 23, 24
மாசி    19, 20, 21
பங்குனி    17, 18, 19

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீகக் குறிப்புகள்

In Tamil - பஞ்சாங்கம் - 22-06-2012






வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 08ம் தியதி - ஜூன் 22 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : வெள்ளிக்கிழமை
திதி :
திருதியை இரவு 10.58 வரை பின் சதுர்த்தி
நக்ஷத்திரம் :
பூசம் மறுநாள் காலை 4.58 வரை பின் ஆயில்யம்
யோகம் :
வியதிபாதம் 52.43
கரணம் :
தைதுலம் 12.23 பின் கரஜி 42.36
சூரிய உதயம் :
சூரிய உதயம் 05.56
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.30
அஹசு :
நாழிகை 31.34
லக்ன இருப்பு :
மிதுனம் 1.38
இராகு காலம் :
காலை 10.26 முதல் 11.56 வரை
எமகண்டம் :
மாலை 2.56 முதல் 4.26 வரை
சூலம் :
மேற்கு - தென்மேற்கு பரிகாரம்: வெல்லம்

o o கேது
குரு சுக்(வ)
சூர் புதன்
o
இன்றைய கிரஹநிலை
சந்
o செவ்
o ராகு o சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:- சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: மூலம், பூராடம்: தனிய நாள்.
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 1
சந்திரன் கடகம் -
செவ்வாய் உத்திரம் 1
புதன் புனர்பூசம் 4
குரு கிருத்திகை 2
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4


திருவிளக்கு: பாகம் - 02


கேள்வி: எங்கள் வீட்டினில் எனக்கு என் அம்மா கொடுத்த விளக்கு உடைந்து விட்டது. அதை மறுபடியும் பயன்படுத்தலாமா?

பதில்: கூடவே கூடாது. எனினும் சிறிய குறையாக இருந்து சரி செய்யக்கூடிய குறையாக இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்தலாம். பொதுவில் பின்னம் ஏற்பட்ட விளக்கினை பெரியவர்கள் பயன்படுத்தியதில்லை.

எந்த திசையை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்?
கிழக்கு முகமாக விளக்கு ஏற்றுவது நல்லது. மேலும் மேற்கு, வடக்கு முகமாகவும் ஏற்றலாம். தெற்கு நோக்கி விளக்கு ஏற்றுதல் கூடாது. ஐந்து முகங்கள் கொண்ட விளக்கு ஏற்றும் போது தவறில்லை. அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்னும் விளக்கு ஏற்ற வேண்டும். ந.எண்ணை அல்லது நெய்யை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். பெண்கள் வீட்டில் இல்லாவிட்டால் ஆண்கள் ஏற்றலாம். அணைக்கும் போது வாயால் ஊதி அணைத்தல் கூடாது. விசிறியால் விசிறி அணைக்கலாம். கையால் விசிறியும் அணைக்கலாம். ஏதேனும் புஷ்பம் கொண்டும் சாந்தப்படுத்தலாம்.

கேள்வி: விளக்கு ஏற்றும் போது என்னென்ன மந்திரங்கள் சொல்லலாம்?

பதில்: ஸர்வ மங்கள் மாங்கல்யேஎன்று தொடங்கும் மந்திரம் சொல்லலாம். ஓம் நமசிவாயஎன்ற ஐந்தெழுத்து மந்திரம் சொல்லலாம்.  ஓம் நமோ நாராயணாயஎன்ற எட்டெழுத்து மந்திரம் சொல்லலாம். தனந்தரும் கல்வி தரும்என்று தொடங்கும் அபிராமி அந்தாதி சொல்லலாம். ஒன்றுமே தெரியாவிட்டால் ஓம் சக்தி பராசக்திஎன்று சொல்லியும், உள்ளார்ந்த அன்புடனும் விளக்கு ஏற்றி வழிபடலாம். விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே
சரண்யே திரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே

கேள்வி: விளக்கு ஏற்றுவதில் ஆண்-பெண் பேதம் இருக்கிறதா?
பதில்: விளக்கு ஏற்றுவது கண்டிப்பாக பெண்கள் வீட்டில் இருந்தால் பெண்கள்தான் ஏற்ற வேண்டும். இரவு தூங்க செல்லும் முன் விளக்கை குளிரூட்டுவதற்கு கொஞ்சம் பாலை நிவேதனம் செய்த பின் அணைக்கலாம். விளக்கை வாயால் ஊதி அனைத்தல் கூடவே கூடாது. விசிறியின் மூலமாகவோ அல்லது ஏதேனும் பேப்பர் அட்டையினைக் கொண்டோ அனைக்கலாம். பெண்கள் சில நாட்களில் வீட்டில் இல்லாத சமயங்களில் ஆண்கள் இந்த வேலைகளை செய்யலாம்.



தொடரும்.....

Thursday, June 21, 2012

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீகக் குறிப்புகள்

In Tamil - பஞ்சாங்கம் - 21-06-2012






வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 07ம் தியதி - ஜூன் 21 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : வியாழக்கிழமை
திதி :
துவிதியை இரவு 10.47 வரை பின் திருதியை
நக்ஷத்திரம் :
புனர்பூசம் மறுநாள் காலை 4.04 வரை பின் பூசம்
யோகம் :
த்ருவம் 55.04
கரணம் :
பாலவம் 11.19 வரை பின் கௌலவம் 42.10
சூரிய உதயம் :
சூரிய உதயம் 05.55
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.30
அஹசு :
நாழிகை 31.35
லக்ன இருப்பு :
1.42
இராகு காலம் :
மதியம் 1.25 முதல் 2.55 வரை
எமகண்டம் :
மாலை 2.55 முதல் 4.25 வரை
சூலம் :
தெற்கு - தென்கிழக்கு பரிகாரம்: தைலம்

o o கேது
குரு சுக்(வ)
சூர் சந் புதன்
o
இன்றைய கிரஹநிலை
o
o செவ்
o ராகு o சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:- சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: அனுஷம், கேட்டை.
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் மிருகசீர்ஷம் 4
சந்திரன் மிதுனம் (இரவு 9.49க்கு மேல் கடகம்) -
செவ்வாய் உத்திரம் 1
புதன் புனர்பூசம் (பின்னிரவு 12.55க்கு மேல் கடகம்) 2
குரு கிருத்திகை 2
சுக்ரன் ரோகினி 1
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4


விளக்கு வழிபாடு:


கேள்வி: விளக்கு ஏற்றுவதால் என்ன பயன்?

பதில்: நமது முன்னோர்கள் எதையுமே ஆழ்ந்து சிந்தித்துதான் சொல்லியுள்ளனர். நமது வீட்டினில் இருக்கும் எதிர்மறையான அலைகளை இந்த விளக்கின் மூலம் ஏற்படும் அலைகள் நேர்மைறையான அலைகளாக மாற்றும். அதனால்தான் கோவில்களில் இருக்கும் விளக்குகள் அளவில் பெரியதாக இருக்கும்.

கேள்வி: கண்டிப்பாக பஞ்சமுக (ஐந்து முக) விளக்குதான் ஏற்ற வேண்டுமா?

பதில்: பஞ்ச முக விளக்குதான் ஏற்ற வேண்டும் என்பது இல்லை. அதுவும் வெள்ளியில்தான், பஞ்சலோகத்தில்தான், பித்தளையில்தான் இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை.  அகல்சட்டி விளக்கு கூட ஏற்றுவது நன்மையைத் தரும். கல் விளக்கும் நன்மையை தரும். மேலும் நீங்கள் எந்த விளக்கு பயன்படுத்துகிறீர்களோ அதை குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வது உத்தமம்.

கேள்வி: நாங்கள் இருப்பது ஒரு சிறிய அறை கொண்ட வீடுதான், அதில் எப்படி விளக்கு ஏற்றுவது?

பதில்: இன்றைய சூழ்நிலையில் இதே போன்ற அமைப்புடன் தான் பல வீடுகள் உள்ளன. எனினும் விளக்கு ஏற்றுவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது ஏற்படுத்தும். எனவே அறை சிறியதாக இருந்தாலும் விளக்கு கட்டாயம் ஏற்ற வேண்டும்.


தொடரும்....