Wednesday, May 22, 2013

இன்று.....

இன்று.....

விஜயஸ்ரீ வருடம், வைகாசி மாதம் 8ம் தேதி. சித்த யோகம். கரணம்: 6.00-7.30, சூரிய உதயம் 5.53; ரிஷப லக்னம். இருப்பு நாழிகை 3 விநாடி 41; சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
துவாதசி 26.3 (PM 4.48) சித்திரை 48.43 (AM 1.22)
குளிகை: 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். திருவாதவூர் திருக்கல்யாணம். காஞ்சி வரதர் சென்னை ஸ்ரீபார்த்தசாரதி கோயில் வரதர், ஆற்காடு வரதர் வைகாசி த்வஜாரோகணம். காட்டுப்பரூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம் இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி. பழனி ஸ்ரீமுருகர் ஆட்டுக்கிடா வாகனம். திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் காலை வாமனாவதாரம். காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு.


இன்றைய நாளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கி வர அனைத்து நன்மைகளும் இனிதே நடக்கும்.
------------------------------
2013 குரு பெயர்ச்சிப் பலன்கள்

மிதுன குருவின் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் கணித்த பலன்கள்

http://kuppuastro.blogspot.in/2013/05/2013_17.html

Monday, May 20, 2013

இன்று திங்கட்கிழமை.

இன்று திங்கட்கிழமை.

வர்த்தக வாரத்தின் முதல் நாள்.

சிவனுக்கும் அம்மனுக்கும் உகந்த நாள்.

நமது சீவனையே சிவனாக எண்ணி நமது வேலைகளை ஆரம்பிப்போமாக

Saturday, May 18, 2013

இன்று - 18.05.2013

இன்று
18.05.2013
விஜய வருஷம்
உத்தராயணம்
வைகாசி மாஸம் 4ம் தியதி
சனிக்கிழமை
அஷ்டமி மாலை 6.46 வரை பின் நவமி (வளர்பிறை)
மகம் நக்ஷத்ரம் பின்னிரவு 1.33 வரை பின் பூரம்



ராகு காலம்: காலை 9 -10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
சூலம் - கிழக்கு பரிகாரம் - தயிர்

சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: திருவோணம், அவிட்டம்

ரிஷப லக்ன இருப்பு நாழிகை: 4.18

இன்று ....


சனிக்கிழமையாக இருப்பதால் நல்லெண்ணை தேய்த்து குளித்து பச்சரிசி சாதம் சமைத்து ஆண்டவனுக்குப் படைத்து பின் காக்கைக்கு வைத்து விட்டு சாப்பிடுதல் வேண்டும். முன்னோர்களை நினைத்து வணங்குதல் அவசியம். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று வலம் வருதல் நலம்.

அஷ்டமியாக இருப்பதால் சிவன் கோவிலில் இருக்கும் பைரவரை வழிபடுதலும் நன்மை பயக்கும்.

Friday, May 17, 2013

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : மீனம்

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்  மற்றும் தி, து, ஸ, ச, த, தே, தோ, ச, சி ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
பிறர் செய்ய முடியாத செயலை எடுத்து வியூகங்கள் வகுத்து முடித்துக் காட்டும் மீன ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் சுபங்களை தனது பார்வையின் மூலமாக வழங்குபவர் என்றழைக்கப்படும் தனகாரகன் குருவை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். தாமரை இலை தண்ணீர் போல பல விஷயங்களில் ஒதுங்கி இருப்பீர்கள். வெற்றி பெற இறுதி வரை போராடுவீர்கள்.
இதுவரை உங்கள் ராசி மற்றும் தொழில்ஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார்.
உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய  ஆயுள்ஸ்தானம், தொழில்ஸ்தானம், விரையஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேதுவும், ஆயுள்ஸ்தானத்தில் சனி, ராகுவும் இருக்கிறார்கள்.
உங்கள் ராசிக்கு நான்காம் இடமான மிதுனத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். குருவின் நான்காம் இட அமர்வு (அர்த்தாஷ்டம குரு) வாழ்வில் சில சிரமங்களுக்கு மத்தியில் சுப பலன்களை அனுபவிக்க வைக்கும். இருப்பினும் குருபகவானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்களையும் பெறலாம். மனதில் சஞ்சலம் தோன்றும். குடும்பப் பொறுப்புக்களை தைரியத்துடன் எதிர்கொள்வது நன்மை தரும்.
எவரிடமும் அளவுடன் பேசுங்கள். தம்பி, தங்கைகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தாமதம் ஆகுமென்பதால், அவர்களின் அதிருப்தியை சம்பாதிப்பீர்கள். சிலருக்கு உடன்பிறந்தவர்களாலும் உறவினர்களாலும் தொல்லை வந்துவிலகும். பணவரவு சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களில் நிதான வேகத்துடன் செயல்படுவதால் விபத்து அணுகாமல் தவிர்க்கலாம். தாயின் தேவையை நிறைவேற்ற நினைத்தாலும் பணிச்சுமையால் அது தாமதமாகும். புத்திரர்கள் சுயதேவைகளை நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல்நல பாதிப்பு ஏற்படும் போது அலட்சியம் செய்யாமல், உடனடி சிகிச்சை எடுத்து விடுங்கள்.
கணவன், மனைவி குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து ஒன்றுபட்ட மனதுடன் செயல்படுவர். வாழ்வின் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். கஷ்டமான சூழ்நிலையிலும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுபசெலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு பணம் செலவாவதும் சிறு அளவில் கடன் பெறுவதுமான நிலைமை உண்டு. இளைய சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள், வேலை கிடைப்பதில் குழப்பம், தகுதியற்ற வேலை, வேலை செய்யும் இடத்தில் குழப்பம், என ஒரு குழப்பமான சமயத்தில் குருப் பெயர்ச்சியை சந்திக்கின்றீர்கள். நல்லது. சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும் காலமிது.
உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கப்போகும் காலமிது. உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துக்கள். படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலகட்டம் இது. தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும்.
பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது. முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். தந்தையாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத்தேவைக்கு உட்படுவர். புதிய ஒப்பந்தங்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். பிற தொழில் செய்வோர் உற்பத்தியை உயர்த்த தரமான பணியாளர்களை பணியமர்த்துவதும், அதனால் அதிக செலவாவதுமான சூழ்நிலை இருக்கும்.
புதியதொழில்நுட்பங்களை பயன்படுத்ததேவையான இயந்திரம் வாங்குவீர்கள். லாபம் சுமாராக இருக்கும். புதிய தொழில் துவங்க விரும்புபவர்கள் அளவான மூலதனத்தில் திட்டங்களை நிறைவேற்றலாம்.
வியாபார அபிவிருத்தியும் எதிர்பார்த்த லாபவிகிதமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியை விரைந்து முடிக்க ஆர்வம் கொள்வர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும். பணிச்சிறப்பை பாராட்டி கூடுதல் பணவரவு, சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிரிகளிடம் இருந்து விலகுவது நன்மை தரும். இயந்திரங்களை கையாளுபவர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும். படித்து முடித்து வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்திகரமான பணி கிடைக்கும். பெற்றோரை மதித்து செயல்படுவது அவசியம்.

பரிகாரம் : வியாழகிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவக்கிரகங்களை 9 முறை வலம் வரவும்.

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : கும்பம்

மின்னஞ்சல் முகவரி: ramjothidar@gmail.com

 
கும்பம்: அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2 ,3ம் பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்  மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸூ, ஸே, ஸோ, த ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
வாக்குறுதி என்பது சத்தியத்தியத்திற்கு சமமானது என்பதை தாரக மந்திரமாக கொண்டு வாழும் கும்ப ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் கர்மபலனின் மூலமாக வசந்தத்தை வழங்குபவர் என்றழைக்கப்படும் சனியை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். இனிய வார்த்தைகள் இரும்புக்கதவையும் திறந்து விடும் என்று உணர்ந்த நீங்கள் அன்பும் அணுகுமுறையும் கொண்டவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானம் மற்றும் லாபஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய ராசி, பாக்கியஸ்தானம், லாபஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் தைரியவீர்ய ஸ்தானத்தில் கேதுவும், பாக்கியஸ்தானத்தில் சனி, ராகுவும் இருக்கிறார்கள்.
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த குருபகவான் பெயர்ச்சியாகி அனுகூல பலன் தருகிற ஐந்தாம் இடத்தில் உள்ளார். கடந்த காலத்தில் எதிர்கொண்ட சிரமங்கள் விலகி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவீர்கள். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு ஒன்பதாம் இடமான பிதா, பாக்யம், பதினொன்றாம் இடமான ஆதாயம், ஒன்றாம் இடமான ராசி ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் எண்ணத்திலும் செயலிலும் நல்ல மாற்றம் உருவாகும். சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கைகள் உங்களை விட்டு விலகிச் செல்வர்.
வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு. ஏற்கனவே வீடு, வாகனம் இருப்பவர்களுக்கும் புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து படிப்பிலும் நல்ல குணத்திலும் முன்னேற்றம் பெறுவர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். ராசியை குரு பார்ப்பதால் உடல்நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். சொத்துக்களில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவி பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர். மங்கல நிகழ்ச்சி திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேறும்.
தந்தை வழி உறவினர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நடப்பதில் மிகுந்த பிரியம் கொள்வீர்கள். குடும்பத்திற்கான முக்கிய தேவைகள் நிறைவேறும். சகல சவுபாக்ய வசதிகளும் பெறுவீர்கள். திருமண வயதினருக்கு நல்ல வரன் கிடைத்து மங்கல நிகழ்வு இனிதாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே தொடரப்போகும் காலமிது. நல்லது.
எந்த இடத்திற்கு சென்றாலம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். கடுஞ்சொற்கள் பேசுவதை சற்றே குறைத்து கொள்ளுங்கள். உங்கள் நற்மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள். செலவுகளைப் பற்றி கவலைப்படும் சமயம் வந்து விட்டது. ஆடம்பர செலவுகள் வேண்டாம். இளைசகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும் நேரமிது. சிறப்பான சுகங்களை அனுபவிக்க போகும் காலமிது.
புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சந்தாண பாக்கியம் கிட்டும் காலமிது. தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம் இது. முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம். கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கவனம் தேவை.
வாழ்க்கைத்துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்களை வந்து அடையும் நேரமிது. பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை.சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள்.
தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே. தொழிலதிபர்களுக்கு உற்பத்தியை உயர்த்த அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். உபரி வருமானம் உண்டு. உபதொழில் துவங்க வாய்ப்பு உருவாகி நிறைவேறும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். லாபம் நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து புதிய வாடிக்கையாளர் மூலம் விற்பனை உயரும். லாப உயர்வு சேமிப்பை உருவாக்கும். பிற சலுகைகளால் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பீர்கள்.
கூடுதல் சொத்து முக்கிய வீட்டு சாதனப் பொருள் வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். கர்ப்பிணிகள் தகுந்த சிகிச்சை, ஓய்வு பின்பற்றுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு பெறுவர்.
மாணவர்கள் குருவின் அனுகிரகத்தைப் பயன்படுத்தினால் மாநில ராங்க் பெறலாம். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு. பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி அன்பு வளரும். படிப்புக்கான பணஉதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பொது விவகாரங்களில் உங்களின் ஆலோசனை பெரிய அளவில் வரவேற்பை பெறும். எதிரியின் செயல்களால் பாதிப்பு எதுவும் வராது. 
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : மகரம்

மகரம்:உத்திராடம் 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்  மற்றும் ஜி, கி, கு, கே, கோ, க, சி, சே, சோ  ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
நிதானத்தோடு எந்த காரியங்களிலும் இறங்கி நினைத்த இலைக்கை எட்டிப் பிடிக்கும் மகர ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் ஆயுளை வழங்குபவர் என்றழைக்கப்படும் கர்மகாரகனாகிய சனியை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். இருப்பதைக் கொண்டு எளிய வாழ்வு முறையை வாழ்ந்து அமைதியுடன் இருக்க விரும்புபவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு தைரியவீர்ய இளையசகோதர ஸ்தானம் மற்றும் விரையமோக்ஷஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ரணருண ஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய தனவாக்கு குடும்ப ஸ்தானம், தொழில்ஸ்தானம், விரையஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் சுகஸ்தானத்தில் கேதுவும், தொழில்ஸ்தானத்தில் சனி, ராகுவும் இருக்கிறார்கள்.
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ளார். குருவின் ஆறாம் இட அமர்வு உங்கள் வாழ்வியல் நடைமுறையில் சில சிரமங்களை எதிர்கொள்ள வைப்பார். இருப்பினும் குருவின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக நல்ல பலன்களும் ஏற்படும். மிதுனத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு பத்தாம் இடமான தொழில், 12ம் இடமான கூடுதல் செலவு, இரண்டாம் இடமான குடும்பம், வாக்கு, பணவரவு ஆகிய இடங்களை பார்க்கிறார்.   பணரவரவு குறையும் என்பதால், குடும்பத்தேவைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். அதே நேரம் பணவரவுக்கான நல்ல வாய்ப்புகளும் தேடி வரும் என்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் நிதிநிலை பற்றி கவலைப்பட வேண்டி வராது.
தைரிய சிந்தனையும், மனதில் நம்பிக்கையும் வளரும். அவ்வப்போது உடல்நல பாதிப்பு வரலாம் என்பதால் பணிகளில் தாமதம் ஏற்படும். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை காத்துக் கொண்டாலே போதுமானது. தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். அவர்களிடம் வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் தொந்தரவு தராத வகையில் நல்ல குணத்துடன் நடந்துகொள்வர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் நடந்துகொள்வர்.  தம்பதியர் ஒற்றுமையுடன் குடும்பநலன் காத்திடுவர். நண்பர்களிடம் எதிர்பார்க்கிற உதவி கிடைக்கும்.
உறவினர் குடும்ப சுபநகிழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்கிற சூழ்நிலையும் அதனால் கூடுதல் செலவும் ஏற்படும். வெளியூர் பயணம் புதிய அறிமுகங்களை பெற்றுத்தரும். முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்பவேண்டாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை முடிந்த வரை தவிர்க்கவும். எந்த காரியத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்காதீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை.
வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதை செய்ய மறவாதீர்கள். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. வாழ்க்கைதுணையுடன் உறவு சிறக்கும். புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. தந்தையுடன் உறவு சிறக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்.
தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது. உங்கள் வியாபாராத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும். பணவரவு பெறுதில் தாமதம் இருக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட ஓரளவுக்கு நல்ல நிலை இருக்கும். கலங்காமல், உற்சாகத்துடன் செயல்படுவதால் தொழில் சிரமங்கள் விலகும். புதிய தொழில்நுட்பங்களை தொழிலில் பயன்படுத்துகிற கட்டாய சூழ்நிலை உருவாகும்.
புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் எதிர்வரும் காலங்களில் முயற்சிக்கலாம். நீண்டகால பாக்கிகள் வருவது இழுத்தடிக்கும். வியாபாரத்தைத் தக்க வைக்க சிறிதளவு கடன் பெறுவீர்கள். சரக்கு கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பணி வாய்ப்பு குருவருளால் கிடைக்கும். மேல்நிலை மாணவர்கள் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்காமல் படித்தால் தான் உயர் மார்க் பெறலாம். நினைத்த துறையில் கல்லூரி கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றும் பழக்கம் மேலோங்கும், தவிர்க்கவும். படித்து முடித்தவர்களுக்கு சுமாரான சம்பளத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அதை பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.

பரிகாரம் : சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீநடராஜரை வணங்கி வரவும். முடிந்தால் தேங்காய் விளக்கு போடவும்.

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : தனுசு



தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்  மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா  ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

சராசரி மனிதனாய் பிறந்து தங்களது நற்செயல்களின் மூலமாக புகழும் பெருமையும் அடையும் தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் நவக்கிரகங்களில் சுபத்தை வழங்குபவர் என்றழைக்கப்படும் தேவகுருவாகிய குருவை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். சாதனையாளர்களாக வலம் வந்து மற்றவர்களுக்கு பயன் தருபவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு மற்றும் சுகஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய ரணருண ரோகஸ்தானத்தில் இருந்து களத்திரஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய ராசி, தைரியவீர்யஸ்தானம், லாபஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் பஞ்சம பூர்வபுண்ணியஸ்தானத்தில் கேதுவும், லாபஸ்தானத்தில் சனி, ராகுவும் இருக்கிறார்கள்.
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான மிதுனத்தில் மிகுந்த அனுகூலமாக உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சில சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கும் நீங்கள், இந்த சமயத்தில் அவற்றில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள். கடந்த காலத்தில் இருந்த செயல் சுணக்கம் மாறி சுறுசுறுப்பு பெறுவீர்கள். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11ம் இடத்தில் பதிவதால் ஆதாய பணவரவு உண்டு. 7ம் பார்வை ராசியில் பதிவதால் மனத்துணிவு, தெளிவான சிந்தனைத்திறன் ஏற்படும்.
9ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவிகரமாக செயல்படுவர். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு.  பிள்ளைகள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களைச் செய்வர். படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிலும் கவுரவமான நிலையை அடைவர். பூர்வசொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். உடல்நலம் சிறந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நிர்பந்தம் தரும் கடன்களை பெருமளவில் சரிசெய்வீர்கள்.
ஜெனன கால ஜாதக  சந்திரனுக்கு ஏழில் கோசார குரு அமர்ந்து கெஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இதனால் தொட்டது துலங்கும். புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்து குடும்பவாழ்வு சிறக்க பாடுபடுவர். வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள். உங்கள் முரட்டுதனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். எவ்வளவு வேலை செய்து இவ்வளவு நாளும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என ஏங்கியிருந்தீர்களே, இனி அந்த நிலை மாறும். உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது. நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். மற்ற தொழில் செய்வோருக்கும் தாராள லாபம் உண்டு. தொழிலதிபர் சங்கங்களில் பதவி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயண வாய்ப்பு நிறைவேறும். புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம்.
வியாபார சங்கங்களில் சிலருக்கு கவுரவமான பதவி வரும். உத்தொயோகஸ்தர்கள் திறமையாகச் செயல்படுவர். பணிகளை வேகமாக முடித்து பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்வீர்கள். பணிபுரியும் பெண்கள் திறமையைப் பயன்படுத்தி பணிக்கு பெருமை சேர்த்திடுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும்.
குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப்பெறுவர். குடும்பசெலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனையில் வியத்தகு இலக்கை அடைவர். உபரி வருமானம் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண வாழ்வு கைகூடும்.
மாணவர்கள் ஞாபகத்திறன் சிறந்து உயர்ந்த தேர்ச்சி அடைவர். மற்ற துறை மாணவர்களுக்கும் பாராட்டும், பரிசும் கிடைக்கும். சக மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையான உதவி புரிவர். படிப்பை முடித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் கடந்தகால குறைபாடுகளைச் சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த பதவி தானாக வந்துசேரும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை கவனமுடன் கேட்டு நிறைவேற்றித்தருவர். எதிரிகள் வியந்து போகிற அளவில் உங்கள் செயல்பாடுகளின் தரம் அமையும். 

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : விருச்சிகம்



விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்  மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய, யி, யு, நு  ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடையத் துடிக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே! நீங்கள் நவக்கிரகங்களில் தைரியத்தை வழங்குபவன் என்றழைக்கப்படும் பூமிகாரகனாகிய செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வாழிபவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு தனவாக்குஸ்தானம் மற்றும் பூர்வபுண்ணிய பஞ்சமஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய களத்திரஸ்தானத்தில் இருந்து ஆயுள்ஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய தனவாக்குஸ்தானம், சுகஸ்தானம், விரையமோக்ஷஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் ரணருணரோக ஸ்தானத்தில் கேதுவு, விரையஸ்தானத்தில் ராகுவும் இருக்கிறார்கள்.
குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான மிதுனத்தில் பெயர்ச்சியாகி அனுகூலக்குறைவான தன்மையில் உள்ளார். அஷ்டம ஸ்தான குரு வாழ்வில் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வைப்பார். ஏழரைச்சனியின் பிடியிலும் சிக்கியுள்ள நேரம் இது. மனதில் இனம் புரியாத தயக்கம், கலக்கம் போன்றவை தருவார். இருப்பினும் குருவின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நல்ல பலன் வந்து சேரும். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 12ம் இடமான வெளியூர் பயணம், சுபச்செலவு, ராசிக்கு 2ம் இடமான பணவரவு, குடும்ப ஒற்றுமை, 4ம் இடமான வீடு, வாகனம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார்.
இந்த சமயத்தில் பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு அதிகரிக்கும். சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். தம்பி, தங்கைகள் அவர்களுடைய சுயலாபத்தையே பார்ப்பார்கள். வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவர். பிள்ளைகள் படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர். அவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும்.
உடல்நிலை பாதிக்கப்படலாம். உயரமான கட்டடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். படி, லிப்டில் ஏறும் போது கவனம் தேவை. தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சி பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச்செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் புதிய அனுபவமும் நன்மையும் பெற்றுத்தரும். வாகன போக்குவரத்தில் மிதவேகமும் கூடுதல் கவனமும் அவசியம்.
தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை எட்டுவதில் தாமதம் அடைவர். மற்றவர்களுக்கும் இதே நிலையே. குறைந்த லாபம் பெறும் வகையிலான ஒப்பந்தங்களே கையெழுத்தாகும். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்குப்பிடிக்கும்.
வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும். லாபம் ஓரளவு கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். பிறருக்காக எந்த வகையிலும் ஜாமீன் தரக்கூடாது. சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த சூழ்நிலை அல்ல. இருந்த போதிலும் தக்க ஆலோசனைகளோடு புதிய தொழில் தொடங்கலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் குறுக்கிடும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கம்பெனி, அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம். பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி உருவாகப்பெறுவர். ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். இரவல் பொருள் கொடுக்க, வாங்கக்கூடாது.
குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்தும் விதம் குறித்து கவலைகொள்வர். கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும். தாய்வழி சீர்முறை கிடைத்து மகிழ்வீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். நடைமுறைச்செலவு அதிகரிக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது.
மாணவர்களுக்கு உரிய பயிற்சியும், கூடுதல் அக்கறையுமே தரத்தேர்ச்சியை தக்கவைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், வாகனத்தில் செல்வதையும் பெருமளவில் குறைப்பது நல்லது. படிப்பிற்கான பணவசதி கிடைக்க தாமதமாகும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.
அரசியல்வாதிகளுக்கு கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் குறுக்கிடும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்லகாம். ஆதரவாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மதிப்பு குறையும். அதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான், அரசுத்தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். எதிரிகள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளை தவிர்ப்பதால் நன்னிலை பெறலாம்.

விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.
பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். இலுப்பைஎண்ணையில் வீட்டில் விளக்கு ஏற்றவும்.

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : துலாம்



துலாம்: சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்  மற்றும் ர, ரா, ரி, ரு, ரே ,ரோ, த , தா, தி, து  ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள். கடமையே கண்ணாக கொண்டு காரியத்தை முடிக்கும் துலாம் ராசி அன்பர்களே!

நீங்கள் நவக்கிரகங்களில் அசுரகுரு என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் பட்டம் பதவிகள் பெறுவீர்கள். திறமைகள் பல கொண்டவர்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு தைரியவீர்யஸ்தானம் மற்றும் ரணருண ரோகஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய ஆயுள்ஸ்தனாத்தில் இருந்து பாக்கியஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய ராசி, தைரிய வீர்ய இளைய சகோதரஸ்தானம், பூர்வபுண்ணிய பஞ்சமஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் ராசியில் சனி, ராகுவும், களத்திரஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான மிதுனத்தில் குருபகவான் மிகுந்த அனுகூலத்துடன் உள்ளார். கடந்தகாலத்தில் இருந்த குருவின் அமர்வு வாழ்வில் பலவித கஷ்டங்களை தந்தது. இதனால் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற புத்தியும், புதிய நம்பிக்கையும் ஏற்படும். ஓடிப்போகிறவருக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்பது ஜோதிட சாஸ்திர மொழி. எங்கு போனாலும் உங்களுக்கு நன்மையே நடக்கும். அந்தளவுக்கு பாதுகாப்பை இந்த பெயர்ச்சி காலம் தரும். உங்கள் வாழ்வில் ஓடி ஓடி உழைத்து முன்னேற புதிய வாய்ப்பு வாசல்கதவைத் தட்டும்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், நன்மையும் தாராள வருமானமும் கிடைக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தம்பி, தங்கைகளுக்கு திட்டமிட்ட திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும்.  பிள்ளைகள் செயல்திறனை வளர்த்து படிப்பு, பணி, தொழிலில் முன்னேற்றம் காண்பர். வேலையில்லாத குழந்தைகளுக்கு தகுந்த பணி கிடைக்கும்.  சொத்துவாங்க யோகம் உண்டு. பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர்.
வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும். ஏழரைச் சனிகாலம் என்பதால் அவ்வப்போது ஏற்படும் தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். சங்கங்களில் சிலருக்கு பதவி பொறுப்பு கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து உழைத்தால் அனைத்து விதமான இனங்களிலும் வெற்றிகளைக் குவிப்பீர்கள். மின்னணு சாதனங்கள் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அதிக லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். புதிய நிறுவனங்களில் அதிக சரக்கு கொள்முதல் செய்வீர்கள். வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை எளிதாக நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகள் பெறுவர். அனுபவசாலிகள், தந்தையின் ஆலோசனையை ஏற்று நடப்பதால் பணியில் உயரிய பலன்களைபெறுவீர்கள். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை எளிதாக புரிந்து செயல்படுவர். பணி இலக்கு திட்டமிட்ட காலத்தைவிட சீக்கிரம் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும்.
குடும்பப் பெண்கள் கணவரை அனுசரித்து நடந்து நற்பெயர் பெறுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி தாராளமாகக் கிடைக்கும். மகிழ்ச்சிகர வாழ்வுமுறை தொடர்ந்திடும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவு உண்டு. இளம்பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.
மாணவர்கள்  தேர்ச்சி பெறுவர். ஆராய்ச்சி மாணவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சிக்கலாம். சக மாணவர்கள் படிப்பில் உதவுவர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சுற்றுலா பயணத்திட்டம் நல்லவிதமாக நிறைவேறும். அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். உடன் உள்ளோர்கள் உங்கள் பணி சிறக்க உதவி புரிவர். எதிரியை வெல்லும் திறன் அறிவீர்கள். கூடுதல் சொத்து கிடைக்கும்.
அரசு அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு காண்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்த அனைத்து சுபகாரியங்களையும் குரு நடத்தி வைப்பார். தயாராக இருங்கள். எந்த காரியத்தை நினைத்தாலும், எடுத்தாலும் பயந்து கொண்டிருந்தீர்களே, இனி அந்த பயத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள். எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள்.
இளைய ச்கோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். உடல்நிலையில் கவனம் தேவை. இயந்திரங்களை கையாளும் மிகுந்த எச்சரிக்கை தேவை. டூவீலர் ஆகியவற்றிலும் கவனம் தேவை. கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனுக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்கி வரவும். முடிந்தவரை  கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.

Thursday, May 16, 2013

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : கன்னி



கன்னி: உத்திரம் 2, 3, 4ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1, 2ம் பாதங்கள்  மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

இனிமையாக பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் கன்னி ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் வித்தைக்குநாயகனும், நரம்புகளுக்கு உடையவனுமாகிய புதனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். நல்ல செயல்கள் செய்து தன்னை பிறருக்கு உணர்த்துவீர்கள். எந்த விதமான பொறுப்புகளை தனக்கே உரிய பாணியில் செய்து முடிப்பீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு சுகஸ்தானம் மற்றும் களத்திரஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய பாக்கியஸ்தனாத்தில் இருந்து தொழில்ஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய தனவாக்கு குடும்பஸ்தானம், சுகஸ்தானம், ரணருண ரோகஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் தனவாக்கு குடும்பம் 2ராசியில் சனி, ராகுவும், ஆயுள்ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்த குருபகவான் பெயர்ச்சியாகி இப்போது பத்தாம் இடத்தில் உள்ளார். கடந்த காலங்களில் அளப்பரிய நற்பலன்களை குருவருளால் பெற்றீருப்பீர்கள். பத்தாம் இடத்தில் அமர்வால் குரு, உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவார். பத்தில் குரு பதவிக்கு இடர் என்பது ஜோதிட சாஸ்திர மொழி என்றாலும் ஜென்ம ஜாதகத்தில் உள்ள சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் கோட்சார குரு அமர்வதால் கஜ கேசரி யோக பலனைத்தரும். எனவே, நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகும்.
தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்துவிடுவீர்கள். தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புத்திரர் வேண்டாத நட்பும், பிடிவாத குணமும் கொண்டு செயல்படுவர். இதமான அணுகுமுறையால் அவர் களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவீர்கள்.
ஆன்மிகம் நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை ஏற்படும். எதிரியால் இருந்து வந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிக்கட்டுவீர்கள். தம்பதியர் ஒற்றுமை உணர்வுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்கள் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். ஆடம்பர எண்ணத்துடன் அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
தொழிலில் ஏற்படும் குறுக்கீடுகளை மாற்றுத்திட்டத்தின் மூலம் முறியடிக்க முயல்வீர்கள். தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி தரத்தை உயர்த்துவதில் குறுக்கீடுகளைச் சந்திப்பீர்கள். கணவன் - மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள்.
லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். நிர்வாக நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது நல்லதல்ல. புதிய தொழில் முயற்சியை இப்போதைக்கு தவிர்ப்பது அவசியம். உத்தியோகஸ்தர்கள் உங்கள் துறையில் பணிபுரிபவர்கள் பணிசார்ந்த புதிய விஷயங்களை புரிந்து கொள்வதில் தயக்கம் கொள்வார். சகபணியாளர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது மிக அவசியம். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையறைக்குள் பணியிலக்கை எட்ட முடியும். பணவரவு சீராக இருக்கும். பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும், உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகையில் சில கிடைக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த பிறவிஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தி, விற்பனை காண்பர். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். படிப்புக்கான பண வசதி சீராக கிடைக்கும். வெளிவட்டார விஷயங்களில் ஈடுபாடு குறையும். வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள் மற்றும் சமூகப்பணியில் உள்ளவர்களுக்கு  ஆதரவு மனப்பாங்குடன் நடந்த சிலரே உங்களின் எதிரியாக மாறிவிடுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். புத்திரர், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.