Friday, September 27, 2013

நாளைய பஞ்சாங்கம்: 28.09.2013 - சனி

நாளைய பஞ்சாங்கம்:

28.09.2013 - சனி

விஜய வருஷம்
புரட்டாசி மாஸம் 12ம் தேதி - செப்டம்பர் 28 2013
தக்ஷிணாயனம்
வருஷரிது
சனிக்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) நவமி
நக்ஷத்ரம்: திருவாதிரை காலை 6.33 வரை பின் புனர்பூசம்
யோகம்: பரீயான்
கரணம்: தைதுலம் கரணம்
சூரிய உதயம்: காலை மணி 06.03
அஸ்தமனம்: மாலை மணி 06.09
லக்ன இருப்பு: கன்னி நாழிகை 3.23 வரை - சென்னை அயனாம்சத்திற்கு
இராகு காலம்: காலை 9.03 முதல் 10.33 வரை
எமகண்டம்: மதியம் 1.33 முதல் 3.03 வரை
குளிகை: காலை 6.03 முதல் 7.33 வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: மூலம்







குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 7.33 - 09.03; மாலை 4.33 - 6.03
[2] மேல்நோக்கு நாள்
[3] பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு
[4] ஸ்ரீவில்லிபுத்தூர் சின்னதிருவண்ணாமலை ஸ்ரீசீனிவாசப் பெருமாள் கரிட வாகனத்தில் புறப்பாடு
[5] இன்று நவமி திதி
[6] இன்று பெருமாள் ஆலயம் சென்று வர உத்தமம்.
----------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - ஹஸ்தம் 1
சந்திரன் - திருவாதிரை காலை 6.33 வரை பின் புனர்பூசம்
செவ்வாய் - ஆயில்யம் 3
புதன் - சித்திரை 4 இரவு 7.40க்குப் பின் ஸ்வாதி 1
குரு(வியாழன்) - புனர்பூசம் 2
சுக்ரன் - விசாகம் 2
சனி - ஸ்வாதி 2
ராகு - ஸ்வாதி 3
கேது - பரணி 1

---------------------------------------------------------------------

நவராத்திரி - தொடர் 1

சிவனுக்கு ஒரு ராத்திரி, அது சிவராத்திரி. சக்திக்கு ஒன்பது ராத்திரி, அது நவராத்திரி.

சக்தி வழிபாடு (சாக்தம்) பற்றிக் கூறும் நூல்களில் நான்கு நவராத்திரிகள் பற்றி விவரமாக சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்று மட்டும்தான் தற்போது பிரசித்தமாக இருக்கிறது. நான்கு நவராத்திரிகளுமே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்று சாக்த நூல்கள் கூறுகின்றது.

நவராத்திரி பூஜை என்பது அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாள் நடக்கும். தசமியில் துர்க்கா பூஜையுடன் நிறைவுறும். 




நான்கு நவராத்திரிகள்:

  • ஆனி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் ஒன்பது நாட்களின் ராத்திரிகள் ஆஷாட நவராத்திரி எனப்படும்.
  • புரட்டாசி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது
  • தை மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் மகா நவராத்திரி என்று சொல்லப்படுகிறது.
  • பங்குனி மாதத்தில் அமாவாசை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் வசந்த நவராத்திரியாகும்.
இந்த நான்கு நவராத்திரிகளுள் ஆனி மற்றும் தை மாதங்களில் கொண்டாடப்படும் நவராத்திகளை மாதப் பெயர்கள் வைத்து அழைப்பதுண்டு. மற்ற இரண்டையும் நாம் தனிப் பெயர் வைத்து கொண்டாடுகிறோம். 

பொதுவாகவே சக்தி வழிபாடு என்பது நமக்கு சக்தியை வழங்குவதாகும். அதிலும் இந்த நான்கு நவராத்திரிகளில் விரதம் இருந்து பூஜைகள் செய்து அம்மனை வழிபடுவது மிகவும் விசேஷம். நான்கு நவராத்திரிகளையும் பின்பற்ற முடியாதவர்கள் சாரதா மற்றும் வசந்த நவராத்திரியை பின்பற்ற வேண்டும். 

அக்னி புராணம் சொல்வது என்ன?



புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்கள் எமதர்ம ராஜனின் கோரை பற்கள் என்று சொல்வார்கள். அந்த கோரைப் பற்களில் உயிர்கள் அகப்படாமல் இருக்க இந்த இரண்டு நவராத்திரிகளையும் அனுஷ்டித்து அம்பாளின் அருளைப் பெற வேண்டும்.

வீடுகளிலும் சரி, கோவில்களிலும் சரி புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியை கோலாகலமாக கொண்டாடுவார்கள். தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் இதே வழக்கம்தான்.

இந்த நவராத்திரியில் சக்தி முதல் மூன்று நாட்களில் ஸ்ரீதுர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்களில் ஸ்ரீமஹாலக்ஷ்மியாகவும், கடைசி மூன்று தினங்கள் ஸ்ரீசரஸ்வதியாகவும் இருக்கிறாள். 

இந்த நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து பூஜைகள் செய்ய இயலாதவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்குச் சென்று அம்மனை வழிபடுவது விசேஷ பலன்களை அள்ளித்தரும். 


ஜோதிட ரீதியாக யார் யாரெல்லாம் கட்டாயம் நவராத்திரி விரதம் இருந்தால் நல்லது.....


தொடரும்.....

Thursday, September 26, 2013

ஞாயிற்றுக்கிழமை கோவில்

மதுரை திருப்பரங்குன்றத்தின்  தென்பகுதியில் மலைக்குப் பின்புறம் உள்ளது கன்னிமார் கோவில். 



இங்கு ஒரே கல்லில் செவ்வக வடிவில் ஏழு கன்னிமார்களின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னிப் பெண்கள் இங்கு வந்து கன்னிமாரை வழிபட்டால் தோஷங்கள் விலகி திருமணம் கைகூடிம் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் வந்து பொங்கல் வைப்பதால் இது ஞாயிற்றுக்கிழமை கோவில் என்றே அழைக்கப்படுகிறது.


குருபலன் - தொடர் 2

உடல் உறுதி, அகத் தெளிவு:

உடலில் உறுதியும் உள்ளத்தில் தெளிவையும் கொடுப்பவர் குரு மட்டுமே.

புனித பணிகளுக்கும் புண்ணியச் செயல்களுக்கும் புனித யாத்திரைக்கும் காரணம் குரு.

சுபிட்சம், சந்தோஷம், மலர்ச்சி, பெருந்தன்மை, மென்மை, திறமை, நேர்மை,  திண்ணம், எடுத்த முடிவில் வைராக்கியம் போன்றவைகளுக்கும் குருவே கர்த்தாவானவர்.

ஒருவர் உறுதிவாய்ந்த ஓர் உன்னதமான அழகான வீட்டை கட்டிக் கொண்டு அதில் தங்கி வாழ வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் குரு பலமாக இருக்கிறார் என்று பொருளாகும்.

குருவால் எல்லா செல்வங்களையும் நம்மால் பெற முடியும். அதிலும் மிக முக்கியமான மக்கட் செல்வத்தை  அளிப்பவர் குரு.

அணிகலன்கள், ஐஸ்வர்யம், சுகவாழ்வு, சுபிட்சம் இவற்றையெல்லாம் வழங்கும் ஆற்ற்ல் கொண்ட குரு பகவானுக்கு ஜாதகத்தில் தக்க இடமுண்டு.

அடுத்து துன்பத்தைப் போக்கும் ஒளி...

தொடரும்....

நாளைய பஞ்சாங்கம்: 27.09.2013 - வெள்ளி

நாளைய பஞ்சாங்கம்:

27.09.2013 - வெள்ளி

விஜய வருஷம்
புரட்டாசி மாஸம் 11ம் தேதி - செப்டம்பர் 27 2013
தக்ஷிணாயனம்
வருஷரிது
வெள்ளிக்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) அஷ்டமி இரவு 11.09 வரை
நக்ஷத்ரம்: திருவாதிரை
யோகம்: வியதீபாதம்
கரணம்: பத்ரை கரணம்
சூரிய உதயம்: காலை மணி 06.03
அஸ்தமனம்: மாலை மணி 06.09
லக்ன இருப்பு: கன்னி நாழிகை 3.23 வரை - சென்னை அயனாம்சத்திற்கு
இராகு காலம்: காலை 10.33 முதல் 12.03 வரை
எமகண்டம்: மதியம் 3.03 முதல் 4.33 வரை
குளிகை: காலை 7.33 முதல் 9.03 வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: கேட்டை





 


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 9.03 - 10.33; மாலை 4.33 - 6.03
[2] மேல்நோக்கு நாள்
[3] கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
[4] இராமேஸ்வரம் ஸ்ரீமதி பர்வதவர்த்தனியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்.
[5] இன்று அஷ்டமி திதி
[6] இன்று லக்ஷ்மி பூஜை செய்ய உத்தமம்.
----------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - உத்திரம் 4 மதியம் 3.28க்கு மேல் ஹஸ்தம் 1
சந்திரன் - திருவாதிரை
செவ்வாய் - ஆயில்யம் 2 காலை மணி 10.54க்கு மேல் ஆயில்யம் 3
புதன் - சித்திரை 4
குரு(வியாழன்) - புனர்பூசம் 2
சுக்ரன் - விசாகம் 1 மதியம் 3.09க்கு மேல் விசாகம் 2
சனி - ஸ்வாதி 2
ராகு - ஸ்வாதி 3
கேது - பரணி 1

---------------------------------------------------------------------

குருபலம் - தொடர் 1

தனகாரகன் புத்திரகாரகன் என்று அழைக்கப்படுபவர் குரு என்ற வியாழ பகவான். தனம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உரியவர் குரு பகவான். 





குருவைப் பற்றிய விஷயங்கள்:

வியாழக்கிழமை
அந்தணர் இனம்
ஆண்
மஞ்சள் நிறம்
வேதம்
வடகிழக்கு
ஆகாயம்
கொண்டைக்கடலை (மூக்கடலை)
அரசு சமித்து
முல்லைமலர்
கனகபுஷ்பராகம்
பொன் உலோகம்
மஞ்சள் பட்டு

அதிதேவைதைகள்: இந்திரன், பிரம்மா
ராசிகள்: தனுசு, மீனம்
உச்ச வீடு: கடகம்
நீசவீடு: மகரம்
நக்ஷத்ரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
திசை: 16 ஆண்டுகள்

---------------------------------------------------------


குருவால் ஏற்படும் பாக்கியங்கள்:

பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.

ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள். 

அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில்  புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.


அடுத்தது உடல் உறுதி, உள்ளத் தெளிவு:

தொடரும்.......


உங்களுக்கு சந்திர திசை நடக்கிறதா?




ஜெனன காலத்தில் சந்திரன் பலப்பட்டு இருந்தால் மன  அமைதி உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். விதவிதமான ஆடைகள், ஆபரணங்கள் வந்து சேரும். வீடு மனை வாகன யோகம் உண்டாகலாம். பல விதமான ஸ்தலங்களுக்குச் சென்று தெய்வ பலம் பெறுவார். பெண்களால் லாபம் உண்டாகலாம். தாயார் மற்றும் தாயார் வழி உறவில் நல்ல பலன்கள் ஏற்படும். ஜாதகருக்கு முழங்கால் பிடிப்பு, கீல்வாதம் போன்ற வாயு சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்படலாம்.

ஜெனன கால ஜாதகத்தில் சந்திரன் பலவீனப்பட்டு இருந்தால் மேற்சொன்ன பலன்களுக்கு எதிர்பலன்கள் ஏற்படும்.

பரிகாரம்:

சந்திரனை தினமும் தியானம் செய்வது. எப்போதெல்லாம் சந்திரன் தெரிகிறாரோ அப்போது அவரைப் பார்த்து தியானம் செய்வது. 

முத்து அணிவது (மோதிரமாகவோ அல்லது மாலையாகவோ)

சொல்ல வேண்டிய மந்திரம்:
ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

Wednesday, September 25, 2013

நாளைய பஞ்சாங்கம்: 26.09.2013 - வியாழன்

நாளைய பஞ்சாங்கம்:

26.09.2013 - வியாழன்

விஜய வருஷம்
புரட்டாசி மாஸம் 10ம் தேதி - செப்டம்பர் 26 2013
தக்ஷிணாயனம்
வருஷரிது
வியாழகிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) சப்தமி இரவு 9.09 வரை
நக்ஷத்ரம்: மிருகசீரிடம்
யோகம்: வியதீபாதம்
கரணம்: பத்ரை கரணம்
சூரிய உதயம்: காலை மணி 06.03
அஸ்தமனம்: மாலை மணி 06.09
லக்ன இருப்பு: கன்னி நாழிகை 3.33 வரை - சென்னை அயனாம்சத்திற்கு
இராகு காலம்: மதியம் 01.33 முதல் 3.03 வரை
எமகண்டம்: காலை 6.03 முதல் 7.33 வரை
குளிகை: காலை 9.03 முதல் 10.33 வரை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
நக்ஷத்திர யோகம்: மரணயோகம்
சந்திராஷ்டமம்: அனுஷம்




குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 10.33 - 12.03
[2] சமநோக்கு நாள்
[3] திருப்பதி ஸ்ரீஏழுமலையான புஷ்பாங்கி சேவை
[4] ஸ்வாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
[5] இன்று சப்தமி திதி
[6] இன்று சிவன் கோவிலை வலம் வர உத்தமம்.
----------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - உத்திரம் 4
சந்திரன் - மிருகசீரிஷம்
செவ்வாய் - ஆயில்யம் 2
புதன் - சித்திரை 4
குரு(வியாழன்) - புனர்பூசம் 2
சுக்ரன் - விசாகம் 1
சனி - ஸ்வாதி 2
ராகு - ஸ்வாதி 3
கேது - பரணி 1

---------------------------------------------------------------------

Tuesday, September 24, 2013

பரிட்சை வைத்து பாடம் நடத்துகிறது.

எப்படி எங்களது சோகங்கள் எங்களுக்கானது மட்டுமோ அது போல் எங்களது சந்தோஷங்களும் எனக்கானவை மட்டுமே..

பொதுவில் நாங்கள் யாரிடமும் சோகங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. அது போல் எங்களது சந்தோஷங்களையும் இனி யாரிடமும் பகிரப் போவதுமில்லை....

காலம் தான் எவ்வளவு கொடுமையானது.....பரிட்சை வைத்து பாடம் நடத்துகிறது.....

Thursday, September 5, 2013

ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி சிறப்பு யாகம் - அப்டேட் ஒன்று

அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம்.
நாம் ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி ஸ்ரீவிநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு யாகம் நடத்த ஆயத்தப் பணிகள் முடிவடைந்து விட்டது. பெயர்கள் சேர்க்க வெள்ளிக்கிழமை (06-09-2013) அன்று கடைசி நாளாகும். அதன் பின் பெயர்கள் சேர்க்க இயலாது.