Tuesday, June 6, 2017

இன்றைய ராசிபலன் - 06.06.2017 - செவ்வாய்கிழமை

இன்றைய ராசிபலன் - 06.06.2017 - செவ்வாய்கிழமை

சுட்டி: http://kuppuastro.com/today.php

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஒன்பது:

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஒன்பது:

ஒவ்வொரு ஊரிலும் சுடுகாடு அல்லது இடுகாடு தர்மராஜனின் திசையான தெற்கில் அமைந்திருக்கும். சுடுகாடு அல்லது இடுகாடு அமைந்திருக்கும் இடத்தில் கட்டாயம் நீர் நிலைகள் இருக்கும். சில ஊர்களில் சுடுகாடு இருக்காது. பல ஊர்களுக்கு சேர்ந்த மாதிரி அமைத்திருப்பார்கள். சு(இ)டுகாடு அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் கட்டாயமான முறையில் சிவன் ஆலயம் அல்லது ஐயனார் அல்லது ஏதேனும் அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டிருக்கும்.

ஊரின் பிரதான தெய்வம் வருடத்திற்கு ஒரு முறை இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்யும். மேலும் ஊரில் யாராவது இறந்து அந்த பிரதான தேவதை விஜயம் இங்கு செய்ய நேரிட்டாலும் நீத்தார் கடமையை நிறுத்த மாட்டார்கள்.
யாராவது இறந்து போனால் தீட்டு ஏற்படும். அதனை நீக்குவதற்காக ஊரைச் சுற்றியிலும் எட்டு திசைகளிலும் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு அக்னி ரீதியாக சுத்தம் செய்வார்கள்.
ஊரின் பிரதான கோவிலின் கொடியேற்றத்தின் போது ம்ருத்ஸங்கிரணம் - அங்குரார்ப்பணம் என ஒரு விழா செய்வார்கள். ம்ருத் என்றால் வடமொழியில் மண் என்று பொருள்.





இதில் செய்யக்கூடிய விஷயங்கள்:
பஞ்சபூதங்களை வணங்குவது. முதலில் அந்த ஊரிலுள்ள ஏதேனும் ஒரு நீர்நிலையிலிருந்து மண் எடுத்து வருவார்கள். அடுத்ததாக ஊரின் பிரதான நீர் நிலையிலிருந்து நீர் எடுத்து கும்ப கலசம் ஸ்தாபிப்பார்கள். பின் அக்னியை ஹோமத்தில் மூட்டி வேண்டுவார்கள். அடுத்ததாக அந்த அக்னியின் மூலமாக ஏற்படக்கூடிய புகை காற்றுடன் கலக்கும் போது காற்றினை வேண்டுவார்கள். ஹோமத்திலிருந்து ஏதாவது ஒரு ரூபத்தில் (ஓலை அல்லது தீச்சட்டி) அக்னியை எடுத்து ஊரின் எல்லைகளை வலம் வருவார்கள். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் கடைசியாக ஒரு கும்பத்தை எடுத்துக் கொண்டு கோபுரம் அல்லது விமானத்தில் ஏறி ஆகாய தேவதையை வேண்டுவார்கள்.



தொடரும்.....

நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? - தொகுப்பு ஒன்று

நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? - தொகுப்பு ஒன்று
வீட்டினுள் இருக்கும் அறைகளில் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரித்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இதனை காலையில் செய்வதே சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடவும்.



குறிப்பு:
சிவன் கோவிலிலும் பெருமாள் கோவிலிலும் கர்ப்பகிரஹத்தில் செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில் துளசியும் பச்சைக் கற்பூரமும் சேர்ப்பார்கள். சிவன் கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும் மஞ்சள் பொடியும் கலந்திருக்கும். 

Monday, June 5, 2017

குழந்தை பிராப்தத்திற்கான ப்ரஸ்ணம்:

குழந்தை பிராப்தத்திற்கான ப்ரஸ்ணம்:
ஒரு நண்பர் இன்று குழந்தை பிறப்பதற்கான ப்ரஸ்ணம் பார்க்க வந்திருந்தார். ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்திருந்த லக்னம் - மகரம்.





பலன் - வாக்கியப்படி:
சர லக்னம். லக்னாதிபதி சனி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னத்தை குரு பார்க்கிறார். ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானமான ரிஷபத்தை ராசிநாதன் சனியும் சந்தாண காரகன் குருவும் பார்க்கிறார்கள். 100% சந்தாண ப்ராப்தி உண்டு. குரு தனது ஏழாம் பார்வையால் ரிஷபத்தை பார்க்கும் போது குழந்தை கட்டாயம் பிறக்கும்.

வாழ்த்துக்கள்.

Thursday, June 1, 2017

சுபகாரிய நிமித்தம்:

சுபகாரிய நிமித்தம்:
ஒரு ஜோதிடர் ப்ரஸ்ணம் பார்க்க ஆரம்பிக்கும் போது குழந்தையின் அழுகுரல் கேட்டால் கேட்க வந்த காரியம் நிச்சயம் நடக்கும். 

குலதெய்வத்திற்கான ப்ரஸ்ணம் பார்க்கும் போது கர்த்தா (யாருக்கு பார்க்க வேண்டுமோ அவர்) கொண்டு வந்த தாம்பூலத்தில் உள்ள வெற்றிலை நிமிர்ந்தில்லாமல் திரும்பி இருந்தால் குல தெய்வ அனுக்ரஹம் இல்லை என பொருள். அதே போன்று கொண்டு வந்திருக்கும் தாம்பூலத்தில் இருக்கும் வெற்றிலையில் ஐந்தாம் வெற்றிலை பின்னப்பட்டிருந்தாலும் இதே நிலைதான்.

ப்ரஸ்ணம் பார்க்கும் போது ஜோதிடரோ அல்லது கர்த்தாவோ நடுவில் எழுந்து செல்லக் கூடாது. ஒரு முறை உட்கார்ந்து விட்டால் ஜோதிட பலன்கள் முழுமை பெற்ற பின்னரே எழுந்திருக்க வேண்டும்.

தொடரும்.....

Wednesday, May 31, 2017

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஏழு

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஏழு
ஊரில் ஏதேனும் விழாக்காலங்கள் என்று வரும் போது அந்த ஊரில் எந்த தானியம் அதிகமாக விளைகிறதோ அதையே பிரசாதமாக ஊரின் பிரதான தேவதைக்கு நைவேத்யம் செய்வார்கள். எட்டு திசைகளிலும் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு பலி கொடுப்பார்கள். அதிலும் முக்கியமாக ஈசான்யம் மற்றும் கன்னி மூலையில் இருக்கும் தெய்வங்களுக்கு கட்டாயமான முறையில் பலி உண்டு.




ஊரின் தண்ணீர் பாசனத்திற்கு ஈசான்ய மூலையில் உறுதியாக நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். அந்த நீராதாரம் அந்த ஊருக்கு மட்டுமன்றி அந்த ஊரின் அக்கம் பக்கத்து சிற்றூர்களுக்கும் கிடைக்குமாறு வழிவகை செய்வார்கள். சிற்றூர்களில் இருக்கும் மக்கள் தாங்கள் தெரிவிக்கும் நன்றியாக பிரதான ஊரின் கோவிலில் நடைபெறும் உற்சவத்தின் போது கலந்து கொள்வார்கள். பிரதான ஊரின் ஒவ்வொரு திசையிலும் அதிகபட்சமாக 6 ஊர்கள் வரை ஸ்தாபனம் செய்தார்கள். அதே போன்று பிரதான ஊரின் கொடி மரம் எட்டு திசையிலும் ஸ்தாபனம் செய்யப்பட்ட ஊர்களை வியாபித்துக் கொள்ளும்.

சிற்றூர்களில் உருவாக்கப்படும் சிறு கோவில்கள் - அது குடி மக்கள் கோவிலாக இருந்தாலும் சரி, ஊர்க் கோவிலாக இருந்தாலும் சரி, அனைத்து கோவில்களும் பிரதான ஊரின் கொடி மர தேவதைக்கு அடங்க வேண்டும்.

குறிப்பு:
குடி மக்கள் கோவில் என்பது ஒவ்வொரு சாதி குழுவிற்கும் அவர்களாகவே அமைத்துக் கொள்ளும் கோவில். ஊர்க் கோவில் என்பது அந்த ஊரிலுள்ள அனைத்து சாதியினருக்கும் பொதுவான கோவில்.

Friday, May 26, 2017

ஜோதிட பலன் - தமிழ்நாடு




தமிழகத்தை பொறுத்தமட்டில் வரும் ஜூன் மாதம் 8ம் தேதி வைகாசி 25ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 8.42க்கு மேல் வானிலையில் மிகப் பெரிய மாற்றம் இருக்கும். வெயிலின் உக்ரம் குறையும். காய்கறிகளின் விலை குறையும். அரசியல் ரீதியாக சிறிய மாற்றம் இருக்கும். ஆட்சி மாற்றம் இருக்காது. 

குறிப்பு: 
[1] அன்றைய தினம் காஞ்சி மஹாபெரியவர் ஜெயந்தி. 
[2] அனுஷ நக்ஷத்ரத்தில் பிறந்தவர்களுக்கு பொற்காலம் பிறக்கப் போகிறது.

ஜோதிட பலன் - இந்தியா




8 ஜூன் 2017 முதல் 17 ஜூலை 2017க்குள்ளாக மத்திய அரசாங்கம் மக்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடும்.

Friday, April 28, 2017

எப்போதுதான் அரசியல் சூழ்நிலை சரியாகும்

”எப்போதுதான் அரசியல் சூழ்நிலை சரியாகும்?” ஒரு அன்பர் கேட்ட கேள்வி.


தற்போதிருக்கும் சூழ்நிலையில் வாக்கியப்படி சிம்ம ராசியில் ராகு - கும்ப ராசியில் கேது - கன்னி ராசியில் குரு - விருச்சிக ராசியில் சனி என முக்கிய கிரகங்கள் சஞ்சாரம் செய்கிறார்கள். ஜூலை 27ம் தேதி ராகு கேது பெயர்ச்சிக்குப் பின் தமிழக அரசியலில் மிக முக்கிய மாற்றம் ஏற்படும். செப்டம்பர் 2ம் அன்று குரு மாற்றம் நிகழ்வதால் அரசியலில் ஸ்திரத்தன்மை ஏற்படும். டிசம்பர் மாதம் நிகழும் சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு மற்றவர்களின் தலையீடு இல்லாமல் இருக்கும்.

அக்னி நக்ஷத்ரம் - செய்யக்கூடாதவை - செய்யக்கூடியவை

அக்னி நக்ஷத்ரம் - செய்யக்கூடாதவை - செய்யக்கூடியவை:
அருளிச் செய்தவர்: எம்முடைய குருநாதர் பெருங்குளம் வெங்கிடாஜல ஜோஸ்யர்



அக்னி நக்ஷத்ர காலங்களில் செய்யக்கூடாதவை:
புதுமனை புகுதல்
அஸ்திவாரம் தோண்டுதல்
கிணறு வெட்டுதல்
கோவில் கும்பாபிஷேகம் செய்தல்
தேவதையை பாலாலயம் செய்தல்
கிரகங்களை கட்டுதல்
மாட்டுக் கொட்டகை அமைத்தல்
மந்திர உபதேசம் வாங்குதல் (ஒருவேளை கிரஹண காலமாய் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்)


அக்னி நக்ஷத்ர காலங்களில் செய்யத் தகுந்தவை:
புதிய வீடு பதிவு செய்தல்
வாடகை வீட்டிற்குச் செல்லுதல்
பத்திரம் தயாரித்தல்
ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுதல்
புதிய வியாபார நிறுவனம் தொடங்குதல்
புதிய கல்வி ஆரம்பித்தல்
புதிய வாகனம் வாங்குவது
புதிய வேலையில் சேருவது
மகான்கள் தரிசனம்

பொன்னுருக்கி விடுதல்
ஆக்குப்பிறை போடுதல்
மணவறை போடுதல்
திருமணம்
நிச்சயதார்த்தம்
ஒப்புதல் தாம்பூலம்
பட்டு எடுத்தல்
நகைகள் வாங்குதல்
மாப்பிள்ளை பெண் பார்த்தல்



கும்பாபிஷேக பணிகளை செய்தல்
யாகசாலை அமைத்தல்
ஸ்வாமி சிலைகள் வாங்குதல்
ஸ்வாமி சிலைகளை தான்யவாசம் - ஜல வாசம் செய்தல்
தேவதைக்கு ப்ரஸ்ணம் பார்த்தல்

சுபநிகழ்ச்சிகளுக்கு முகூர்த்தம் குறித்தல்
ஜாதகம் எழுதுதல்

குலதெய்வ நேர்ச்சைகளை செய்தல்
புண்ணிய நதிகளில் நீராடல்
புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு சென்று வருதல்
பித்ரு கர்மாக்களை செய்தல்

எண்ணை ஸ்நானம் செய்தல்

குழந்தையை தொட்டிலில் இடுவது
குழந்தைக்கு பெயர் சூட்டுதல்
காது குத்துதல்