Monday, September 18, 2017

பூர நக்ஷத்ரத்தில் பிறந்த புண்ணியவான்களே - புண்ணியவதிகளே

பூர நக்ஷத்ரத்தில் பிறந்த புண்ணியவான்களே - புண்ணியவதிகளே 


பூர நக்ஷத்ரத்தில் பிறந்த புண்ணியவான்களே - புண்ணியவதிகளே இன்று இரவு 9.23 முதல் அக்டோபர் மாதம் 9ம் தேதி வரை மிக கவனமாக இருக்கவும்.
முக்கியமாக வாகனம் பிரயோகிக்கும் போது - பேசும் போது - பண விஷயத்தை கையாளும் போது - வாக்கு கொடுக்கும் போது ஆகியவற்றில் மிக அதிக கவனம் தேவை.
வேகம் கூடவே கூடாது. நிதானம் நிதானம் நிதானம்.
முடிந்தவரை அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் தாயாரை வணங்கவும்.

Tuesday, September 12, 2017

தேவ ப்ரஸ்ணம்: தொடர் பகுதி - 04:

தேவ ப்ரஸ்ணம்: தொடர் பகுதி - 04:
ஸ்வாமிக்கு ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்திருக்கும் லக்னத்திற்கு ஒன்பதாமிடம் என்று சொல்லக்கூடிய பாக்கியஸ்தானத்தை வைத்துதான் கோவிலின் நிர்வாகஸ்தர்கள் - கோவிலின் புண்ணிய பலம் - புண்ணியகாரியங்கள் ஆகியவற்றை சொல்ல முடியும். 


பொதுவில் ஜாதகம் பார்க்கும் போது ஒன்பதாமிடம் பாக்கியஸ்தானம் என்று அழைக்கப்படும். இந்த இடத்தை வைத்துத்தான் தந்தையாரைப் பற்றி சொல்ல முடியும். மேலும் காரகத்துவ அடிப்படையில் சூரியனை வைத்தும்  தந்தையாரைச் சொல்லலாம். தேவ ப்ரஸ்னத்தில் ஒரு கோவிலுக்கு தந்தையார் என்பவர் நிர்வாக தலைவராகவோ அல்லது தர்மகர்த்தாவாகவோ இருப்பார். சில காலங்கள் முன்பு வரை ஊரில் வசதியாக இருக்கும் நபரை கோவிலில் முன்னிலைப்படுத்துவார்கள். எனவே அவர் கோவிலிருந்து எதையும் அபகரிக்க மாட்டார். இறைபணியை சேவையாக செய்தார்கள். கோவிலினுடைய தேவதைக்குப் பயந்தார்கள். 




பிற்காலங்களில் இந்த முறை மாறியது. அரசாங்கம் உள் நுழைந்தது. அரசியல் விளையாட்டில் 5 வருடத்திற்கு ஒரு முறை அரசாங்கம் மாறுவது போல் நிர்வாகக் குழுவும் மாறியது. கோவிலினுடைய சாந்நித்யம் கெட்டது. கோவிலுக்கு வேண்டாதவர்கள் நிர்வாகத்தில் நுழைந்தார்கள். கோவிலினுடைய தேவதையை கல்லாகப் பார்த்தார்கள். பயமோ மரியாதையோ இல்லை. அந்த காலங்களில் அரசாங்கம் கோவிலில் நுழையாது.

இன்று நாம் ப்ரஸ்ணம் பார்க்கும் கோவில்களில் பாதி கோவில்களில் பாக்கியஸ்தானம் கெட்டுப் போய் இருக்கிறது. 

கடைசியில் கோவில் வழிபடும் இடம் என்பதைத் தாண்டி - கோவில் கார்ப்பரேட்களின் கையில் சிக்கித் தவிக்கிறது.

குறிப்பு: உடனே கோவில் பூஜை செய்பவர்களை பற்றி எழுதவில்லையே என்று அங்கலாய்க்க வேண்டாம். இந்த தொடரில் அதுவும் வரும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com

தொடரும்.....

Monday, September 11, 2017

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று நக்ஷத்ரப்படி பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ரீவித்யா முறையின் விடிவெள்ளி - பாசத்தின் பிறப்பிடம் - அன்பின் சிறப்பிடம் - குழந்தை மனம் கொண்ட பாலகன் - வன்மையிலும் மென்மை காட்டும் மனிதப்புனிதர் - எம் குருநாதர் ஸ்ரீமான் பரணிகுமார் ஸ்வாமிஜி அவர்களுக்கு எம் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.


Saturday, September 9, 2017

தேவ ப்ரஸ்ணம் - தொடர் - 03:

தேவ ப்ரஸ்ணம் - தொடர் - 03:
ப்ரஸ்ணம் பார்க்கும் போது சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்துதல் அவசியம். நாம் எந்த தேவதைக்கு ப்ரஸ்ணம் பார்க்கப் போகிறோமோ அந்த தேவதை பல விஷயங்களில் நமக்கு காரியங்களை உணர்த்தும். 

உதாரணமாக கோவில்காரர்கள் கொடுத்த தாம்பூலத்தில் இருக்கும், வெற்றிலையில் முதல் வெற்றிலை சிறு சிறு ஓட்டைகளோடு இருந்தால் அங்கிருக்கும் நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்று பொருள். அடுத்ததாக வைக்கும் தாம்பூலத்தில் தக்ஷிணை இல்லாமல் இருந்தால் அந்த தேவதையின் அருள் நிர்வாகிகளுக்கு இல்லை. 

ப்ரஸ்ணம் பார்க்கும் போது யாரும் அபசகுனமாக பேசுதல் கூடாது.  

கோவிலுக்குள் நுழையும் போது விமானம் சுத்தமாக இருக்க வேண்டும். விமானத்திலும் - ராஜகோபுரத்திலும் செடிகள் எதுவும் இருப்பது அரசாங்கத்தில் துரோகிகள் இருப்பதைக் காட்டும். அடுத்ததாக கொடி மரம் இருக்கக் கூடிய கோவில்களில் தினமும் பிரதான தேவதைக்கு நைவேத்யம் செய்யப்படும் அன்னம் பலி பீடத்திலும் இட வேண்டும். அந்த நேரத்தில் சங்க நாதம் எழுப்பப்பட வேண்டும்.

குறிப்பு:
தற்போது சொன்ன விஷயங்கள் எதுவும் இன்று பின்பற்றப்படவில்லை.




ப்ரஸ்ணம் பார்க்கும் தெய்வக்ஞர் - தான் கிளம்பிய முதல் கோவிலுக்குச் சென்று உட்கார்ந்து - ப்ரஸ்ணம் பார்த்து பலன் கூற ஆரம்பிக்கும் வரை என்னென்ன விஷயங்கள் நடந்திருக்கிறதோ அதை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இதில் தான் மிகப் பெரிய உண்மைகள் நிறைந்திருக்கிறது.

உதாரணம்:
கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு அம்மன் ஆலயத்திற்கு ப்ரஸ்ணம் பார்க்க சென்ற போது - எல்லாவற்றையும் ஏற்பாடுகள் செய்து ஆரம்பிக்கும் போது திடீரென்று ஒரு பசுமாடு வந்தது - அதை பலமாக எடுத்துக் கொண்டோம். அடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் ப்ரஸ்ணம் ஆரம்பித்தும் தங்களுக்குள் தேவையில்லாததை பேசிக் கொண்டார்கள். இது தேவதை மேல் அவர்களுக்கு மரியாதை இல்லாததைக் காட்டியது. 

குறிப்பு: இதை அப்படியே வீட்டிற்கு பார்க்கும் அஷ்ட மங்கள ப்ரஸ்ணத்திற்கும் எடுத்துக் கொள்ளலாம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com

Friday, September 8, 2017

தேவ ப்ரஸ்ணம் - தொடர் - 02:

தேவ ப்ரஸ்ணம் - தொடர் - 02:
ஒரு கோவிலில் தேவ ப்ரஸ்ணம் பார்ப்பதற்கு முன் ராசிகளைப் பற்றியும் - கிரகங்களைப் பற்றியும் முழுவதுமாக தெரிந்து கொள்வது அவசியம். மேலும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட கவனமாக கையாளுதல் முக்கியம்.

உதாரனத்திற்கு சிவன் சார்ந்த கோவிலுக்கு ப்ரஸ்னம் பார்க்கும் போது சர லக்னம் வருவது அவசியம். அப்போதுதான் மூன்றாம் வீடாக உபய ராசிகள் வரும். காவல் தேவதைகளுக்கு உபய ராசியை வைத்து பலன் சொல்ல வேண்டும்.


குறிப்பு:
நடைமுறையில் உபய லக்னங்களில் பிறந்தவர்கள் பிறரை சார்ந்தே வாழ்வார்கள்.



புருஷ தேவதைகளுக்கு சர லக்னமும் - ஸ்தீரி தேவதைகளுக்கு ஸ்திர லக்னமும் - காவல் தெய்வங்களுக்கு உபய லக்னமும் சொல்லப்பட்டிருக்கிறது.



குறிப்பு:
இதுவரை தேவ ப்ரஸ்னம் பற்றிய புத்தகங்கள் தமிழில் நிறைய வந்திருப்பினும், இந்த தொடரில் சொல்லக்கூடிய விஷயங்கள் அனுபவ முறையில் சொல்லப்பட்டதாகும். எமது மானசீக குருநாதர் பெருங்குளம் குப்பு ஜோஸ்யரவர்கள் கூறிய கருத்துக்களின் சாரமே இது.




பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com

மிக மிக முக்கியமான அறிவிப்பு:

மிக மிக முக்கியமான அறிவிப்பு:


கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எம்முடைய இமெயிலுக்கு ஜோதிடம் சம்பந்தமாக கேள்வி கேட்டு பதில் வராமல் இருந்த சொந்தங்களுக்கு - எம்முடைய சொந்த காரணங்களினால் பதிலளிக்க முடியவில்லை. மேலும் கட்ந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ஹோமங்கள் செய்ய வேண்டி இருந்தது.

வரும் திங்கட்கிழமை முதல் அதாவது 11.09.2017 முதல் ரெக்கார்டிங் செய்து பதிலளிக்க உள்ளேன்.

நேரடியாக வந்து சந்திக்கும் விஷயங்களை தயவு கூர்ந்து தவிர்க்கவும். கட்டாயமாக அனைத்து இமெயில்களுக்கும் பதில் அளிக்கப்படும்.



இதுவரை பொறுமை காத்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.

Thursday, September 7, 2017

தேவ ப்ரஸ்ணம் - தொடர் - 01:

தேவ ப்ரஸ்ணம் - தொடர் - 01:
ஒரு கோவிலின் தேவதைக்கு தினமும் உணவு கொடுக்க மறந்தால் தேவதையின் ஸாந்நித்யம் கெடும். அது எந்த தெய்வமாக இருந்தாலும் சரி. இன்றைய சூழ்நிலையில் அரசாங்க கோவில்களானாலும் சரி - தனியார் கோவில்களானாலும் சரி தெய்வத்திற்கு நிவேதனம் சரி வர நடப்பதில்லை. இது உண்மை.




குறிப்பு: புதிது புதிதாக கோவில் கட்டுவது முக்கியமில்லை. பிரதிஷ்டை செய்யப்படும் தேவதைக்கு தினமும் உணவு கொடுக்கப்பட வேண்டும். பிரதிஷ்டை செய்யும் நீங்கள் தினமும் சாப்பிடாமல் இருக்கிறீர்களா?


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com

Wednesday, September 6, 2017

ஆதங்கம் - 2:

ஆதங்கம் - 2:
சமீபத்தில் ஒரு கோவிலில் தொடர்ந்து கும்பாபிஷேகம் தடை பெற அது சம்பந்தமாக ப்ரஸ்ணம் பார்க்க நேர்ந்தது.

அடியேனுக்கு அந்த கோவிலுக்குச் சென்று தேவ ப்ரஸ்ணம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 

சிற்சில பரிகாரங்கள் சொல்லி அதையும் அந்த கோவிலை சார்ந்த மக்கள் செய்து கடந்த செப்டம்பர் 4ம் நாள் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கிறது.

ஆனால் நமக்கு தகவல் சொல்லவுமில்லை - தொடர்பு கொள்ளவுமில்லை. 

எப்படியோ அந்த கோவிலுக்கு நல்லது நடந்தது சந்தோஷம்.

எம் கடன் பணி செய்து கிடப்பதே.......

இன்று முதல் மஹாளய பக்ஷம் ஆரம்பம்.

இன்று முதல் மஹாளய பக்ஷம் ஆரம்பம்.

தினமும் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும். தாயார் தகப்பனார் இல்லாதவர்கள் தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது.

மற்றவர்கள் தினமும் காலையில் குளித்தவுடன் முன்னோர்களை வணங்கி விட்டு அதன் பின் வேலைகளை தொடங்குவது நல்லது. இக்காலத்தில் வெங்காயம் - பூண்டு - மாமிசம் ஆகியவற்றை முடிந்தவரை ஒதுக்குவது நல்லது.




மேஷம் - ரிஷபம் - சிம்மம் - துலாம் - விருச்சிகம் - தனுசு ஆகிய ராசிக்காரர்கள் தினமும் முன்னோர்களை வணங்கி வந்தால் சனியின் உக்ரம் குறையும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com


Web: www.kuppuastro.com

Tuesday, September 5, 2017

ஆதங்கம்:


ஆதங்கம்

புதுசா கண்டுபிடிக்கிறேன் புதுசா சொல்றேன்னு

 நிறைய மூடநம்பிக்கைகளை வளர்த்ததுதான் 

சில ஜோதிடர்களின் லக்ஷணம்.