Sunday, January 5, 2020

நாளை நாள் நமது வெற்றி நாள் 06 ஜனவரி 2020

நாளை நாள் நமது வெற்றி நாள்
06 ஜனவரி 2020




ஜோதிட கேள்வி பதில் - பகுதி 04

கேள்வி: எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

MM - தஞ்சை
 
பிறந்த தேதி: 27.01.1987; நேரம்: 11.10 இரவு; இடம்: தஞ்சை


 



பதில்:
உங்களுக்கு சோழிப் பிரஸ்ணம் பார்க்கும் போது வந்த லக்னம் - கடகம். நீங்கள் பிறந்தது பூராடம் நக்ஷத்ரம் - தனுசு ராசி, கன்னி லக்னம்.  தற்போது உங்களுக்கு  33 வயது நடக்கிறது. செவ்வாய் தசை சனி புத்தி குரு அந்தரம். தைரிய அஷ்டமாதிபதி தசை பஞ்சம ரண ருணாதிபதி புத்தி. செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார். ஆயுசு தீர்க்கம். ஆரோக்கிய நன்றாக உள்ளது. இடவொட்டு கால சர்ப்ப தோஷத்தில் பிறந்திருக்கிறார்.  செவ்வாய் ஏழாம் பாவத்தில் இருப்பதால் சிறிது திருமண தடை இவருக்கு உண்டு. ஆனால் 33 வயது பூர்த்தியான பின் திருமணம் நிச்சயம் உண்டு. திருமணம் சார்ந்த முடிவுகள் எடுக்கும் போது சிறிது சுணக்கம் ஏற்படும். 2020 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இவருக்கு திருமணம் நடைபெறும். திருமண வாழ்வு மிக இனிமையானதாக இருக்கும். திருமணம் நடைபெற்ற பின் இவருக்கு சகலவித  ஐஸ்வர்யங்களும் வந்து சேரும். ஏதேனும் ஒரு சிறிய கோவிலில் நாகபிரதிஷ்டை செய்வதன் மூலம் சர்ப்பதோஷம் அகலும். மேலும் முன்னோர்களை  நினைத்து ஒவ்வொரு அமாவாசையும் வழிபாடு மேற்கொள்வது அவசியம்.

Saturday, January 4, 2020

நாளைய நாள் நமக்கான நாள் 05 ஜனவரி 2020

நாளைய நாள் நமக்கான நாள்

05 ஜனவரி 2020


ஜோதிட கேள்வி பதில் - பகுதி 03

கேள்வி: அரசாங்க வேலை கிடைக்குமா?
PJ - சென்னை
பிறந்த தேதி: 12.11.1985; நேரம்: 8.15 இரவு; இடம்: சென்னை



பதில்:
உங்களுக்கு சோழிப் பிரஸ்ணம் பார்க்கும் போது வந்த லக்னம் - கன்னி. நீங்கள் பிறந்தது விசாகம் நக்ஷத்ரம், துலா ராசி, மிதுன லக்னம். உங்களுக்கு 34 வயது பூர்த்தியாகிறது. புதன் திசை சந்திரன் புத்தி செவ்வாய் அந்தரம். லக்ன சுகாதிபதி திசை லாபாதிபதி புத்தி - ரண ருண லாபாதிபதி அந்தரம். உங்கள் ஜாதகப்படி கடும் முயற்சிகளுக்குப் பிறகு உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும். 36 வயதிற்குள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ப்ரஸ்னப்படியும் தொழில் ஸ்தானத்தை சூரியன் - செவ்வாய் பார்க்கிறார்கள். கட்டாயமாக கிடைக்கும். வாழ்த்துக்கள்.

Friday, January 3, 2020

நாளைய நாள் நமது நாள் - 04 ஜனவரி 2020

நாளைய நாள் நமது நாள்
04 ஜனவரி 2020



ஜோதிட கேள்வி பதில் - பகுதி 02

கேள்வி:
TY - மதுராந்தகம் - இது எனது மகனின் ஜாதகம் - அவனின் கல்வி நிலை எப்படி இருக்கும்?

பிறந்த தேதி: 15.06.2010; நேரம்: 9.01 காலை; பிறந்த இடம்: கோவை





பதில்:
உங்கள் மகனிற்கு சோழிப் பிரஸ்ணம் பார்த்த போது வந்த லக்னம் - தனுசு. உங்கள் பேரன் பூசம் நஃக்ஷத்ரம் - கடக ராசி, கடக லக்னம் - பூச நக்ஷத்ர சாரம். 9 வயது முடிந்தது. சனி திசை குரு புத்தி சுக்கிரன் அந்தரம். ரண ருண பாக்கியாதிபதி திசை - சப்தம அஷ்டமாதிபதி புத்தி - சுக லாபாதிபதி அந்தரம். சனி திசை 2021 மார்ச்சோடு முடிகிறது. ஆயுள் பாவம் நன்றாக இருக்கிறது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கல்வியைப் பொருத்தமட்டில் தொழில் நூட்பம் சார்ந்ததாக  இருக்கும். கணக்கு வழக்கு சார்ந்த தொழிலாக இருக்கும். லக்னத்திலேயே சுகாதிபதி சுக்கிரன் சம்பந்தம் பெற்றிருப்பதால் எந்த செயலிலும் வேகம் இருக்கும்.  படிப்பில் சாதனைகள் புரிவான். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வாதத்திறமை மிகுந்திருக்கும். தனது வாய் சாமர்த்தியத்தின் மூலம் மிகப் பெரிய நபராய் வருவான். 

Thursday, January 2, 2020

நாளை நாள் நம் கையில் - 03 ஜனவரி 2020

நாளை நாள் நம் கையில்...

03 ஜனவரி 2020


2020 vaasthu dates


ஜோதிட கேள்வி பதில் - பகுதி 01

கேள்வி: இது எனது பேத்தியின் ஜாதகம் - ஆயுள் - ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
எம்.என் - சென்னை.
பிறந்த தேதி: 31.03.2004; பிறந்த நேரம்: 10.36 இரவு; இடம்: நோய்டா;
பதில்:
உங்கள் ஜாதக விபரம்: ஆயில்யம் நக்ஷத்ரம் கடக ராசி, விருச்சிக லக்னம். உங்கள் பேத்திக்கு 12 வயது முடிந்து 13 நடக்கிறது. புதன் திசை குரு புத்தி செவ்வாய் அந்தரம். அஷ்டம லாபாதிபதி திசை தன பஞ்சமாதிபதி புத்தி. கேது தசை நடக்கிறது. ஆயுள் பாவம் மிகவும் நன்றாக உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதே வேளையில் அதிக புளிப்பு மற்றும் கார உணவுகளைத் தவிர்த்தல் நலம். மருத்துவம் சார்ந்த கல்வி. இசைத் துறையில் மிகவும் உன்னதமான நிலைக்கு வருவாள். 22 வயதில் சுக்கிர திசை ஆரம்பித்த பிறகு பேர் எடுப்பாள். பிரஸ்னம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இவள் ஜாதகத்தை வைத்து பார்க்கும் போது தாயார் தந்தையாருக்கு மிகவும் உன்னதமான காலகட்டமென்பது வரும் 2020 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தொடங்கும்.



ஆயுள் பாவம்:
ஒருவரது ஆயுள் பாவம் என்பது ஜாதகத்தில் எட்டாம் வீட்டைக் குறிக்கும். சனி கிரகம் ஆயுளுக்கு காரகனாவார். ஷட் பலத்தில் சனி கிரகம் பலம் பெற்றிருந்தால் ஆயுள் தீர்க்கம். அஷ்டவர்க்கத்தில் எட்டாம் பாவம் பலம் பெற்றிருந்தாலும் ஆயுள் அதிகம். ஆயுள் ஸ்தானாதிபதி பலம் பெற்றிருப்பது (அல்லது) ஆயுள் ஸ்தானம் பலம் பெற்றிருப்பது (அல்லது) ஆயுள் ஸ்தானாதிபதியையோ ஆயுள் ஸ்தானத்தையோ லக்னத்தையோ குரு பார்ப்பதாலும் ஆயுள் பலம் ஏற்படும். ஒரு வேளை லக்ன ரீதியாக ஆயுள் பலம் குன்றிருந்தால் விதி - மதி - கதி என்ற அடிப்படையில் லக்னத்தைத் தவிர்த்து சந்திரன் - சூரியன் இருக்கும் இடங்களை வைத்து தீர்மானம் செய்ய வேண்டும்.