Wednesday, January 13, 2021

இன்றைய கிரகநிலை - 14 01 2021 - வாக்கிய ப்ரமாணம் - காலை 6 மணிக்கு

 இன்றைய கிரகநிலை - 14 01 2021 - வாக்கிய ப்ரமாணம் - காலை 6 மணிக்கு

 

#astrologer #astrologysigns #horoscopetoday

 


 

இந்த நாள் விசேஷமான நாள் - 14 01 2021 - வியாழக்கிழமை

 இந்த நாள் விசேஷமான நாள் - 14 01 2021 - வியாழக்கிழமை

 


 

ஓர் வேண்டுகோள்:


 ஓர் வேண்டுகோள்:
நம்மிடம் என்றில்லை யாரிடமும் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை சொல்கிறார்கள். அதற்கு தீர்வும் முடிந்தவரை சொல்கிறோம். அது அந்த காலகட்டத்தில் நடவாமல் போகும் போது ஜோதிடர் சரியில்லை, இவருக்கு பார்க்க தெரியவில்லை என்று சிலரும் - சிலர் தொடர்ந்து எந்த ஜோதிடர் பார்த்தாரோ அவரையும் காரியம் நடக்கும் வரை பின் தொடர்வார்கள்.

ஆனால் காரியம் நடந்து விட்டால் ஜோதிடரை கண்டு கொள்ளக்கூட மாட்டார்கள். உதாரணமாக ஒருவர் தனது பெண்ணிற்கு பொருத்தம் பார்க்க வருவார் அல்லது தனது மகனுக்கு குழந்தை இல்லை என ஜாதகம் பார்க்க வருவார். ஆனால் தனது பெண்ணிற்கு திருமணம் உறுதியாகி விட்டாலோ அல்லது தனது மகனிற்கு குழந்தை பிறந்து விட்டாலோ ஜோதிடரிடம் தகவல் கூட தெரிவிப்பதில்லை. இது எமக்கு மட்டுமல்ல அநேக ஜோதிடர்களுக்கு ஏற்படக்கூடிய நடவு.

முன்பெல்லாம் இது போன்ற சமயங்களில் அதிகமாக கோபம் வரும் - பின்னாட்களில் இதே நபர்கள் நம்மை அணுகும் போது இன்னும் கோபம் வரும். ஆனால் இப்போதெல்லாம் வருத்தமே மிஞ்சுகிறது. கடந்த 2 மாதங்களாக பல பேருக்கு நாம் சொன்ன விஷயங்கள் நல்லபடியாக நடந்தும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.

எமக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நாம் நினைப்பது பணத்திற்காக அல்ல...... பிரார்த்தனைக்காக. என்றுதான் புரிந்து கொள்ள போகிறார்களோ?

எனினும் எம் ஆசிகளும் வேண்டுதல்களும் அனைவருக்கும் உண்டு.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

Saturday, January 9, 2021