Sunday, July 29, 2012

சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}

சிந்திக்க சில விஷயங்கள்...

{கேவலமான உண்மைகள்.}

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

எழுதியவர்: ரோமிங் ராமன்

Tuesday, July 17, 2012

பஞ்சாங்கம் மற்றும் குறள்

In Tamil - பஞ்சாங்கம் - 17.07.2012




வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆடி மாஸம் 02ம் திகதி - ஜூலை 17 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : செவ்வாய்கிழமை
திதி :
திரயோதசி காலை மணி 8.32 வரை பின் சதுர்த்தசி
நக்ஷத்திரம் :
மிருகசீரிஷம் காலை மணி 8.33 வரை பின் புனர்பூசம்
யோகம் :
த்ருவம் 18.25
கரணம் :
வணிஜை 6.16 வரை பின் பத்ரம் 37.45
சூரிய உதயம் :
சூரிய உதயம் 06.02
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.16
அஹசு :
நாழிகை 31.23
லக்ன இருப்பு :
கடகம் மணி 2.08
இராகு காலம் :
காலை 7.32 முதல் 9.02 வரை
எமகண்டம் :
காலை 10.32 முதல் 12.02 வரை
சூலம் :
கிழக்கு பரிகாரம்: தயிர்

  o கேது
குரு சுக்(வ)
புதன் சந்
o
இன்றைய கிரஹநிலை
சூர்
o o
o ராகு o செவ் சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: விசாகம், அனுஷம்
மாஸ சிவராத்திரி, கரிநாள்.

.


----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் புனர்பூசம் 4
சந்திரன் மிதுனம் -
செவ்வாய் ஹஸ்தம் 1
புதன் புனர்பூசம் 1
குரு ரோகினி 2
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4


இன்றைய குறள்: அழுக்காறாமை
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
பொருள்: பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

Monday, July 16, 2012

காஞ்சி குமரக்கோட்டம்

முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை திருவுருவங்கள் நாகம் குடைபிடித்த நிலையில் காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் காணப்படுகின்றன. இது இங்கு மட்டுமே காணப்படும் விசேஷ உருவமாகும். முருகப்பெருமானுக்கு 5 தலை நாகம் குடை பிடித்திருக்கிறது. வள்ளி, தெய்வானைக்கு 3 தலை நாகம் குடை. இந்த திருக்கோலத்தை கல்யாணசுந்தரர் கோலம் என்பர். சுப்பிரமணியருக்கு வைகாசி பிரம்மோற்சவத்தில் 11ம் நாள் வள்ளியுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஐப்பசி கந்தஷஷ்டி திருவிழாவில் தெய்வானையுடன் திருமணம். மிகவும் அபூர்வமான இந்த திருக்கோலத்தை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்களும் நீங்கும். கால சர்ப்ப தோஷம் அகலும். திருமணத்தடைகள் விலகி கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும்.

இன்றைய பஞ்சாங்கம் 16.07.2012 - குறள்

In Tamil - பஞ்சாங்கம் - 16.07.2012




வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆடி மாஸம் 01ம் திகதி - ஜூலை 16 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : திங்கட்கிழமை
திதி :
துவாதசி காலை மணி 6.58 வரை பின் திரயோதசி
நக்ஷத்திரம் :
ரோகினி காலை மணி 6.22 வரை பின் மிருகசீரிஷம்
யோகம் :
விருத்தி 17.48
கரணம் :
தைதுலம் 15.55 வரை பின் கரஜி 34.19 வரை
சூரிய உதயம் :
சூரிய உதயம் 06.02
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.16
அஹசு :
நாழிகை 31.24
லக்ன இருப்பு :
கடகம் மணி 2.12
இராகு காலம் :
காலை 7.32 முதல் 9.02 வரை
எமகண்டம் :
காலை 10.32 முதல் 12.02 வரை
சூலம் :
கிழக்கு பரிகாரம்: தயிர்

  o சந் கேது
குரு சுக்(வ)
புதன்
o
இன்றைய கிரஹநிலை
சூர்
o o
o ராகு o செவ் சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: ஸ்வாதி, விசாகம்.
தக்ஷிணாயன புண்ணியகாலம், தர்ப்பணம், க்ருஷ்ணபக்ஷ சோம மஹாபிரதோஷம்.

.


----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் புனர்பூசம் 4
சந்திரன் மிருகசீரிஷம் -
செவ்வாய் ஹஸ்தம் 1
புதன் புனர்பூசம் 1
குரு ரோகினி 2
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4


இன்றைய குறள்: அழுக்காறாமை
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

பொருள்: எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.


Friday, July 13, 2012

நாட்டுநடப்பு







இணையத்திலிருந்து எடுத்தது.

கார்ட்டூனுக்கு இருக்கும் சக்திக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

என்றைக்கு ஈழத்தமிழர்கள் சாவுக்கு கிரியாஊக்கியாக காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சிகளும் இருந்ததோ அன்றே எங்கள் குடும்பத்தினர்கள் 50 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள் கூடி காங்கிரஸூக்கு ஓட்டு போட மாட்டோம் என உறுதிமொழி எடுத்திருக்கிறோம். ஏஸி அறையில் உட்கார்ந்து கொண்டு முந்திரி பக்கோடா சாப்பிட்டுக் கொண்டு வெளிநாட்டு சிகரெட்டை ஊதிக்கொண்டு இருக்கும் பதாரிகளுக்கு ஏழைகளின் கஷ்டம் தெரியாது. இந்த ....... எல்லாம் கொண்டு போய் வயல்வெளிகளிலும் வியர்க்க வியர்க்க வேலை வாங்கினால் தெரியும் உழைப்பின் அருமை. ஏழைகளிடம் ஆட்டையைப்  போட்ட பரம்பரை சொத்துக்களை வைத்துக் கொண்டு வாழும் மனிதர்களுக்கு தெரியாது 1 ரூபாயின் மதிப்பு.


Thursday, July 12, 2012

நல்ல தீர்த்தத்தில் பிறக்கும் சங்கு

உவர்நீரில்தான் சங்கு பிறக்கும் ஆனால் நல்ல தீர்த்தத்தில் சங்கு பிறக்கிறது. அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். இந்த அதிசயம் நடக்கும் இடம் திருக்கழுக்குன்றம். இங்குள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோவில். கோவில் தீர்த்தத்திற்கு சங்கு தீர்த்தம் என்று பெயர். இதில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நல்ல சங்குகள் தோன்றுகின்றன. சங்குகள் தோன்றுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் குளத்தில் உள்ள நீரின் நிறம் பெரிதும் மாறுகிறது. இந்த நிற மாறுபாட்டை மக்கள் தெரிந்து கொண்டு குளத்தில் துணி துவைப்பது, குளிப்பது முதலானவற்றை நிறுத்தி விடுவார்கள். சங்கு என்றைக்கு தோன்றி இருக்கிறதோ அதற்கு முதல் நாள் குளத்தில் ஆயிரக்கணக்கான குமிழ்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். மறுநாள் குளத்தின் ஏதாவது ஒரு பகுதியில் சங்குகள் காணப்படும். அந்தச் சங்குகள் மந்திரமுறைப்படி சேகரிக்கப்படும். மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு கொண்டு சென்று அபிஷாகத்திற்குப் பயன்படுத்தப்படும்.
 
 

கணித்தமிழ் வல்லுநர் மா.ஆண்டோபீட்டர் மறைவு

கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவுநரும், கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான திரு.மா.ஆண்டோபீட்டர் அவர்கள் இன்று(12.07.2012) அதிகாலை 1.30 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். தந்தைபெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். உத்தமம் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர்.

ஆண்டோ பீட்டர்
அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் மாணவர்களுக்கும் நிறுவனத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். கணினி,இணையம்,அச்சத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.



மூலம்: http://muelangovan.blogspot.in/

ஆண்டோ பீட்டரின் ப்ளாக்: http://www.antopeter.blogspot.in/

நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்த ஆண்டோ -
நீவிர் வாழ்ந்தது சில ஆண்டோ
படைத்தீர் பல சாதனைகளை ஆண்டோ
உம்மைத் தவிர எங்களுக்கு வேறுண்டோ


பஞ்சாங்கம் - 12.07.2012

In Tamil - பஞ்சாங்கம் - 12.07.2012






வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 28ம் தியதி - ஜூ்லை 12 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : வியாழக்கிழமை
திதி :
நவமி இரவு 1.15 வரை பின் தசமி
நக்ஷத்திரம் :
அசுபதி (அஸ்வினி) இரவு 10.48 வரை பின் பரணி
யோகம் :
ஸூகம் 12.15
கரணம் :
தைதுலம் 15.55 வரை பின் கரஜி 48.07 வரை
சூரிய உதயம் :
சூரிய உதயம் 06.08
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.36
அஹசு :
நாழிகை 31.11
லக்ன இருப்பு :
மிதுனம் 0.16
இராகு காலம் :
மதியம் 1.38 முதல் 3.08 வரை
எமகண்டம் :
காலை 6.08 முதல் 7.38 வரை
சூலம் :
தெற்கு பரிகாரம்: நல்லெண்ணை

சந் o கேது
குரு சுக்(வ)
சூர்
o
இன்றைய கிரஹநிலை
புதன்
o o
o ராகு o செவ் சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: உத்திரம், ஹஸ்தம்
.


----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் புனர்பூசம் 2
சந்திரன் மீனம் -
செவ்வாய் ஹஸ்தம் 1
புதன் புனர்பூசம் 3
குரு ரோகினி 1
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4



இன்றைய குறள்: அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

பொருள்: உள்ளத்தில் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்குரிய ஒழுக்கமாகக் கொள்ள வேண்டும்.