Monday, April 8, 2013

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 02

வெற்றிகளைக் குவித்து நினைத்தது நடந்து இனிக்கும் விஜய வருஷம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறக்கிறது. பிறக்கப் போகும் புத்தாண்டில் செல்வங்கள் சேரவும், சிறப்புடன் வாழ்ந்து மகிழ்ச்சியான தருணங்களை எதிர்கொள்ளவும், இயற்கை அன்னை சீற்றம் எதுவும் கொள்ளாமல் இருக்கவும், நலமும், வளமும் நாட்டில் மேலோங்கவும், புத்தாண்டின் தொடக்க நாளில் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாட்டை மேற்கொள்வது அவசியமாகும். வரப்போகும் விஜய வருடம் சூரியனின் நக்ஷத்திரமான கார்த்திகையில் பிறப்பதால் மண்ணில் வாழும் மக்களுக்கெல்லாம் அரசாங்கம் மூலம் நன்மைகள் பல பெருகும்.

நிகழும் மங்களகரமான விஜய வருஷம், உத்தராயனம் வஸந்த ரிது சித்திரை மாதம் 1ம்தேதி (14.04.2013) ஞாயிற்றுகிழமையன்று கார்த்திகை நக்ஷத்திரம் ரிஷப ராசி தனுசு லக்னத்தில் புதுவருஷம் பிறக்கிறது. புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் 9 கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷத்தை அதிகமாக அள்ளித்தரும் வகையில் இருப்பது சிறப்பம்சமாகும். ஆண்டின் தொடக்கத்தில் பூர்வபுண்ணிய விரையஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சியாகவும், அஷ்டமாதிபதி சந்திரன் ஆறாமிடமிடத்தில் உச்சமாகவும், தனதைரியாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சமாகவும் இருக்கிறார்கள். மேலும் குரு தனஸ்தானத்தையும், தொழிற்ஸ்தானத்தையும், விரையஸ்தானத்தையும் பார்க்கிறார். நாட்டிலும் வீட்டிலும் பல நல்ல நிகழ்ச்சிகளை நடக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் வளரும். மக்களின் கவலைகள் தீரப் போகிறது. ராணுவம் பலமுள்ளதாக மாறும். புதிய புதிய ஆயுதங்களும், படைகளும் பெருகும். பொருளாதாரம் உயரும். ஆத்மகாரகனான சூரியன் நக்ஷத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் ஆன்மா மாற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். லோகமாகவும் லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவனுமாகிய சிவனின் புதல்வனுமாகிய ஸ்ரீசுப்பிரமணிய கார்த்திகேயனின் நக்ஷத்திரத்தில்  இந்த ஆண்டு பிறக்கிறது. முருகனின் அருள் கடாக்ஷம் வருடம் முழுவதும் மக்களுக்குக் கிடைக்கும்.

இந்த ஆண்டு நவநாயகர்கள்:
ராஜா - குரு, மந்திரி - சனி, அர்க்காதிபதி - சனி, மேகாதிபதி சனி, ஸஸ்யாதிபதி - செவ்வாய், சேனாதிபதி - சனி, ரஸாதிபதி - குரு, தான்யாதிபதி - சந்திரன், நீரஸாதிபதி - செவ்வாய், பசுநாயகர் - கோபாலர்.

ஜெகத் உலக ஜாதக விஷயம்:
புத்தாண்டு ஜென்ம நக்ஷத்ரம் - கிருத்திகை 4ம் பாதம், ரிஷப ராசி. ஜென்ம லக்னம் - தனுசு. வர்கோத்திர யோகம், சஷ்டாஷ்டக தோஷம், குரு சந்திர யோகம், கெஜகேசரி யோகம் ஆகியன. தேவதை - அக்னி. பஞ்சபக்ஷி - வல்லூறு. சங்கிராந்தி புருஷர் - கரஜீ, ஆண் யானை வாகனம். நல்ல மழை வருஷிக்கும். திசை இருப்பு: சூரியன் - 00 வருஷம் - 10 மாதம் - 11 நாட்கள் - சூர்ய திசை - செவ்வாய் புக்தி - புதன் அந்தரம் நடக்கிறது.

நவநாயகர் பாதசாரம்:
சூரியன் - அஸ்பதி - 1
சந்திரன் - கிருத்திகை - 4
செவ்வாய் - அசுபதி - 1
புதன் - உத்திரட்டாதி - 4
குரு - ரோகினி - 4
சுக்கிரன் - அசுபதி - 1
சனி - ஸ்வாதி - 2
ராகு - விசாகம் - 1
கேது - பரணி - 3


ஆதாய விரைய விபரங்கள்:
விரையம் - 56, ஆதாயம் - 53. ஆதாயத்தை விட விரையம் அதிகம். இதன் பலன்: அரசாங்கத்திற்கு வருவாய் குறைந்து பல புதிய வரிகளை விதிக்கும். விலைவாசி கடுமையாக உயரும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். மழை அதிகமாக வருஷிக்கும்.

பொது பலன்கள்:
பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமைஎழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும்.  விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் கடன் வாங்குவதும் மேலுள்ளவர்கள் கொடுத்து அதற்கேற்றார் போல் வட்டி வசூலித்தலும் நடைபெறும். இடி மின்னல் அதிகம். சூறாவளி காற்றுடன் அதிக மழை ஏற்படும்.  இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். விமான போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். பூச்சி மற்றும் கொசுக்கள் பிரச்சனைகள் தீரும். அரபிக்கடலில் சத்தமும் நிலநடுக்கமும் உண்டாகும். ராக்ஷஸ அலைகள் உண்டாகும். மாலத்தீவு கடுமையாக பாதிக்கப்படும். இந்தோனேஷியா, ஜப்பான், இலங்கை, அந்தமான், ஒடிஸா, ஆந்திரா போன்ற ஊர்களுக்கு கடுமையான புயல் பாதிப்புகள் உண்டாகும். ராணுவம் தங்களது வியூகங்களை அடிக்கடி மாற்றும். அந்திய தேசத்திலிருந்து நமது நாட்டிற்கு  மறைமுக இன்னல்கள் வரும்.  வரும் ஆண்டில் வாகனம், கப்பல், விமானம், ரயில் போன்றவைகளில் விபத்துக்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. குண்டுவெடிப்பு, அக்னி அபாயங்கள் ஏற்படலாம். இந்தியாவில் ஜாதி, மதம் வெறிச் சண்டைகள், கலகங்கள் ஏற்படலாம். தீவிரவாதங்களை ஒடுக்க, கட்டுபடுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய சட்ட திட்டங்களை உருவாக்கும். அரசுகளுக்குள் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். தமிழகம் எதிர்பார்த்தபடி இவ்வாண்டில் மழை பொழியும். முக்கியமான வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மறையும். பசுமையான வனப்பகுதிகளாக மாறும். ராகு கேதுவால் நாட்டில் பக்தி பெருக்கமும் ஆலயங்களில் கூட்டம் அதிகரிப்பும் காணப்படும். ஆலய நிர்வாகம் வருமானப் பெருக்கத்திற்கான வழிமுறைகளை கொண்டு வரலாம். தியானம், யோகா, வேள்விகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். உணவு தானியங்கள், காய், கனிகளின் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும். மண்ணென்ணைய், டீசல், பெட்ரோல், கேஸ், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்தாலும் தட்டுப்பாடு ஏற்படும். மக்களுக்கு இதற்கான தேவை அதிகரிக்கும். தங்கம் வெள்ளி விலை ஏற்றமடையும். விவசாயம் செழிக்கும். மகசூல்  அதிகரிக்கும். விவசாயிகளின் வாழ்வில் பிரகாசம் ஏற்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு இவ்வாண்டு சத்தியசோதனையாக அமையும். தொழிலதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவும், சலுகைத் திட்டத்தால் பயன்களும் அடைவார்கள். கலைத்துறையினருக்கு புதுவருடம் சம்பாத்தியம், புகழ், பெருமை ஏற்படும். புதுமுகங்களின் வரவு அதிகமாகும். கலைத்துறையினர் சிலருக்கு அரசியலில் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி அதிகமாகவும், சாதனைகள் புரியவும் செய்வார்கள். நமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று அந்நிய செலாவனி அதிகமாகும். சனியுடன் ராகு இணைவதால் மத்திய அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர். பொன் பொருள் பித்தளை போன்ற உலோகங்கள் விலை கடுமையாக உயரும். நாட்டின் பாதுகாப்பு உயர்த்த வேண்டி வரும். பாலைவனத்தில் உஷ்ணம் அதிகரிக்கும். கடல் அவ்வப்போது உள்வாங்குவதும் நீண்ட காலம் நிசப்தமாகவும் இருக்கும். பேப்பர், முடி, விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும். அயல்நாட்டு வியாபாரம் செழிக்கும். தென்மாநிலங்களில் அவ்வப்போது கலவரங்கள் வந்து வந்து செல்வதும், அதனை அரசு அடக்குதலும் நடக்கும். ஏரி குளம் அணைகள் போன்றவை நிரம்பி வழியும். கடுமையான உஷ்ணத்தால் மக்கள் பாதிக்கப்படுவர். யாத்ரீகர்களுக்கு மிகுந்த நற்காலமாக இருக்கும். புண்ணிய க்ஷேத்திரங்களில் கர்ம காரியங்கள் தொய்வின்றி நடைபெறும். வாசனை திரவியங்கள் அதிக அளவில் விற்பனையாகும். அறிவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மைல்கல்லை எட்டும். புதிது புதிதாக மக்களுக்குப் பயன்படும் பொருட்களை வியாபாரிகள் அறிமுகம் செய்வார்கள். வீண் வதந்தி செய்வோர், மக்களுக்கு குந்தகம் விளைவிப்போர் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு ஏற்படும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்:
மே மாதம் 28ம் தேதி  வாக்கியப் பஞ்சாங்கப்படி - குரு பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
ஜூலை 6ம் தேதி - வாக்கியப் பஞ்சங்கப்படி - சனி பகவான் வக்கிரம் நிவர்த்தி ஆகிறார்.

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 01

ஏப்.14ல் "விஜய' தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆனாலும், ஏப்.13 சனிக்கிழமை வளர்பிறை சதுர்த்தி, கார்த்திகை நட்சத்திரம் அமிர்தயோக வேளையில் இரவு 11.52 தனுசு லக்னத்திலேயே பிறந்து விடுகிறது. புத்தாண்டு பிறக்கும் நேரத்தின் அடிப்படையில், ஆண்டு முழுதும் நல்லமழை பொழியும் என்றும், விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர் என்றும் பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டு அறுபதில் விஜய 27வது ஆண்டாகும். சுபகிரகமான குரு, இந்த ஆண்டின் ராஜாவாக இருக்கிறார். குருவும், சந்திரனும் பலமாக இருப்பதால் இவ்வாண்டில் ராஜயோகம் பெறுபவர்கள் எண்ணிக்கை உயரும்.

விரைவில் பலன்கள்

Saturday, April 6, 2013

27 நக்ஷத்திரகாரர்களுக்கும் உரிய நக்ஷத்ர காயத்ரி

அசுவினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோகிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

Wednesday, April 3, 2013

அண்ணாமலையார் அறப்பணிக்குழுவின் உழவாரப்பணி

நாள் : 21.04.2013 ஞாயிற்றுக்கிழமை

கோவில் : அ/மி காசி விசாலாக்ஷி ஸமேத காசி விஸ்வநாதர் கோயில்,
காந்தி தெரு,
நாசரேத்பேட்டை,
சென்னை 600123

நேரம் : காலை 7.30 முதல்

அமைவிடம் : பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் மார்கத்தில் 2 கி.மீ.தொலைவில் நாசரேத்பேட்டை,
பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து, நேரு சிலையை ஒட்டி மேற்கு திசையில் செல்லும் சாலையில்
1/2 கி.மீ. சென்றால் இடது புறத்தில் காந்தி தெருவில் திரும்பினால் 100 மீ. தொலைவில் உள்ளது ஆலயம்.

கார்கோடகனுக்கு முக்தி கிடைத்த ஸ்தலம்,

நந்தி விக்ரஹத்தில் பாம்பு பார்க்கலாம்.

அனைவரும் இப்பணியில் கலந்து கொள்ள வாருங்கள்.

திருச்சிற்றம்பலம்

-- ramachandran.v 9884080543

Friday, March 29, 2013

மயிலாப்பூர் திருக்கல்யாணம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் நிறைவு விழாவாக கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

பழநி கோவிலில், தங்க ரத புறப்பாடு இன்று முதல் மீண்டும் நடக்கிறது.

பழநி கோவிலில், தங்க ரத புறப்பாடு, இன்று முதல், மீண்டும் நடக்கிறது. பழநி கோவில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த மார்ச் 20ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் பல்வேறு வாகனத்தில், முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன், வீதி உலா வந்தார். நேற்று முன்தினம் இரவு, வாண வேடிக்கை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 




விழாவை முன்னிட்டு, கடந்த, 24ம் தேதி முதல், நிறுத்தப்பட்டிருந்த, தங்க ரத புறப்பாடு, இன்று முதல், மீண்டும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 26, 2013

பஞ்சகவ்யம் என்றால் என்ன?


பசு மாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவைக்கு பஞ்சகவ்யம் என்று பெயர். பசும்பால் 7 பங்கு, பசுந்தயிர் 3 பங்கு, பசு நெய் 1 பங்கு, கோஜலம் (பசுவின் சிறுநீர்) 1 பங்கு, பசுங்சாணத்தைக் கரைத்து வடிகட்டிய நீர் (கோமய ரஸம்) அரைபங்கு என்னும் ஐந்தையும் கலந்து தர்பைப் புல் ஊறிய நீரில் கலந்து உடனடியாக உட்கொள்ள வேண்டும். வேதம் கற்றவர்கள் கோ சூக்தம் என்னும் மந்திரத்தை உச்சரித்து பஞ்சகவ்யம் தயாரிப்பார்கள். இதை அருந்தினால் மனித சரீரம் தூய்மை அடைகிறது என்று நமது சாஸ்திரம் கூறுகிறது. பழங்காலத்தில் ஆலயங்களில் பூஜை செய்பவர்கள் தினசரி பஞ்சகவ்யம் அருந்திவிட்டுத்தான் கர்பகிரகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும் என்னும் விதி பின்பற்றப்பட்டு வந்தது.

பஞ்சகவ்யம் சாப்பிடுவோர்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் பஞ்சகவ்யத்துக்கு உண்டு. அறிவியல் ரீதியாக இது எந்த அளவுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஆனால் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி பிரிவில் பஞ்சகவ்யம் பற்றி அரிய தகவல்கள் பல உள்ளன. கோமூத்திரத்துக்கு வருணனும், கோமயத்துக்கு அக்னியும், பாலுக்கு சந்திரனும் தயிருக்கு வாயுவும் நெய்க்கு விஷ்ணுவும் அதிபதிகள் என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன. இதை பஞ்சகௌவ்யம் என்றும் கூறுவர். ஆபிசாரப்ரயோகம், காத்து, கருப்பு, துர்தேவதை தொல்லை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பஞ்சகவ்யம் கொடுத்தால் அவை நீங்கிவிடும்
.
அபிதான சிந்தாமணி என்னும் நூலில் ஐந்து வெவ்வேறு நிறத்தில் உள்ள ஐந்து பசுக்களிடம் இருந்து கிடைத்த ஐந்து பொருட்களைக் கொண்டு பஞ்சகவ்யம் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Friday, March 15, 2013

Radha Kalyanam on March 17


Radha Kalyanam on March 17

Kartik Fine Arts has arranged for a Radha Kalyana Mahotsavam” by K. Sattanatha Bhavathar and party on March 17, 8 a.m onwards

It is at Bharatiya Vidya Bhavan hall, Mylapore and is open to all.

Call 9094829675 for details.

Thursday, March 14, 2013

பங்குனி மாத ஆன்மீகக் குறிப்புகள்:

பங்குனி மாத ஆன்மீகக் குறிப்புகள்:

மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 - 2013

குறிப்பு: கீழ்க்காணும் அனைத்தும் சென்னை அயனாம்சத்திற்கு கணிக்கப்பட்டவை.

Monday, March 11, 2013

சிவராத்திரி - அப்டேட் நான்கு

அன்பின் சொந்தங்களே,
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவராத்திரி அனைத்து கால பூஜைகளும் இனிதே முடிந்து விட்டது. நான்கு காலத்திற்கும் சேர்த்து 12 ஆவர்த்தி ருத்ர ஜெபம் முடிந்து கற்பூரம் ஆரத்தி இனிதே நடைபெற்றது. 
 
நன்றி.
 
குறிப்பு: உடல்நலம் சரியில்லாததால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. வீட்டில்தான் அனைத்து பூஜைகளும்.