கன்னி ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை
கன்னி: (உத்திரம் 2, 3 ,4, ஹஸ்தம், சித்திரை 1, 2) சுயகாலில் முன்னேறும் கன்னி ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் சனி, மூன்றாமிடத்தில் ராகு, ஆறாமிடத்தில் ராசிநாதன் புதன், ஏழில் சூரியன், எட்டாமிடத்தில் குரு, சுக்கிரன், ஒன்பதாமிடத்தில் கேது, பன்னிரெண்டாமிடத்தில் செவ்வாய் என கிரக ஆதிக்கம்உள்ளது. மார்ச் 14ம் தியதி ஸ்வய ராசிக்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் பாக்கியஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.குடும்ப தன ஸ்தானத்தை குருவும், விரையஸ்தானத்தை குரு, ராசிநாதன் புதன் பார்ப்பதும், களத்திர ஸ்தானத்தில் விரையாதிபதி இருப்பதும், மங்களகாரகன் செவ்வாய் ராசிநாதன் புதனைப் பார்ப்பதும் இவ்வளவு நாட்களாக இருந்த திருமண தடைகள் நீங்கும். கல்யாண ஏற்பாடுகள் கூடி வரும். உங்கள் கவலைகள் யாவும் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும். பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். மூன்றாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் தைரியம் பளிச்சிடும். புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நான்காம் ஸ்தானாதிபதி தனது ஸ்தானத்தைப் பார்ப்பதால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சனியே ஆறாம் அதிபதியாகி அவர் குடும்ப ஸ்தானத்தில் இருந்தாலும் அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதாலும் குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும். எனினும் எட்டுக்குடையவர் பன்னிரெண்டில் உலவுவதால் பணியாளர்களால் பிரச்ச்னைகள் வரலாம்.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்வாய்ப்புகள் காத்திருக்கிறது. அரசியலில் உள்ளவர்கள் சில தியாகங்கள் செய்ய வேண்டி வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் கவனக்குறைவு வரலாம். ஈடுபாடு அவசியம்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 24, 25, 26
பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நாராயணரை வழிபடுங்கள். பசுவுக்கு ஆகாரம் கொடுப்பது நல்லது.
No comments:
Post a Comment