விருச்சிகம் ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை
விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிலும் நேர்படப் பேசும் விருச்சிக ராசி வாசகர்களே ராசியில் ராகு, நான்காமிடத்தில் புதன் ஐந்தாமிடத்தில் சூரியன், ஆறாமிடத்தில் குரு, சுக்கிரன், ஏழாமிடத்தில் கேது, பத்தாமிடத்தில் செவ்வாய், பன்னிரெண்டாமிடத்தில் சனி என கிரகங்கள் வீற்றிருக்கிறார்கள். மார்ச் 14ம் தியதி லாபஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் களத்திரஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.ராசிநாயகன் பத்திலும், தனஸ்தானாதிபதி தனவாக்குகுடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதாலும் குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நிலம் வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும். சொன்ன சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்களால் பெருமை சேரும். உங்கள் விடாமுயற்சிக்கு வெற்றிகளை குவிப்பீர்கள். அலுவலகத்தில் கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும். உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும். மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 29, 30, 31
பரிகாரம்: கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்கள் தீர ஸ்ரீ கணபதி மற்றும் துர்க்கையை வழிபடுங்கள். மது மாமிசத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment