Monday, July 6, 2026

உண்மையை ஆதாரத்தோடு பேசுவோம். ஜோதிடத்தின் மரியாதையை காப்போம்.

அனைவருக்கும் பரம்பரை ஜோதிடர் மனத்துக்கினியான் @ பெருங்குளம் ராமகிருஷ்ணனின் அன்பின் வணக்கங்கள். 🙏

சமீபத்தில் ஒரு வீடியோவை பார்த்தோம். அதை பார்க்கும்போது ஒரு ஜோதிடராக எங்கள் மனம் மிகவும் வருத்தமடைந்தது.

அந்த வீடியோவில், கரூர் சம்பவம், கும்பகோணம் மகாமக விழா நெரிசல் போன்ற துயர சம்பவங்களை அரசியல் தலைவர்களின் பதவியேற்புடன் தொடர்புபடுத்தி, "உயிர் பலி கொடுத்த பிறகுதான் ஆட்சி கிடைத்தது" என்ற வகையில் பேசப்பட்டிருந்தது.

இந்தக் கருத்து எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறப்படுகிறது என்பது எனக்குப் புரியவில்லை.

ஒரு எளிய கேள்வி...

ஜெயலலிதா அவர்கள் 24.06.1991 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் கும்பகோணம் மகாமக நெரிசல் சம்பவம் 18.02.1992 அன்று நடந்தது. அப்படியிருக்க, பின்னர் நடந்த ஒரு சம்பவத்தை முன்பே கிடைத்த பதவியுடன் எப்படி தொடர்புபடுத்த முடியும்?

அதேபோல், உயிர் பலி கொடுத்தால்தான் முதலமைச்சராக முடியும் என்றால், ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆகியோர் முதலமைச்சரானபோது அப்படிப்பட்ட எந்த ஆதாரமும் உள்ளதா?






ஜோதிடம் என்பது பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பழமையான ஒரு சாஸ்திரம். அதை ஆதாரமற்ற கருத்துகளாலும், பரபரப்பை உருவாக்கும் பேச்சுகளாலும் மக்களிடம் தவறாகப் புரியவைக்கக் கூடாது.

அரசு பதவியேற்கும் போது பஞ்ச மகார பலி என்பது சில இடங்களில் உண்டு. பாரம்பரிய சாஸ்திரங்களில் கூறப்படும் பஞ்ச மகார பலி என்பது மனித பலியைக் குறிக்காது. வரலாற்றிலும், சாஸ்திரங்களிலும் ராஜ்யாபிஷேக சடங்குகள் மனித பலியுடன் தொடர்புடையவை என்ற நம்பகமான ஆதாரங்கள் இல்லை.

”ஒரு பேட்டியை நடத்துபவரும், அதில் கருத்து தெரிவிப்பவரும் பேசும் விஷயங்களுக்கு முன் உரிய ஆதாரங்களை ஆய்வு செய்வது அவசியம்.”

ஜோதிடத்தை நேசிக்கும் ஒருவராகவும், பல தலைமுறைகளாக ஜோதிட சேவையில் இருக்கும் ஒருவராகவும், அரச குடும்பங்களுக்கு ஜோதிடம் பார்த்த பரம்பரையில் வந்த ஒருவராகவும் நாங்கள் சொல்வது - இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகள் ஜோதிடத்தின் மதிப்பைக் குறைக்கக் கூடாது என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.

உண்மையை ஆதாரத்தோடு பேசுவோம்.
ஜோதிடத்தின் மரியாதையை காப்போம். 🙏

மண் பயனுற வேண்டும்.

அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42

No comments: