Friday, July 8, 2011

ஒரு தாயின் கண்ணீர்!

ஒரு தாயின் கண்ணீர்!
==================

இரத்தப்புற்றுநோயால் பீடிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் நீரஜ் பற்றி, “சிறுவனின் உயிரைக் காப்போம்” என்ற தலைப்பில் சென்ற மாதம் இக் குழுமத்திலும் பிற குழுமங்களிலும் ஓர் பதிவு வெளியிட்டிருந்தேன்.

அவன் விரைவில் நலம்பெற வேண்டி நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்த போதிலும், இறைவனின் முடிவு வேறொன்றாய் இருந்திருக்கிறது. சிறுவனின் இரத்த ஓட்டத்தால் புற்றுநோய்க்கிருமிகள் அவனது மூளையைப் பாதித்து, கை, கால்கள் செயலிழந்த நிலையில் சில நாட்கள் இருந்து, சென்ற 3.7.2011 மாலை சென்னை அரசு பொதுமருத்துவமனையில் உயிரிழந்தான். அவனது மரணச்செய்தி எங்கள் ‘அலைபேசி குறுஞ்செய்தி (Mobile SMS) கவிஞர்கள் குழும’ நண்பர்களால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங் களிலுள்ள அனைத்து நண்பர் களுக்கும் தெரியப்படுத்தப்பட்டு, கண்ணீர் அஞ்சலி கவிதைகளும், அவனது தாய் திருமதி சுமதி அவர்களுக்கு அனுதாபச்செய்திகளும் வந்து குவிந்தவண்ணம் இருந்தன.

3 ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவனை இழந்து, நோயுற்ற இந்த ஒரே புதல்வனை எப்படியேனும் காப்பாற்றிவிடவேண்டுமென்ற முயற்சியில், 3 ஆண்டுகள் மருத்துவமனைகளிலேயே காலத்தைக் கழிக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, விடா முயற்சியோடு புதல்வனுக்கு மருத்துவச் சிகிச்சையை அளித்து வந்த தாய் திருமதி சுமதி (சேலம்)யின் பொறுமையும், தன்னம்பிக்கையும் வேறு எந்த தாய்க்கும் இருந்திருக்காது என்பது அவரோடு பழகிய என் போன்ற நண்பர்களுக்குத்தான் தெரியும்.

திருமதி சுமதியின் துயரம் விரைவில் மறைந்து, அவரது எதிர்காலம் வளமானதாக மலர நமது அனைவரின் பிரார்த்தனைகள் துணை நிற்கட்டும்! சிறுவனின் நோய் தீர பிரார்த்தனை செய்தும், தங்களாலியன்ற நிதியுதவி அளித்து உதவியவர்களுக்கும் சுமதி சார்பில் இதன் மூலம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- கிரிஜா மணாளன்
(செயலாளர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் ( திருச்சி மாவட்டக்கிளை)
Email: girijamanaalanhumour@gmail.com

Wednesday, July 6, 2011

அழகர் கோவில் கும்பாபிஷேகம் - ஹரிமணிகண்டன்


திருமாலிருஞ்சோலை என்றும், தென்திருப்பதி என்றும் போற்றி புகழப்படும் புண்ணியஸ்தலமானது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்பட்ட இக்கோவிலில் கடந்த 1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.
  
பின்னர் அதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலாலய பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் ராஜகோபுரம், மூலவர் சன்னதி, தங்க விமானம், கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் மற்றும் உபசன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு அங்குள்ள கோபுரங்கள், சிலைகள் வர்ணம் பூசப்பட்டு முழு வீச்சில் பணிகள் முடிந்தது.   பணிகள் நிறைவு பெற்றதையொட்டி அரசு உத்தரவின்பேரில் வருகிற 10-ந்தேதி அன்று மகா கும்பாபிஷேக விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. 

6-ந்தேதி மாலை யாக சாலை பூஜைகள் தொடங்கு கிறது. 7, 8 ஆகிய நாட்களுக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. 10-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 9.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
 
கள்ளழகர் கோவிலில் உள்ளா பள்ளியில் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து 20000 பேருக்கு அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.  

விருந்துக்கு சேவை செய்யஅழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

We need volunteers for feast service ,if you are interests please register with us.

Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai
C/o Chamundi Vivekanandan
Chamundi Supari
New 41 old 20/3  West Tower Street ,Madurai -625 001
Cell: 94424 08009,Shop: 0452-2345601

Mr. Chamundi Vivekanandan is my father, Now i am in chennai , 
Regarding above feast call /drop me.



Thank & Regards

Harimanikandan.V
H/P   :            +91 9841267823      
end_of_the_skype_highlighting

Saturday, July 2, 2011

இன்றைய பஞ்சாங்கம் - 02-07-2011

In Tamil - பஞ்சாங்கம் - 02-07-2011

வருஷத்தின் பெயர் : கர வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 17ம் தியதி; ஆங்கிலம் ஜூலை 02 2011
அயணம் : உத்தராயணம்
ரிது : கிரீஷ்ம ரிது
கிழமை : வெள்ளிக்கிழமை
திதி :
பிரதமை மாலை மணி 02.09 வரை பின் துவிதியை
நக்ஷத்திரம் :
புனர்பூசம் நக்ஷத்ரம் இரவு மணி 11.46 வரை பின் பூசம்
யோகம் :
துருவம்  யோகம் நாழி 04.24
கரணம் :
கரணம் நாழி 20.23
சூரிய உதயம் :
காலை மணி 6.06
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.35
அஹசு :
நாழிகை 31.33
லக்ன இருப்பு :
மிதுனம் -  நாழி 02.32
இராகு காலம் :
காலை  09.06 முதல் 10.36 வரை
எமகண்டம் :
மாலை 01.36 முதல் 03.06 வரை
சூலம் :
கிழக்கு


o வியா செ  கே சூரி புத சுக் 
o
இன்றைய கிரஹநிலை
o
o o
o ரா o சனி


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: கேட்டை, மூலம்.
சந்திர தரிசனம்.
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 3
சந்திரன் கடகம் (29.33 நாழிகைக்குப் பிறகு) -
செவ்வாய் உரோஹினி 2
புதன் பூசம் 2
குரு அசுபதி 4
சுக்ரன் மிருகசீரிஷம் (47.44 நாழிகைக்குப் பிறகு) 4
சனி வக்ர நிவர்த்தி -
ராகு கேட்டை 4
கேது மிருகசீரிஷம் 2

Friday, July 1, 2011

தூத்துக்குடி வானொலியில் கவிஞர் இரா .இரவி


1.07.2011 இன்று 8.30 இரவு 8.30 மணி முதல்8.45 மணி வரை படைப்பரங்கத்தில் தூத்துக்குடி அகில இந்திய பன்னாட்டு வானொலியில்  ,கவியரசு கண்ணதாசன் ,அன்னை தெரசா, இயற்கை நேசம் பற்றிய கவிதைகளும், பல்வேறு ஹைக்கூ  கவிதைகளும் கவிஞர் இரா .இரவி வாசிக்கின்றார்.கேட்டு   மகிழுங்கள் .

Thursday, June 30, 2011

இன்றைய ஜோதிடக்குறிப்பு: ஒரு வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்றி வழிபடலாமா? - பாகம் 02


ஒரு வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்றி வழிபடலாமா? - பாகம் 02

கேள்வி: விளக்கு ஏற்றும் போது என்னென்ன மந்திரங்கள் சொல்லலாம்?

பதில்: “ஸர்வ மங்கள் மாங்கல்யே” என்று தொடங்கும் மந்திரம் சொல்லலாம். “ஓம் நமசிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரம் சொல்லலாம்.  “ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரம் சொல்லலாம். “தனந்தரும் கல்வி தரும்” என்று தொடங்கும் அபிராமி அந்தாதி சொல்லலாம். ஒன்றுமே தெரியாவிட்டால் “ஓம் சக்தி பராசக்தி” என்று சொல்லியும், உள்ளார்ந்த அன்புடனும் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

கேள்வி: விளக்கு ஏற்றுவதில் ஆண்-பெண் பேதம் இருக்கிறதா?

பதில்: விளக்கு ஏற்றுவது கண்டிப்பாக பெண்கள் வீட்டில் இருந்தால் பெண்கள்தான் ஏற்ற வேண்டும். இரவு தூங்க செல்லும் முன் விளக்கை குளிரூட்டுவதற்கு கொஞ்சம் பாலை நிவேதனம் செய்த பின் அணைக்கலாம். விளக்கை வாயால் ஊதி அனைத்தல் கூடவே கூடாது. விசிறியின் மூலமாகவோ அல்லது ஏதேனும் பேப்பர் அட்டையினைக் கொண்டோ அனைக்கலாம். பெண்கள் சில நாட்களில் வீட்டில் இல்லாத சமயங்களில் ஆண்கள் இந்த வேலைகளை செய்யலாம்.

கேள்வி: விளக்கு ஏற்றுவதால் என்ன பயன்?

பதில்: நமது முன்னோர்கள் எதையுமே ஆழ்ந்து சிந்தித்துதான் சொல்லியுள்ளனர். நமது வீட்டினில் இருக்கும் எதிர்மறையான அலைகளை இந்த விளக்கின் மூலம் ஏற்படும் அலைகள் நேர்மைறையான அலைகளாக மாற்றும். அதனால்தான் கோவில்களில் இருக்கும் விளக்குகள் அளவில் பெரியதாக இருக்கும்.

கேள்வி: கண்டிப்பாக பஞ்சமுக (ஐந்து முக) விளக்குதான் ஏற்ற வேண்டுமா?

பதில்: பஞ்ச முக விளக்குதான் ஏற்ற வேண்டும் என்பது இல்லை. அதுவும் வெள்ளியில்தான், பஞ்சலோகத்தில்தான், பித்தளையில்தான் இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை.  அகல்சட்டி விளக்கு கூட ஏற்றுவது நன்மையைத் தரும். கல் விளக்கும் நன்மையை தரும். மேலும் நீங்கள் எந்த விளக்கு பயன்படுத்துகிறீர்களோ அதை குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வது உத்தமம்.

கேள்வி: நாங்கள் இருப்பது ஒரு சிறிய அறை கொண்ட வீடுதான், அதில் எப்படி விளக்கு ஏற்றுவது?

பதில்: இன்றைய சூழ்நிலையில் இதே போன்ற அமைப்புடன் தான் பல வீடுகள் உள்ளன. எனினும் விளக்கு ஏற்றுவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது ஏற்படுத்தும். எனவே அறை சிறியதாக இருந்தாலும் விளக்கு கட்டாயம் ஏற்ற வேண்டும்.

கேள்வி: எங்கள் வீட்டினில் எனக்கு என் அம்மா கொடுத்த விளக்கு உடைந்து விட்டது. அதை மறுபடியும் பயன்படுத்தலாமா?

பதில்: கூடவே கூடாது. எனினும் சிறிய குறையாக இருந்து சரி செய்யக்கூடிய குறையாக இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்தலாம். பொதுவில் பின்னம் ஏற்பட்ட விளக்கினை பெரியவர்கள் பயன்படுத்தியதில்லை.


.முற்றும்.
------------------------------------------------

இனி வரும் நாட்களில் வரப்போகும் கேள்விகள்:

[1] ஸ்ரார்த்த விதிமுறைகளை கூறவும் - திரு.பஞ்சாபகேசன், சென்னை
[2] ஒரே வீட்டில் இரண்டு சிவலிங்கங்கள், இரண்டு சாளக்கிராமங்களை வைத்து வழிபடலாமா? - திரு.மூர்த்தி, நெல்லை.
[3] அதிர்ஷ்டக்கல் அணிந்தால் பலன் தருமா? - செல்வி.ஹேமா, சென்னை
[4] எனக்கு ஜோதிடப்படி எந்த திசையில் வீட்டின் வாசல் இருக்க வேண்டும்? - திரு.மகேந்திரன், படப்பை
[5] எனது பெயரை எண் கணிதப்படி மாற்றியமைக்கலாமா? - திரு.ஜான், திருச்சி.
------------------------------------

இன்றைய பஞ்சாங்கம் - 01-07-2011

In Tamil - பஞ்சாங்கம் - 01-07-2011

வருஷத்தின் பெயர் : கர வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 16ம் தியதி; ஆங்கிலம் ஜூலை 01 2011
அயணம் : உத்தராயணம்
ரிது : கிரீஷ்ம ரிது
கிழமை : வெள்ளிக்கிழமை
திதி :
அமாவாஸ்யை  மாலை மணி 02.23 வரை பின் பிரதமை
நக்ஷத்திரம் :
திருவாதிரை நக்ஷத்ரம் இரவு மணி 11.01 வரை பின் புனர்பூசம்
யோகம் :
வ்ருத்தி்  யோகம் நாழி 08.09
கரணம் :
நாகவ கரணம் நாழி 14.23
சூரிய உதயம் :
காலை மணி 6.04
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.35
அஹசு :
நாழிகை 31.33
லக்ன இருப்பு :
மிதுனம் -  நாழி 02.53  (காலை மணி 07.31 வரை)
இராகு காலம் :
காலை  10.36 முதல் 12.06 வரை
எமகண்டம் :
மாலை 03.06 முதல் 04.36 வரை
சூலம் :
மேற்கு


o வியா செ  கே சூரி புத சுக் 
o
இன்றைய கிரஹநிலை
o
o o
o ரா o சனி


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: கேட்டை
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 3
சந்திரன் மிதுனம் (13.13 நாழிகைக்குப் பிறகு) -
செவ்வாய் உரோஹினி 2
புதன் பூசம் 2
குரு அசுபதி 4
சுக்ரன் மிருகசீரிஷம் 3
சனி வக்ர நிவர்த்தி -
ராகு கேட்டை 4
கேது மிருகசீரிஷம் 2


மிக முக்கிய அறிவிப்பு

அன்புள்ளம் கொண்ட நெஞ்சங்களுக்கு,

எனது தொலைபேசி : 9884852691 சிற்சில காரணங்களுக்காக வெள்ளிக்கிழமை (ஜூலை 01ம் தியதி) மாலை வரை வேலை செய்யாது. எனவே ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் உடனடியாக என்னுடைய மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.


Wednesday, June 29, 2011

இன்றைய பஞ்சாங்கம் (30-06-2011)


முக்கிய அறிவிப்பு: ஒரு அன்பர் கேட்டிருந்தார். ஐயா தங்களது ஜோதிடக் குறிப்பை நான் எனது புத்தக பதிப்பில் போட்டுக் கொள்ளலாமா? என்று. அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே நான் சொல்ல நினைப்பது, நீங்கள் தாராளமாக இதை பயன்படுத்தி கொள்ளலாம். மக்கள் இதன்மூலம் விழிப்படைய வேண்டும் என்பதே எமது அவா.

Monday, June 27, 2011

ஜோதிட ஆலோசனை

நமது தேசத்தில் பொதுவாக யாருக்கும் நேரம் இருப்பதில்லை. ஜாதகம் பார்க்க வேண்டும் எண்றாலும் யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்காக உருவாக்கியதுதான் இந்த பதிவு. எமது இமெயில் முகவரிக்கோ அல்லது எனது தொலைபேசியிலோ நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளவும். வாரத்தில் 20 பேருக்கு மட்டும் சென்னையில் ஜோதிட பலன்கள் சொல்லப்படும். முகவரி நீங்கள் முன்பதிவு செய்யும் போது கொடுக்கப்படும். என்னை நீங்கள் நேரடியாக சந்தித்து கலந்துரையாடலாம். உங்களுக்கு ஒரு ஜோதிட அடையாள எண்ணும் வழங்கப்படும். பின்னாளில் அது உங்களுக்கு உபயோக கரமானதாக இருக்கும்.

தேவைப்படும் தகவல்கள்:
பெயர்:
தந்தை பெயர்:
தாயார் பெயர்:
பிறந்த தேதி:
நேரம்:
ஊர்:
மின்னஞ்சல் விலாசம்:

என்னுடைய அலைபேசி எண்: +91- 8220213194
SKYPE: rameshramky06
இந்த சேவை வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

நன்றி.

Sunday, June 26, 2011

ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை - ராசிபலன்கள்

ராசிபலன்

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவான பலன்களே, இவை 
ஜாதகத்திற்கு ஜாதகம் மாறலாம்.


0 குரு செவ் கேது சூரி சுக்
0 கிரஹநிலை புதன்
0 0
0 ராகு 0 சனி

மேஷ ராசி:
எதையும் தாங்கும் வலிமை உடைய செவ்வாயை ராசியாதிபதியாக கொண்ட மேஷ ராசி வாசகர்களே தற்போதைய கிரகநிலைப்படி தங்களுக்கு ஏற்றமான நிலை தென்படுகிறது. வெகுநாட்களாக வரவேண்டிய பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரும். குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து மறையும். தேவையில்லாத வீண் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். கல்வி மற்றும் ஞானம் சம்பந்தமான விஷயங்களில் குழப்பம் முடிவுக்கு வரும். சோம்பேறித்தனம் உடையவர்கள் கொஞ்சம் அதை விடுத்து வேலைகளை ஆரம்பிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் ஒத்துப் போவீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தந்தையாரிடம் கருத்து வேற்றுமை வரலாம். கவனம் தேவை. வேலைபார்க்கும் இடத்தில் உங்கள் மதிப்பு உயரும். குலதெய்வ வழிபாடு மற்றும் வியாழக்கிழமைகளில் தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது நன்மையைத் தரும்.


ரிஷப ராசி: யாரிடமும் சீக்கிரம் பழகி விடும் தன்மையுடைய சுக்கிரனை ராசியாதிபதியாக கொண்ட ரிஷப ராசி வாசகர்களே பூமி மற்றும் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. தேவையில்லாத வீண் பேச்சு மற்றும் விஷயங்களில் ஒதுங்கி இருக்க வேண்டியது அவசியமாகிறது. பிள்ளைகளின் மீதும் அவர்களின் கல்வியின் மீதும் பார்வை தேவை. வாழ்க்கைத்துணையுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். வேலை செய்யுமிடத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். சின்ன சின்ன சுபசெலவுகள் வரலாம். வெள்ளிக்கிழமை தோறும் மஹாலக்ஷ்மியை வழிபடுவதும் மற்றும் ஸ்ரீ ஸூக்தம் சொல்வதும் நன்மையைத் தரும்.


மிதுன ராசி: எதிலும் புத்தி கூர்மையை உடைய புதனை ராசியாதிபதியாக கொண்ட மிதுன ராசி வாசகர்களே கொஞ்சம் செலவுகளை குறைத்து மூதலீடு செய்ய ஆரம்பிக்க வேண்டிய காலகட்டமிது. கடந்த சில நாட்களாக வீட்டில் உங்களுக்கு இருந்த கெட்ட பெயர் மறைந்து நற்பெயர் வரும். எதிலும் தைரியமாகவும் நம்பிக்கையாகவும் இறங்குவதற்கு முன் கொஞ்சம் முன் யோசனை அவசியம். மாணவ கண்மணிகள் படிப்பில் மிகுந்த உழைப்பினை கொடுக்க வேண்டிய காலகட்டமிது. தாயாரிடம் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வரலாம். வேலை செய்யுமிடத்தில் கவனம் தேவை. யாரிடமும் வீண் பேச்சு கூடவே கூடாது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில் சென்று வருவது பலனைத் தரும்.


கடக ராசி: யாரையும் விரைவில் கவர்ந்து விடும் சந்திரனை ராசியாதிபதியாக கொண்ட கடக ராசி வாசகர்களே, வரவுக்கு முன்பே செலவுகள் வந்து பயமுறுத்திய காலகட்டம் மாறப்போகிறது. உங்கள் உடன்பிறந்தோரிடம் சின்ன சின்ன கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். வேலை விஷயமாக வெளிநாடு வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் உடல்நலம் மீது கவனம் தேவை. திருமணத்தைடை நீங்கும் காலகட்டமிது. கோவில் மற்றும் புனித யாத்திரை புறப்பட தயாராகும் காலமிது. வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி உங்களை வந்தடையும் காலகட்டமிது. வேலை செய்யுமிடத்தில் உங்களுடைய பேச்சை மேலதிகாரிகள் மதிக்கும் காலகட்டமிது. பஞ்சமி தோறும் அம்மனை வழிபட உங்கள் எதிர்காலம் பிரகாசமாயிருக்கும்.


ஸிம்ஹ ராசி: யாரையும் எளிதில் வீழ்த்தி விடும் பலம் பொருந்திய சூரியனை ராசிநாதனாக கொண்ட ஸிம்ஹ ராசி வாசகர்களே உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும் காலமிது. கடந்த 7 ஆண்டுகளாக தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து விதைத்த உழைப்பை அறுவடை செய்யும் காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். வீடு மற்றும் மனை வாங்கும் யோசனை இருந்தால் வாழ்க்கைத்துணையையின் பெயரையும் இணைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் குல தெய்வ வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் மேலும் உங்களுக்கு பலம் கூடும். வேலை செய்யுமிடத்தில் உங்கள் மதிப்பு உயரும். லாபமான முதலீடுகளை செய்யும் காலகட்டமிது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிவன் கோவில் சென்று வழிபடுவது நன்மையைத் தரும்.


கன்னி ராசி: யாரையும் சீக்கிரமாக நம்பி விடும் புதனை ராசிநாதனாக கொண்ட கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய பேச்சுக்கும் மற்றவர்கள் மதிப்பு கொடுப்பார்கள். நீங்கள் இருக்குமிடத்தில் உள்ள பிரச்சினைகள் கொஞ்ச கொஞ்சமாக மறைய துவங்கியுள்ளது. உங்கள் தைரியம் மிளிரும் காலமிது. கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். வாழ்க்கைத்துணையுடன் ஒத்து போகவும் இந்த காலகட்டம் வழிவகுக்கும்.தாய் தந்தையருடன் சிறிய கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். அடிக்கடி கோவிலுக்கு சென்று நவக்ரஹத்தை வலம் வருவதும், முன்னோர்களை வழிபடுவதும் மிகுந்த நன்மையைத் தரும்.


துலாம் ராசி: யாரையும் பார்த்த உடனே எடை போட்டு விடும் துலாம் ராசி வாசகர்களே கடந்த சில நாட்களாக உங்கள் மனதில் இருந்த நீங்காத குறையொன்று மறையும் காலமிது. தேவையில்லாத வீண் பேச்சுக்களயும் விவாதங்களையும் குறைத்து கொள்ளுங்கள். மிகவும் தைரியமாக எந்த காரியத்திலும் இறங்கலாம். சகோதர சகோதரிகளிடம் பாசம் மிளிரும். கல்வி சம்பந்தமான விஷயங்களில் மிகவும் நன்மை தரும் காலமிது. வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வேலை செய்யுமிடத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில் சென்று வழிபடுவதும், ஆஞ்சனேயரை வழிபடுவதும் நன்மையைத் தரும்.


விருச்சிகம் ராசி: யாரிடமும் அனாவசியமாக பேசாத செவ்வாயை ராசியாதிபதியாக கொண்ட விருச்சிக ராசி வாசகர்களே, வெகுநாட்களாக இருந்த வராக் கடன்கள் வசூலாகும் காலமிது. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த நன்மை தரும். பித்தம் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் ஒத்துப் போவீர்கள். தேவையில்லாத வீண் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தந்தையாருடன் உறவு சிறக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில் சென்று வழிபடுவது நன்மையைத் தரும்.


தனுசு ராசி: மற்றவரின் அங்கீகாரத்திற்கு மதிப்பளிக்கும் வியாழனை(குருவை) அதிபதியாக கொண்ட தனுசு ராசி வாசகர்களே நீண்ட நாட்களாக இருந்த திருமணத் தடை நீங்கும் காலகட்டமிது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். கல்வியில் நீண்ட நாட்களாக இருந்த இழுபறி நீங்கும். தாயாருடன் இருந்த கருத்து வேறுபாடுகளும் மறையும். பிள்ளைகளுக்கு இருந்த தடைகளும் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் ஒத்துப் போவீர்கள். வேலை செய்யுமிடத்தில் கவனம் தேவை. சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில் வலம் வருவதும், பெரியோர்களை வணங்குதலும் நன்மையைத் தரும்.


மகர ராசி: மற்றவர்களின் நிறை குறைகளை கண்டுபிடிக்கும் சனியை ராசியாதிபதியாக கொண்ட மகர ராசி வாசகர்களே வீட்டில் நிலவிய சண்டை சச்சரவுகள் மறைந்து இன்பம் பொங்கும் காலமிது. கல்வி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் உண்டு. வெப்பம் ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் கருத்துக்கள் ஒத்துப் போகும். பெற்றோருடன் ஒத்துப் போவீர்கள். மிகுந்த லாபமான முதலீடுகள் செய்வீர்கள். வேலை செய்யுமிடத்தில் உங்கள் திறன் அதிகரிக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அடிக்கடி பெருமாள் கோவில் சென்று வருவதும், நவக்ரஹ வழிபாடு செய்வதும் நன்மையைத் தரும்.


கும்ப ராசி: தனது பேச்சால் யாரையும் எளிதில் வீழ்த்தி விடும் சனியை அதிபதியாக கொண்ட கும்ப ராசி வாசகர்களே கடந்த 2 வருடங்களாக இருந்து வந்த வறண்ட நிலை மாறும் காலகட்டமிது. உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும் காலகட்டமிது. பெற்றோருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். பிள்ளைகளின் மதிப்பு உயரும். நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதை தவிர்க்கவும். பணியின் நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் வெளிநாடுகளுக்கு சென்று வர வாய்ப்புகள் தென்படுகிறது. நீண்ட நாட்களாக உங்கள் மீது இருந்த கெட்ட பெயர் நீங்கும். சனிக்கிழமைகளில் குல தெய்வ வழிபாடு செய்வதும் ஆஞ்சனேயருக்கும் வெண்ணை சாத்துவதும் நன்மையைத் தரும்.


மீன ராசி: நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வியாழனை அதிபதியாக கொண்ட மீன ராசி வாசகர்களே கடந்த சில நாட்களாக இருந்த மன உளைச்சல்கள் நீங்கும் காலகட்டமிது. உங்கள் பேச்சுக்கு அங்கீகாரம் வரும் காலகட்டமிது. மிகவும் தைரியமாக எந்த காரியத்திலும் இறங்கும் முன் திட்டமிடுதல் அவசியம். பிள்ளைகளின் மீது இருந்து வந்த வேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து திட்டமிட்டு எதையும் செய்யவும். தந்தையாருடன் கருத்து மோதல்கள் ஏற்படலாம். வேலை செய்யுமிடத்தில் உங்கள் குரல் ஒலிக்கும். வியாழக்கிழமைகளில் சாய்பாபா, ராகவேந்திரர் கோவிலுக்கு சென்று வழிபடுவதும், முன்னோர்கள் வழிபாடும் நன்மையைத் தரும்.