Tuesday, June 6, 2017

நேர்மறை எண்ணங்களை வரவைப்பதற்கும் எதிர்மறை எண்ணங்களை அழிக்க வைப்பதற்குமான ஒரு பரிகாரம்:

நேர்மறை எண்ணங்களை வரவைப்பதற்கும் எதிர்மறை எண்ணங்களை அழிக்க வைப்பதற்குமான ஒரு பரிகாரம்:


தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவதன் மூலம் பல வகையான நன்மைகளைப் பெற முடியும். அதிலும் மண் அகல் விளக்கில் தினமும் வீட்டில் விளக்கேற்றுவதன் பலன் அளப்பரியாதது. வீட்டில் விளக்கு ஏற்றும் போது நல்லெண்ணை மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றுவது சிறந்தது.




வீட்டில் பஞ்ச முக மண் அகல் விளக்கில் தினமும் தீபம் ஏற்றி வணங்கினால் எதிர்மறை எண்ணங்கள் அகலுவதோடு நேர்மறை எண்ணங்கள் சூழும். அதிலும் தினமும் மாலை 6 - 7க்குள் மண் அகல் விளக்கை ஏற்றி குல தெய்வத்தை வணங்கினால் எல்லா விதமான தோஷங்களும் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் நீடித்து வந்த சுணக்க நிலை மாறும்.

எதிர்மறை சக்திகளை விரட்டுவது எப்படி?

எதிர்மறை சக்திகளை விரட்டுவது எப்படி?

நேர்மறை சக்திகள் வருவதற்கு எதிர்மறை சக்திகள் மிகப் பெரிய தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

முதலாவதாக வருடத்திற்கு ஒருமுறை வீட்டில் ஏதேனும் ஒரு ஹோமம் செய்வது நல்லது. 

இரண்டாவதாக எதிர்மறை சக்திகளை விரட்டுவதில் பசு மாட்டின் கோமியம் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது எனலாம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வீட்டிற்கு  முன் வெளியில் இருக்கும் இடத்தை வெள்ளிக்கிழமை தோறும் பசு மாட்டின் சாணத்தால் மொழுகுவார்கள். தினமும் வீட்டின் வாசலை காலையில் தெளிக்கும் போதும் சாணம் கலந்து தண்ணீர் தெளிப்பார்கள். தற்போது அது பரவலாக குறைந்து வருகிறது. ஆனாலும் மேற்கு மண்டலத்தில் இப்போதும் இதை கண் கொண்டு பார்க்க முடிகிறது. 

சரி விஷயத்திற்கு வருவோம், வெள்ளிக்கிழமை தோறும் பசு மாட்டின் சாணம் அல்லது கோமியம் எடுத்து வந்து தூய மஞ்சள் பொடியுடன் கலந்து வீடு முழுவதும் மாவிலையால் தெளிக்கவும். தெளித்த பின் வீட்டில் தனல் உண்டாக்கி சாம்பிராணி தூபம் போடவும். 

இதை செய்வதன் மூலம் கெட்ட கனவுகள் அகலும். தம்பதிகளுக்குள் அன்னியோன்னியம் ஏற்படும். கண் திருஷ்டி நீங்கும். சுப காரியங்களில் இருக்கக் கூடிய தடைகள் அகலும்.

குறிப்பு:
வெள்ளிக்கிழமை மாலை 6 - 7 செவ்வாய் ஹோரையாகும். முக்குண வேளையை பொறுத்தவரை சாத்வீக வேளையாகும். இந்த நேரத்தில் செய்வது மிகவும் நன்மையைத் தரும். 

தொடரும்....

இன்றைய ராசிபலன் - 06.06.2017 - செவ்வாய்கிழமை

இன்றைய ராசிபலன் - 06.06.2017 - செவ்வாய்கிழமை

சுட்டி: http://kuppuastro.com/today.php

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஒன்பது:

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஒன்பது:

ஒவ்வொரு ஊரிலும் சுடுகாடு அல்லது இடுகாடு தர்மராஜனின் திசையான தெற்கில் அமைந்திருக்கும். சுடுகாடு அல்லது இடுகாடு அமைந்திருக்கும் இடத்தில் கட்டாயம் நீர் நிலைகள் இருக்கும். சில ஊர்களில் சுடுகாடு இருக்காது. பல ஊர்களுக்கு சேர்ந்த மாதிரி அமைத்திருப்பார்கள். சு(இ)டுகாடு அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் கட்டாயமான முறையில் சிவன் ஆலயம் அல்லது ஐயனார் அல்லது ஏதேனும் அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டிருக்கும்.

ஊரின் பிரதான தெய்வம் வருடத்திற்கு ஒரு முறை இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்யும். மேலும் ஊரில் யாராவது இறந்து அந்த பிரதான தேவதை விஜயம் இங்கு செய்ய நேரிட்டாலும் நீத்தார் கடமையை நிறுத்த மாட்டார்கள்.
யாராவது இறந்து போனால் தீட்டு ஏற்படும். அதனை நீக்குவதற்காக ஊரைச் சுற்றியிலும் எட்டு திசைகளிலும் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு அக்னி ரீதியாக சுத்தம் செய்வார்கள்.
ஊரின் பிரதான கோவிலின் கொடியேற்றத்தின் போது ம்ருத்ஸங்கிரணம் - அங்குரார்ப்பணம் என ஒரு விழா செய்வார்கள். ம்ருத் என்றால் வடமொழியில் மண் என்று பொருள்.





இதில் செய்யக்கூடிய விஷயங்கள்:
பஞ்சபூதங்களை வணங்குவது. முதலில் அந்த ஊரிலுள்ள ஏதேனும் ஒரு நீர்நிலையிலிருந்து மண் எடுத்து வருவார்கள். அடுத்ததாக ஊரின் பிரதான நீர் நிலையிலிருந்து நீர் எடுத்து கும்ப கலசம் ஸ்தாபிப்பார்கள். பின் அக்னியை ஹோமத்தில் மூட்டி வேண்டுவார்கள். அடுத்ததாக அந்த அக்னியின் மூலமாக ஏற்படக்கூடிய புகை காற்றுடன் கலக்கும் போது காற்றினை வேண்டுவார்கள். ஹோமத்திலிருந்து ஏதாவது ஒரு ரூபத்தில் (ஓலை அல்லது தீச்சட்டி) அக்னியை எடுத்து ஊரின் எல்லைகளை வலம் வருவார்கள். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் கடைசியாக ஒரு கும்பத்தை எடுத்துக் கொண்டு கோபுரம் அல்லது விமானத்தில் ஏறி ஆகாய தேவதையை வேண்டுவார்கள்.



தொடரும்.....

நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? - தொகுப்பு ஒன்று

நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? - தொகுப்பு ஒன்று
வீட்டினுள் இருக்கும் அறைகளில் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரித்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இதனை காலையில் செய்வதே சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடவும்.



குறிப்பு:
சிவன் கோவிலிலும் பெருமாள் கோவிலிலும் கர்ப்பகிரஹத்தில் செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில் துளசியும் பச்சைக் கற்பூரமும் சேர்ப்பார்கள். சிவன் கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும் மஞ்சள் பொடியும் கலந்திருக்கும். 

Monday, June 5, 2017

குழந்தை பிராப்தத்திற்கான ப்ரஸ்ணம்:

குழந்தை பிராப்தத்திற்கான ப்ரஸ்ணம்:
ஒரு நண்பர் இன்று குழந்தை பிறப்பதற்கான ப்ரஸ்ணம் பார்க்க வந்திருந்தார். ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்திருந்த லக்னம் - மகரம்.





பலன் - வாக்கியப்படி:
சர லக்னம். லக்னாதிபதி சனி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னத்தை குரு பார்க்கிறார். ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானமான ரிஷபத்தை ராசிநாதன் சனியும் சந்தாண காரகன் குருவும் பார்க்கிறார்கள். 100% சந்தாண ப்ராப்தி உண்டு. குரு தனது ஏழாம் பார்வையால் ரிஷபத்தை பார்க்கும் போது குழந்தை கட்டாயம் பிறக்கும்.

வாழ்த்துக்கள்.

Thursday, June 1, 2017

சுபகாரிய நிமித்தம்:

சுபகாரிய நிமித்தம்:
ஒரு ஜோதிடர் ப்ரஸ்ணம் பார்க்க ஆரம்பிக்கும் போது குழந்தையின் அழுகுரல் கேட்டால் கேட்க வந்த காரியம் நிச்சயம் நடக்கும். 

குலதெய்வத்திற்கான ப்ரஸ்ணம் பார்க்கும் போது கர்த்தா (யாருக்கு பார்க்க வேண்டுமோ அவர்) கொண்டு வந்த தாம்பூலத்தில் உள்ள வெற்றிலை நிமிர்ந்தில்லாமல் திரும்பி இருந்தால் குல தெய்வ அனுக்ரஹம் இல்லை என பொருள். அதே போன்று கொண்டு வந்திருக்கும் தாம்பூலத்தில் இருக்கும் வெற்றிலையில் ஐந்தாம் வெற்றிலை பின்னப்பட்டிருந்தாலும் இதே நிலைதான்.

ப்ரஸ்ணம் பார்க்கும் போது ஜோதிடரோ அல்லது கர்த்தாவோ நடுவில் எழுந்து செல்லக் கூடாது. ஒரு முறை உட்கார்ந்து விட்டால் ஜோதிட பலன்கள் முழுமை பெற்ற பின்னரே எழுந்திருக்க வேண்டும்.

தொடரும்.....

Wednesday, May 31, 2017

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஏழு

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஏழு
ஊரில் ஏதேனும் விழாக்காலங்கள் என்று வரும் போது அந்த ஊரில் எந்த தானியம் அதிகமாக விளைகிறதோ அதையே பிரசாதமாக ஊரின் பிரதான தேவதைக்கு நைவேத்யம் செய்வார்கள். எட்டு திசைகளிலும் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு பலி கொடுப்பார்கள். அதிலும் முக்கியமாக ஈசான்யம் மற்றும் கன்னி மூலையில் இருக்கும் தெய்வங்களுக்கு கட்டாயமான முறையில் பலி உண்டு.




ஊரின் தண்ணீர் பாசனத்திற்கு ஈசான்ய மூலையில் உறுதியாக நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். அந்த நீராதாரம் அந்த ஊருக்கு மட்டுமன்றி அந்த ஊரின் அக்கம் பக்கத்து சிற்றூர்களுக்கும் கிடைக்குமாறு வழிவகை செய்வார்கள். சிற்றூர்களில் இருக்கும் மக்கள் தாங்கள் தெரிவிக்கும் நன்றியாக பிரதான ஊரின் கோவிலில் நடைபெறும் உற்சவத்தின் போது கலந்து கொள்வார்கள். பிரதான ஊரின் ஒவ்வொரு திசையிலும் அதிகபட்சமாக 6 ஊர்கள் வரை ஸ்தாபனம் செய்தார்கள். அதே போன்று பிரதான ஊரின் கொடி மரம் எட்டு திசையிலும் ஸ்தாபனம் செய்யப்பட்ட ஊர்களை வியாபித்துக் கொள்ளும்.

சிற்றூர்களில் உருவாக்கப்படும் சிறு கோவில்கள் - அது குடி மக்கள் கோவிலாக இருந்தாலும் சரி, ஊர்க் கோவிலாக இருந்தாலும் சரி, அனைத்து கோவில்களும் பிரதான ஊரின் கொடி மர தேவதைக்கு அடங்க வேண்டும்.

குறிப்பு:
குடி மக்கள் கோவில் என்பது ஒவ்வொரு சாதி குழுவிற்கும் அவர்களாகவே அமைத்துக் கொள்ளும் கோவில். ஊர்க் கோவில் என்பது அந்த ஊரிலுள்ள அனைத்து சாதியினருக்கும் பொதுவான கோவில்.

Friday, May 26, 2017

ஜோதிட பலன் - தமிழ்நாடு




தமிழகத்தை பொறுத்தமட்டில் வரும் ஜூன் மாதம் 8ம் தேதி வைகாசி 25ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 8.42க்கு மேல் வானிலையில் மிகப் பெரிய மாற்றம் இருக்கும். வெயிலின் உக்ரம் குறையும். காய்கறிகளின் விலை குறையும். அரசியல் ரீதியாக சிறிய மாற்றம் இருக்கும். ஆட்சி மாற்றம் இருக்காது. 

குறிப்பு: 
[1] அன்றைய தினம் காஞ்சி மஹாபெரியவர் ஜெயந்தி. 
[2] அனுஷ நக்ஷத்ரத்தில் பிறந்தவர்களுக்கு பொற்காலம் பிறக்கப் போகிறது.

ஜோதிட பலன் - இந்தியா




8 ஜூன் 2017 முதல் 17 ஜூலை 2017க்குள்ளாக மத்திய அரசாங்கம் மக்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடும்.