Monday, January 13, 2020

ஜோதிட கேள்வி பதில் பகுதி 07: சிவஸ்தலத்தில் ராஜகோபுரம் கட்ட முடியுமா?

ஜோதிட கேள்வி பதில் பகுதி 07

திரு.சேது - ராமநாதபுரம்
கேள்வி:
சிவஸ்தலத்தில் ராஜகோபுரம் கட்ட முடியுமா?

பதில்:
ப்ரஸ்ணம் பார்த்த தேதி: 13.01.2020 - திங்கட்கிழமை
நேரம்: காலை 9.00
இடம்: சென்னை

உங்களுக்கு ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்த லக்னம்: தனுசு. லக்னத்தில் குரு ஆட்சியாக இருக்கிறார். பாக்கியாதிபதி சூரியனும் லக்னத்தில் இருக்கிறார். உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் பலமாக இருக்கிறது. உங்களுடைய முன்னோர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்களாக இருக்கிறார்கள். உங்களுக்குக் கட்டாயம் ராஜகோபுரம் கட்டும் வாய்ப்பு உண்டு. 



குறிப்பு:
ஒருவருடைய ஜாதகத்தில் கோவில்கள் சார்ந்த விஷயங்களைப் பார்க்கும் போது நவக்கிரகத்தில் குருவையும் - பூர்வ புண்ணிய ஸ்தானமும் - பாக்கிய ஸ்தானமும் பலம் பெற்றிருக்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் கெட்டுப் போயிருந்தால் கூட குரு பலம் பெற்றிருந்தால் தெய்வம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் இருக்கும். அதே வேளையில் அதே குரு பகவான் ஷட் பலத்திலும் அதிகமாக இருந்தால் கோவில் சம்பந்தபட்ட விஷயங்களில் ஈடுபாடும் உண்டு. புணருத்தாரணம் - நிர்மாணம் செய்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.


பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல் வைக்க நல்ல நேரம்




Sunday, January 12, 2020

நாளைய நாள் வெற்றி நாள்: 13 ஜனவரி 2020

நாளைய நாள் வெற்றி நாள்



13 ஜனவரி 2020


ஜோதிட கேள்வி பதில் - பகுதி 06

ஜோதிட கேள்வி பதில் - பகுதி 06

கேள்வி:
திரு.K.U - வேலூர்
கடன் பிரச்சனை எப்போது தீரும்? ப்ரஸ்ணம் பார்த்து சொல்லவும்.





பதில்:
உங்களுக்கு சோழிப் பிரஸ்ணம் பார்த்ததில் வந்த லக்னம்: கும்பம். உங்களுக்கு 39 வயது நடக்கிறது. மேஷ ராசி கிருத்திகை நக்ஷத்ரம் - மகர லக்னம். ராகு திசை சந்திர புத்தி. ராகு பாக்கியஸ்தானத்திலும் சந்திரன் நான்காம்  இடத்திலும் இருக்கிறார்கள். ஆயுள் ஸ்தானத்தில் லக்ன தனாதிபதி சனி இருக்கிறார். சனி சூரியன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். ஆயுசு தீர்க்கம். வாகனம் இயக்கும் போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. கடன் பிரச்சனை வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு படிப்படியாக குறையும். 2020ம் ஆண்டு உங்களுக்குப் பொற்காலமாக இருக்கும். ப்ரஸ்ணப்படி ஐந்தாமிடத்தில் ராகு இருக்கிறார். தந்தையார் ஸ்தானாதிபதி சுக்கிரன் பாதகாதிபதியுமாகிறார். தந்தைகாரகன் சூரியன் ஷட்பலத்தில் பலம் குன்றி இருக்கிறார். தந்தை வழி சொத்துக்கள்  கிடைப்பதில் அதிகமான விவாதங்களும் சண்டை சச்சரவுகளும் வரலாம். பொறுமையுடன் எதையும் எதிர்கொள்ளுங்கள். பிடிவாதத்தை தளர்த்திக்  கொள்ளவும். தினமும் ஜீவராசிகளுக்கு அன்னமிடவும்.

Wednesday, January 8, 2020

Monday, January 6, 2020

நாளை நாள் நமது வெற்றி நாள் - 07 ஜனவரி 2020

நாளை நாள் நமது வெற்றி நாள்
07 ஜனவரி 2020


ஜோதிட கேள்வி பதில் - பகுதி 05

ஜோதிட கேள்வி பதில் - பகுதி 05

கேள்வி:
ஐயா வணக்கம். நான் பிறந்தது 06.01.1970 - 00.15 - பாண்டிச்சேரி. நான் எப்போது வீடு கட்டுவேன்?
Mrs. KM - புதுச்சேரி






பதில்:
உங்களுக்கு 50 வயது பூர்த்தியாகிறது. செவ்வாய் திசை குரு புத்தி சனி அந்தரம் நடக்கிறது. தைரிய அஷ்டமாதிபதி திசை சுக சப்தமாதிபதி புத்தி. கேட்டை  நக்ஷத்ரம் - விருச்சிக ராசி, கன்னியா லக்னம். ஆயுசு தீர்க்கம். ஆரோக்யத்தில் கவனம் தேவை. காரம் சம்பந்தமான உணவுகளை தவிர்த்தல் நலம்.  உடம்பில் உஷ்ணம் ஏறாமல் பார்த்துக் கொள்ளவும். 15.02.2020க்குப் பின் சொந்த வீடு கட்டுவதற்கான அதிர்ஷ்டம் வரும். உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு  மேற்கு அல்லது வடக்கு தலைவாசல் நன்றாக இருக்கும். வேலையைப் பொறுத்தமட்டில் உங்களுக்கு வரக்கூடிய ஜூன் மாதத்திற்கு பின் பெரிய அளவில் ஏற்றம் இருக்கும். அடிக்கடி முருகன் ஆலயத்திற்குச் சென்று வருவதும் சந்திர தரிசனம் செய்வதும் பரிகாரமாக இருக்கும்.