ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் சுக்ல பிரதமையில் விரதத்தைத் தொடங்கி தொடர்ந்து சஷ்டி வரை ஆறு நாட்கள் முருகனை வழிபட்டு கடும் விரதமிருப்பது “கந்தர் சஷ்டி விரதம்”. இதனை சிலர் மகா சஷ்டி விரதம் என்றும் சிலர் கூறுவார்கள்.
”திருமணப் பொருத்தம்" என்பது கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, சந்தானபாக்கியம், சுபிட்சமான எதிர்காலம், வீடு, மனை, நிலம் போன்றவை அமையுமா என இருவருடைய ஜாதகங்களின் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் கொண்டு கணித்து கணிப்பது.