Thursday, November 8, 2018

Weekly Tamil Horoscope From 08/11/2018 to 14/11/2018

Weekly Tamil Horoscope From 08/11/2018 to 14/11/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu

நவக்ரஹ கற்கள் - ஓர் விளக்கம்


Sunday, November 4, 2018

05.11.2018 - திங்கட்கிழமை

05.11.2018 - திங்கட்கிழமை அன்று முடிந்தவர்கள் வெள்ளி வாங்கவும்.

குறைந்தபட்சம் 1 கிராம் காயினாவது வாங்கி வைப்பது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

நாளை வடமாநிலங்களில் தீபாவளிக்கு முதல் நாள் தந்தாரேஸ் எனப்படும் லக்ஷ்மிக்கான நாளாகும். தந்தாரேஸ் என்றால் தன திரயோதசி என்பதாகும்.

சுக்கிர ஹோரையில் வாங்குவது இன்னும் சிறப்பானதாகும்.

சுக்கிர ஹோரை நேரங்கள்:
காலை 11.00 - 12.00 மணி வரை
மாலை 6.00 - 7.00 மணி வரை


குறிப்பு:
இந்த நேரத்திற்கு ராகு காலம் - எமகண்டம் தோஷம் கிடையாது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
EmaiL: ramjothidar@gmail.com

Wednesday, October 31, 2018

01 நவம்பர் 2018 - பஞ்சாங்கம்


01 நவம்பர் 2018 - பஞ்சாங்கம்

Weekly Tamil Horoscope From 01/11/2018 to 07/11/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu

Weekly Tamil Horoscope From 01/11/2018 to 07/11/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu
குலதெய்வம் - தீபாவளி ஸ்நானம் - கந்த சஷ்டி விரதம் பற்றிய குறிப்புகள்

Sunday, October 21, 2018

பஞ்சாங்கம் - 21.10.2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 04
இங்கிலீஷ்: 21 October 2018
ஞாயிற்றுக்கிழமை
 துவாதசி இரவு 9.16 மணி வரை. பின் த்ரயோதசி
சதயம் காலை 6.21 மணி வரை. பின்  பூரட்டாதி
வ்ருத்தி நாமயோகம்
பவம் கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 17.51
அகசு: 29.20
நேத்ரம்: 2
ஜீவன்: 1   
துலாம் லக்ன இருப்பு: 7.54
சூர்ய  உதயம்: 6.06

ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு 
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
திருப்பதி ஸ்ரீமுருகப் பெருமான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்
சூரிய வழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் நன்று
திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: மகம்

Thursday, October 18, 2018

புதிய ஆண்டவன்

ஸ்ரீமதே ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகாய நமஹ

 
ஸ்ரீமான் யமுனாச்சார்யார் ஸ்வாமி (ஆண்டவன் திருக்குமாரர் ) ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்திற்கு புதிய ஆண்டவனாக நியமிக்கப்பட்டு வருகின்ற சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை (20th and 21st  October 2018 ) பட்டாபிஷேக வைபவம் ஸ்ரீரங்கம் பெரிய ஆஸ்ரமத்தில் நடைபெற இருக்கிறது. 

 

ஆண்டவன் சிஷ்யர்கள் அனைவரும் இந்த பட்டாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு ஆச்சார்யன் அனுக்கிரகத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் உதவி:
தாசன்
வேலாமூர் பத்தங்கி கோவிந்தராஜன்

விஜய தசமி - வெள்ளிக்கிழமை

விஜய தசமி - வெள்ளிக்கிழமை
நாள்: 19 அக்டோபர் 2018

ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம்:

லக்ன ரீதியாக:
அதிகாலை 4.30 - 6.00
காலை 6.00 - 7.30
காலை 9.00 - 10.30


ஹோரை ரீதியாக - எமகண்டம், ராகு காலம் பார்க்க தேவையில்லை:
காலை 6.00 - 7.00 - சுக்கிரன் ஹோரை
காலை 7.00 - 8.00 - புதன் ஹோரை
காலை 10.00 - 11.00 - குரு ஹோரை
மதியம் 2.00 - 3.00 - புதன் ஹோரை
மாலை 5.00 - 6.00 - குரு ஹோரை

குழந்தைகளை புதிதாக அக்ஷரப்பியாசத்திற்கு வித்யாரம்பத்திற்கு சேர்க்க:
காலை 9.00 - 10.30 - நல்ல நேரம்
மதியம் 12.00 - 1.30 - நல்ல நேரம்


குறிப்பு:
விஜயதசமி நாளன்று வித்யாரம்பம் செய்பவர்கள் நாள், நக்ஷத்ரம், தாராபலம், சந்திரபலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.


கொலு குறிப்பு:
பொதுவாக கொலுவை விஜய தசமியன்று கலைப்பார்கள். ஆனால் இவ்வருடம் விஜய தசமி வெள்ளிக்கிழமையாக வருவதால் கலைக்கக் கூடாது. எனவே விஜயதசமி மறுநாள் அதாவது 20.10.2018 சனிக்கிழமையன்று கலைத்துக் கொள்ள வேண்டியது.

ஏகாதசி விரமிருப்பவர்கள் மட்டும் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை துவாதசியன்று கலைத்துக் கொள்ள வேண்டியது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Wednesday, October 17, 2018

அவசர பதிவு

அவசர பதிவு:
நாளை - 18 அக்டோபர் 2018 வியாழக்கிழமை ஐப்பசி மாதம் பிறக்கிறது. மாத தர்ப்பணம் செய்பவர்களுக்கான பதிவு இது.

நாளை சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை சேர்ந்து வருவதால் எதை முதலில் செய்வது என்ற குழப்பம் பல பேருக்கு இருக்கிறது.
முதலில் மாத தர்ப்பணம் செய்து விட்டு அதன் பிறகு சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை செய்வது நன்மை தரும்.

காலை 9 மணிக்குள்ளாக தர்ப்பணம் முடித்து விட்டு சரஸ்வது பூஜை செய்வது நல்லது.
எக்காரணத்தைக் கொண்டும் தர்ப்பணம் செய்த பின் குளிக்கக்கூடாது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com