Sunday, November 7, 2010

கந்த ஷஷ்டி விரதம் இருப்பது எப்படி?




எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். (இந்த வருடம் 6.11.2010 முதல் 11.11.2010 வரை.) சூரசம்ஹார தினத்தன்று (11.11.2010) அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.

பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !

ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது. சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.

ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், 25-வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள். சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் - ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை நம், ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள். பெற்ற தாய் கவனிக்காதிருக்கும் காலத்தும், பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான். திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.

பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்வரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும், இருபத்தோராம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியைப் போன்று, ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர். அதைப் போல கார்த்திகை மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும் கூறுவார்கள். இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர். குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகன் ஆவார். செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்று வள்ளிமலை சச்சிதானந்தா சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்று ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள். இவ்விழாவில் படிப் பாயாசம் வழங்குவது விசேஷமானது.

சரவணபவ தத்துவம்

சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.

உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).

மு - முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு - ருத்ரன் என்கிற சிவன்
க - கமலத்தில் உதித்த பிரம்மன்.

ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன். காஞ்சி குமரப் பெருமானால் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டு கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் முருகன் அவதாரத்தை இவ்வாறு கூறுவார்:

அருவமும் உருவமாகி
அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற ஜோதிப்
பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து ஆங்கு
உதித்தனன் உலகம் உய்ய!

இந்தப் பாடலை உள்ளன்புடன் ஓதினால் குழந்தைப் பேறு பெறலாம். - நாரதர் பழம் ஒன்றை சிவனிடம் வழங்க கணபதி சிவபார்வதியை வலம் வந்து பழத்தைப் பெற, கோபம் கொண்ட பாலன் தண்டம், கௌபீனம் அணிந்து பழனி ஆண்டியானான்.

தலம் பழனி (3-ஆம் படை வீடு) - கந்தனைப் புறக்கணித்து சிவனைத் தரிசிக்க பிரம்மா செல்ல, பிரணவத்திற்குப் பொருள் அறியாமல் அவர் சிறைப்பட, சிவனுக்கு பிரணவப் பொருள் உரைத்ததால் கந்தன், சிவகுருநாதன், சுவாமிநாதன் என்று போற்றப்பட்டான். இது நடந்த தினம் ஆடிப்பௌர்ணமி, குருபௌர்ணமி என்றும் கூறுவர். (தலம் - சுவாமிமலை 4-ஆம் படைவீடு). குருவருள் பெற உகந்த தினம். முருகன் தம் அவதாரக் காரணம் நிறைவேற குருவும் நாரதரும் புகன்றிட, திருச்செந்தூரில் தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகப் பதவியேற்றார். வீரபாஹுவைத் தூது அனுப்பினார். முடிவில் தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன், சூரபத்மாதியரையும் அழித்து வெற்றியை நிலைநாட்டினார்.

கந்தனின் ஆயுதம் - பராசக்தியின் மறு உருவமான வேல். சூரபத்மன் கடைசியில் மாமரமாக நின்றான். அதை வேலால் துளைக்க. ஒரு பாதி மயிலாகி வாகனம் ஆனான். மறு பாதி கொடியில் சேவலாக மாறினான். ராவண வதம், கம்ஸ வதம் என்பர், ஆனால் இங்கு மட்டும் சூரசம்ஹாரம் என்பர். வேறு எந்த தெய்வ அவதாரத்திலும் நிகழாத சம்பவம், அது தான் கந்தன் கருணை. இது நடந்த தினம் கந்த சஷ்டி - தீபாவளி - அமாவாசைக்குப் பிறகு வரும் ஆறாவது நாள். இது நடந்த இடம் திருச்செந்தூர் ஜயந்திபுரம் (2 ஆம் படை வீடு) வெற்றி தினம் கந்த சஷ்டி தினம். மாத சுக்ல சஷ்டியும் கந்தனுக்கு ஒரு விசேஷ தினமாக அமைகிறது. சஷ்டியில் விரதம் இருந்தால் சகல நலன்களும் பெறலாம். தேவேந்திரன் கந்தனுக்குத் தனது பெண் தெய்வயானையை மணம் புரிவித்தான். சப்தமி தினம் இது நடந்த இடம் திருப்பரங்குன்றம் - (முதல் படைவீடு) - (திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை கல்யாணம் பங்குனி உத்திரம் அன்றே.) வேடன் நம்பிராஜன் மகளாக வள்ளி (மாதவன் மகாலஷ்மி நோக்கால் தைப்பூசத்தில் உதித்தவள்) வள்ளி மலையில் வளர்க்கப்பட்டாள். நாரதர் நினைவூட்ட, கந்தன், வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக வள்ளியை நாடி, சாடி, தேனும் தினையும் உண்டு, பணிந்து சுயதரிசனம் தந்து, போரும் புரிந்து, வள்ளியை மணந்து கொண்டான். இது நடந்த இடம் வள்ளிமலையில். திருத்தணிகையில் (5-ம் படைவீடு), வள்ளித் திருமணம், தைப்பூசம், மாசி பூசம், பங்குனி உத்திரத் தினங்களில் நடக்கின்றன. சிறுவனாக தோன்றி, ஒளவைக்குச் சுட்ட பழத்தைக் கொடுத்து, பாட வைத்துத் தரிசனம் தந்தான் பழமுதிர்ச் சோலையில் (6-ஆம் படைவீடு).

ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?

ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.

நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :

1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

குமரகுருபரர் - தமது கந்தன் வரலாறான கந்தர் கலிவெண்பாவில் இவ்வாறு கூறுவார்:

(ஊமை பக்தருக்கு திருச்செந்தூர் முருகன் அடி எடுத்துக் கொடுக்கப் பாடியது.)

சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
ஞானம் அருள ஒரு முகம்
அக்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.

உயிரை மாய்த்துக் கொள்ள, கோபுரத்தினிற்று விழுந்தவரை ஏற்று, முத்தைத் தரு....... என்று பதம் எடுத்துக் கொடுத்த முருகன் அருளால் அருணகிரிநாதர் இவ்வாறு பாடுவார்:

ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை இவ்வாறு கூறுவார்:

ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்
ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே

ஷடரிம் - காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன். ஷட்விகாரம் - உண்டாக்குதல், இருத்தல், வளர்த்தல், மாற்றமடைதல், குறைதல், அழித்தல், என்ற ஆறு செயல்கள் அற்றவன்.
ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் - சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன்.
ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.

ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?

ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு

ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.

ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).

ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).

வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.

திருப்பரங்குன்றம் - மூலாதாரம்

திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்

பழனி - மணிபூரகம்

சுவாமிமலை - அனாஹதம்

திருத்தணிகை - விசுத்தி

பழமுதிர்சோலை - ஆக்ஞை.

ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.

நன்றி: தினமலர்

இந்தியா நியுசிலாந்து முதல் டெஸ்ட் - நான்காம் நாள் குறிப்புகள்


நியுசிலாந்தின் புதிய நம்பிக்கை நக்ஷத்ரம் - மார்ட்டின்


  • KS Williamson: 100 off 244 balls (9 x 4)
  • New Zealand: 350 runs in 123.1 overs (743 balls), Extras 14
  • Drinks: New Zealand - 372/5 in 131.0 overs (KS Williamson 120, DL Vettori 7)
  • 6th Wicket: 50 runs in 91 balls (KS Williamson 34, DL Vettori 16, Ex 1)
  • New Zealand: 400 runs in 136.6 overs (826 balls), Extras 15
  • Lunch: New Zealand - 417/6 in 144.3 overs (DL Vettori 41)
  • New Zealand: 450 runs in 158.6 overs (958 balls), Extras 19
  • Drinks: New Zealand - 456/9 in 160.0 overs (HK Bennett 4, CS Martin 1)
  • New Ball Taken: New Zealand 457/9 after 161.6 overs (HK Bennett 4, CS Martin 2)
  • Innings Break: New Zealand - 459/10 in 165.4 overs (CS Martin 3)
  • Tea: India - 2/3 in 4.5 overs (SR Tendulkar 0)
  • Drinks: India - 32/5 in 19.0 overs (VVS Laxman 10, MS Dhoni 8)
  • India: 50 runs in 27.1 overs (163 balls), Extras 0
  • 6th Wicket: 50 runs in 143 balls (VVS Laxman 28, MS Dhoni 22, Ex 0)
  • End Of Day: India - 82/6 in 40.0 overs (VVS Laxman 34, Harbhajan Singh 12)

Saturday, November 6, 2010

சென்னை ஆலயங்கள் - ஒரு புதிய இதழ்

சென்னை ஆலயங்கள் இதழ் விரைவில் வெளி வரவுள்ளது. இது சென்னை மற்றும் அதன் எல்லைக்கு வெளியே சிறிது தூரத்தில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாமல்லபுரம், ஸ்ரீ பெரும்புதூர், திருத்தணி ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களைப் பற்றியும், அங்கு நடைபெறும் திருவிழாகளைப் பற்றியும் வாரந்தோறும் வெளியிடும். மேலும், அவ்வாலயங்களுக்கு தேவையான திருப்பணிகளையும் மேற்கொள்ளும். அந்த ஆலயங்களுக்கு பக்தர்கள் சென்றுவர வாகன வசதியை ஏற்படுத்தித் தரும். ஒவ்வொரு ஊரிலும் பக்தி நெறி நிகழ்ச்சிகளை நடதிக்கொடுக்கும்.


இந்த இதழ் வாரந்தோறும் வியாழனன்று வெளியாகும். இதழில் விலை, துவக்கப்படும் நாள், சந்தாத் தொகை போன்றவை பின்னர் அறிவிக்கப்படும்.


முகவரி:
சென்னை ஆலயங்கள்,
24 & 25, முதல் தளம், எஸ் எஸ் ஆர்கேட்,
அம்பத்தூர் பேருந்து நிலையம், சென்னை - 600 053.

Email: chennaialayangal@gmail.com


மேலும் விவரங்களுக்கு நிர்வாக மேலாளரை காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை அணுகவும்.

இந்தியா நியுசிலாந்து முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் குறிப்புகள்


நியுசிலாந்தை மீட்ட வீரர்
  • 3rd Wicket: 50 runs in 133 balls (BB McCullum 23, LRPL Taylor 24, Ex 3)
  • BB McCullum: 50 off 94 balls (9 x 4)
  • New Zealand: 100 runs in 36.5 overs (222 balls), Extras 8
  • Drinks: New Zealand - 118/2 in 41.0 overs (BB McCullum 60, LRPL Taylor 44)
  • LRPL Taylor: 50 off 112 balls (6 x 4)
  • 3rd Wicket: 100 runs in 203 balls (BB McCullum 44, LRPL Taylor 52, Ex 4)
  • Lunch: New Zealand - 148/4 in 56.0 overs (JD Ryder 6, KS Williamson 5)
  • New Zealand: 150 runs in 56.1 overs (338 balls), Extras 10
  • 5th Wicket: 50 runs in 107 balls (JD Ryder 24, KS Williamson 22, Ex 4)
  • Drinks: New Zealand - 196/4 in 69.0 overs (JD Ryder 31, KS Williamson 26)
  • New Zealand: 200 runs in 69.6 overs (423 balls), Extras 12
  • JD Ryder: 50 off 96 balls (6 x 4)
  • New Ball Taken: New Zealand 234/4 after 80.1 overs (JD Ryder 52, KS Williamson 43)
  • 5th Wicket: 100 runs in 192 balls (JD Ryder 51, KS Williamson 45, Ex 4)
  • Tea: New Zealand - 237/4 in 82.0 overs (JD Ryder 53, KS Williamson 45)
  • KS Williamson: 50 off 118 balls (4 x 4)
  • New Zealand: 250 runs in 87.3 overs (529 balls), Extras 13
  • Drinks: New Zealand - 265/4 in 95.0 overs (JD Ryder 69, KS Williamson 56)
  • 5th Wicket: 150 runs in 315 balls (JD Ryder 76, KS Williamson 70, Ex 5)
  • New Zealand: 300 runs in 105.2 overs (636 balls), Extras 13
  • JD Ryder: 100 off 203 balls (10 x 4, 1 x 6)
  • End Of Day: New Zealand - 331/5 in 117.3 overs (KS Williamson 87)

வேண்டுவோம்

நமது தாய் தமிழகத்தை நோக்கி 'ஜெல்' என்ற புயல் வருவதாக செய்தி சொல்கிறார்கள். மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறார்கள்.

சேதம் ஏதும் ஏற்படாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றாக இறைவனிடம் வேண்டுவோம்.

நாள்: 07-11-2010
கிழமை: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 7.00 மணி

அவரவர் அவரவர்க்கு ஆச்சாரங்களின் படி வேண்டுவோம்.

Friday, November 5, 2010

இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் - இரண்டாம் நாள் குறிப்புகள்


ஹர்பஜனின் தீபாவளி சரவெடி


  • India: 350 runs in 100.1 overs (605 balls), Extras 11
  • Drinks: India - 358/3 in 106.0 overs (SR Tendulkar 26, VVS Laxman 23)
  • 4th Wicket: 50 runs in 144 balls (SR Tendulkar 24, VVS Laxman 26, Ex 0)
  • Lunch: India - 392/6 in 120.2 overs (MS Dhoni 0)
  • India: 400 runs in 122.3 overs (739 balls), Extras 11
  • Drinks: India - 441/8 in 137.0 overs (Harbhajan Singh 32, PP Ojha 4)
  • India: 450 runs in 139.1 overs (841 balls), Extras 13
  • Harbhajan Singh: 50 off 58 balls (4 x 4, 2 x 6)
  • 9th Wicket: 50 runs in 81 balls (Harbhajan Singh 42, PP Ojha 6, Ex 2)
  • Tea: India - 487/10 in 151.5 overs (S Sreesanth 2)
  • Drinks: New Zealand - 32/2 in 14.0 overs (BB McCullum 18, LRPL Taylor 3)
  • New Zealand: 50 runs in 19.4 overs (118 balls), Extras 5
  • End Of Day: New Zealand - 69/2 in 28.0 overs (BB McCullum 38, LRPL Taylor 18)

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நன்றி: தினமலர்

Thursday, November 4, 2010

இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் முதல் நாள் குறிப்புகள்

Day 1
  • India: 50 runs in 11.1 overs (68 balls), Extras 2
  • 1st Wicket: 50 runs in 68 balls (G Gambhir 19, V Sehwag 32, Ex 2)
  • Drinks: India - 66/1 in 14.0 overs (V Sehwag 39, R Dravid 4)
  • V Sehwag: 50 off 49 balls (10 x 4)
  • India: 100 runs in 21.4 overs (131 balls), Extras 2
  • 2nd Wicket: 50 runs in 82 balls (V Sehwag 41, R Dravid 12, Ex 0)
  • Lunch: India - 127/1 in 30.0 overs (V Sehwag 87, R Dravid 12)
  • V Sehwag: 100 off 111 balls (17 x 4)
  • India: 150 runs in 40.1 overs (243 balls), Extras 7
  • 2nd Wicket: 100 runs in 176 balls (V Sehwag 78, R Dravid 17, Ex 5)
  • Drinks: India - 174/1 in 46.0 overs (V Sehwag 129, R Dravid 17)
  • India: 200 runs in 51.2 overs (311 balls), Extras 9
  • 2nd Wicket: 150 runs in 257 balls (V Sehwag 107, R Dravid 36, Ex 7)
  • R Dravid: 50 off 151 balls (8 x 4)
  • V Sehwag: 150 off 169 balls (22 x 4, 1 x 6)
  • Tea: India - 243/1 in 62.0 overs (V Sehwag 152, R Dravid 61)
  • India: 250 runs in 62.4 overs (379 balls), Extras 9
  • 2nd Wicket: 200 runs in 320 balls (V Sehwag 118, R Dravid 73, Ex 9)
  • India: 300 runs in 77.1 overs (467 balls), Extras 11
  • R Dravid: 100 off 215 balls (14 x 4)
  • Drinks: India - 307/2 in 78.0 overs (R Dravid 101, SR Tendulkar 1)
  • New Ball Taken: India 310/2 after 80.1 overs (R Dravid 103, SR Tendulkar 2)
  • End Of Day: India - 329/3 in 90.0 overs (SR Tendulkar 13, VVS Laxman 7)

Monday, November 1, 2010

உலகக் கோப்பை கிரிக்கெட் - முழு விபரம்



The 2011 ICC Cricket World Cup will be the tenth Cricket World Cup and will be hosted by three South Asian Test cricket playing countries: India, Sri Lanka and Bangladesh. It will be Bangladesh's first time co-hosting a Cricket World Cup. The World Cup will use cricket's One Day International format, with fourteen national cricket teams scheduled to compete. The World Cup will take place between February and early April 2011, with the first match to be played on 19 February 2011 with co-hosts India and Bangladesh facing off at the Sher-e-Bangla National Stadium in Mirpur.

The World Cup was also supposed to be co-hosted by Pakistan, but in the wake of the 2009 attack on the Sri Lanka national cricket team in Lahore, the International Cricket Council (ICC) decided to strip Pakistan of its hosting rights. The headquarters of the organising committee were originally situated in Lahore, but have now been shifted to Mumbai. Pakistan was supposed to hold 14 matches, including one semi-final. Eight of Pakistan's matches have been awarded to India, four to Sri Lanka and two to Bangladesh

Schedule:

Group A Matches



20 February 2011
09:30
New Zealand VS Kenya M. A. Chidambaram Stadium, Chennai

20 February 2011
09:00
Sri Lanka VS Canada Hambantota International Cricket Stadium, Hambantota

21 February 2011
14:30
Australia VS Zimbabwe Sardar Patel Stadium, Ahmedabad

23 February 2011
14:30
Pakistan Vs Kenya Hambantota International Cricket Stadium, Hambantota

25 February 2011
14:30
New Zealand Vs Australia Vidarbha Cricket Association Stadium, Nagpur

26 February 2011
14:30
Sri Lanka Vs Pakistan R. Premadasa Stadium, Colombo

28 February 2011
09:30
Zimbabwe Vs Canada Vidarbha Cricket Association Stadium, Nagpur

1 March 2011
14:30
Sri Lanka Vs Kenya R. Premadasa Stadium, Colombo

3 March 2011
14:30
Pakistan Vs Canada R. Premadasa Stadium, Colombo

4 March 2011
09:30
New Zealand Vs Zimbabwe Sardar Patel Stadium, Ahmedabad

5 March 2011
14:30
Sri Lanka Vs Australia R. Premadasa Stadium, Colombo

7 March 2011
14:30
Kenya Vs Canada Feroz Shah Kotla, Delhi

8 March 2011
14:30
Pakistan Vs New Zealand Pallekele International Cricket Stadium, Kandy

10 March 2011
14:30
Sri Lanka Vs Zimbabwe Pallekele International Cricket Stadium, Kandy

13 March 2011
09:30
New Zealand Vs Canada Wankhede Stadium, Mumbai

13 March 2011
14:30
Australia Vs Kenya M. Chinnaswamy Stadium, Bengaluru

14 March 2011
14:30
Pakistan Vs Zimbabwe Pallekele International Cricket Stadium, Kandy

16 March 2011
14:30
Australia Vs Canada M. Chinnaswamy Stadium, Bengaluru

18 March 2011
14:30
Sri Lanka Vs New Zealand Wankhede Stadium, Mumbai

19 March 2011
14:30
Pakistan Vs Australia R. Premadasa Stadium, Colombo

20 March 2011
09:30
Zimbabwe Vs Kenya Eden Gardens, Kolkata

Group B Matches


19 February 2011
14:30
India Match 1 Bangladesh Sher-e-Bangla Cricket Stadium, Dhaka

22 February 2011
14:30
England Vs Netherlands Vidarbha Cricket Association Stadium, Nagpur

24 February 2011
14:30
South Africa Vs West Indies Feroz Shah Kotla, New Delhi

25 February 2011
09:30
Bangladesh Vs Ireland Sher-e-Bangla Cricket Stadium, Dhaka

27 February 2011
14:30
India Match 11 England Eden Gardens, Kolkata

28 February 2011
14:30
West Indies Vs Netherlands Feroz Shah Kotla, New Delhi

2 March 2011
14:30
England Vs Ireland M. Chinnaswamy Stadium, Bangalore

3 March 2011
09:30
South Africa Vs Netherlands Punjab Cricket Association Stadium, Mohali

4 March 2011
14:30
Bangladesh Vs West Indies Sher-e-Bangla Cricket Stadium, Dhaka

6 March 2011
14:30
India Vs Ireland M. Chinnaswamy Stadium, Bangalore

6 March 2011
09:30
England Vs South Africa M. A. Chidambaram Stadium, Chennai

9 March 2011
14:30
India Vs Netherlands Feroz Shah Kotla, New Delhi

11 March 2011
09:30
Ireland Vs West Indies Punjab Cricket Association Stadium, Mohali

11 March 2011
14:30
Bangladesh Vs England Chittagong Divisional Stadium, Chittagong

12 March 2011
14:30
India Vs South Africa Vidarbha Cricket Association Stadium, Nagpur

14 March 2011
09:30
Bangladesh Vs Netherlands Chittagong Divisional Stadium, Chittagong

15 March 2011
14:30
South Africa Vs Ireland Eden Gardens, Kolkata

17 March 2011
14:30
England Vs West Indies M. A. Chidambaram Stadium, Chennai

18 March 2011
09:30
Ireland Vs Netherlands Eden Gardens, Kolkata

19 March 2011
09:30
Bangladesh Vs South Africa Sher-e-Bangla Cricket Stadium, Dhaka

20 March 2011
14:30
India Vs West Indies M. A. Chidambaram Stadium, Chennai

Quarter-finals


23 March 2011
14:30
Group A1 Vs Group B4 Sher-e-Bangla Cricket Stadium, Dhaka

24 March 2011
14:30
Group A2 Vs Group B3 R. Premadasa Stadium, Colombo

25 March 2011
14:30
Group A3 Vs Group B2 Sher-e-Bangla Cricket Stadium, Dhaka

26 March 2011
14:30
Group A4 Vs Group B1 Sardar Patel Stadium, Ahmedabad

Semi-finals


29 March 2011
14:30
Winner of Match 43 VS Winner of Match 44 R. Premadasa Stadium, Colombo

30 March 2011
14:30
Winner of Match 45 Vs Winner of Match 46 Punjab Cricket Association Stadium, Mohali

Final Match


2 April 2011
14:30
Winner of Match 47 Match 49 Winner of Match 48 Wankhede Stadium, Mumbai

நவம்பர் மாஸ ஆன்மீக குறிப்புகள்

நவம்பர் மாத ஆன்மீக குறிப்புகள்

விக்ருதி வருஷம் உத்தராயணம் - சரத் ரிது -

ஐப்பசி - கார்த்திகை மாத(நவம்பர் மாத) ஆன்மீகக் குறிப்புகள் - வாக்கியப் பஞ்சாங்ககணிதம்

வழங்குபவர் - பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

முகூர்த்தங்கள்

த.தேதி ஆங்கிலம் கிழமை நக்ஷத்ரம் லக்னம் திதி நேரம்
ஐப்பசி 15 01-11 திங்கள் மகம் தனுசு தசமி காலை 9.00 - 10.30*
ஐப்பசி 17 03-11 புதன் உத்திரம் தனுசு துவாதசி காலை 9.00 - 10.30*
ஐப்பசி 17 03-11 புதன் உத்திரம் மகரம் துவாதசி காலை 10.30 - 12.00*
ஐப்பசி 18 04-11 வியாழன் ஹஸ்தம் தனுசு திரயோதசி காலை 9.00 - 10.30*
ஐப்பசி 22 08-11 திங்கள் அனுஷம் மகரம் வ.பி. துவிதியை காலை 9.00 - 10.30
ஐப்பசி 24 10-11 புதன் மூலம் மகரம் சதுர்த்தி காலை 9.00 - 10.30
ஐப்பசி 24 10-11 புதன் மூலம் கும்பம் சதுர்த்தி காலை 10.30 - 12.00
ஐப்பசி 26 12-11 வெள்ளி உத்திராடம் மகரம் ஷஷ்டி காலை 09.00 - 10.30
ஐப்பசி 17 03-11 புதன் உத்திரம் தனுசு துவாதசி காலை 9.00 - 10.30
கார்த் 02 18-11 வியாழன் ரேவதி தனுசு துவாதசி காலை 07.30 - 9.00
கார்த் 02 18-11 வியாழன் ரேவதி மகரம் துவாதசி காலை 9.00 - 10.30
கார்த் 03 19-11 வெள்ளி அசுபதி தனுசு திரயோதசி காலை 9.00 - 10.30
கார்த் 12 28-11 ஞாயிறு மகம் தனுசு ஸப்தமி காலை 07.30 - 9.00*
கார்த் 12 28-11 ஞாயிறு மகம் மகரம் ஸப்தமி காலை 9.00 - 10.30*
* - இக்குறியிட்டவை தேய்பிறை முகூர்த்தங்கள்

முக்கிய விரதாதி தினங்கள்

தமிழ் ஆங்கிலம் கிழமை சிறப்பு
ஐப்பசி 16 02-11 செவ்வாய் ஸர்வைகாதசி
17 03 - 11 புதன் பிரதோஷம்
18 04 - 11 வியாழன் மாஸ சிவராத்திரி, இரவு தீபாவளி பண்டிகை
19 05 - 11 வெள்ளி காலை நரக சதுர்த்தசி ஸ்நானம், யமதர்ப்பணம், கேர்ஜர வருஷாரம்பம், கேதார கௌரி விரதம், அமாவாஸ்யை தர்ப்பணம்
23 09 - 11 செவ்வாய் நாகசதுர்த்தி
25 11 - 11 வியாழன் ஸ்கந்த ஷஷ்டி, சூரசம்ஹாரம், ஷஷ்டி விரதம்
27 13 - 11 சனி ஸ்ரவண விரதம்

கார்த்திகை

01

17 - 11 புதன் கைசிகைகாதசி
02 18 - 11 வியாழன் சாதுர்மாஸ்யஸமாப்தி, துளஸி விவாஹம்
03 19 - 11 வெள்ளி பிரதோஷம்
05 21 - 11 ஞாயிறு திருக்கார்த்திகை, ருத்திர தீபம், ஸ்ரீஈ அண்ணாமலையார் தீபம், வைகானஸ தீபம், பௌர்ணமி விரதம், பூஜை, கார்த்திகை விரதம்
06 22 - 11 திங்கள் பாஞ்சராத்திர தீபம்
09 25 - 11 வியாழன் ஸங்கடஹர சதுர்த்தி
13 29 - 11 திங்கள் ஸ்ரீ மஹாதேவாஷ்டமி

முக்கிய குருபூஜை விவராதிகள்

தமிழ் ஆங்கிலம் கிழமை நக்ஷத்ரம் குருமார்
ஐப்பசி 19 05 - 11 வெள்ளி ஸ்வாதி மெய்கண்டார் நாயனார்
21 07 - 11 ஞாயிறு அனுஷம் பூசலார் நாயனார்
23 09 - 11 செவ்வாய் மூலம் ஐயடிகள் காடவர்கோன்
24 10 - 11 புதன் மூலம் மணவாள மாமுனிகள்
25 11 - 11 வியாழன் பூராடம் திருக்குருகைப்பிரான் சேனை முதலியார்
27 13 - 11 சனி திருவோணம் பொய்கையாழ்வார்
28 14 - 11 ஞாயிறு அவிட்டம் பூதத்தாழ்வார்
29 15 - 11 திங்கள் ஸதயம் பேயாழ்வார்
கார்த் 5 21 - 11 ஞாயிறு கார்த்திகை கணம்புல்ல நாயனார்
6 22 - 11 திங்கள் கார்த்திகை திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஸுதர்சன ஜெயந்தி
7 23 - 11 செவ்வாய் ரோஹினி திருப்பாணாழ்வார்
14 30 - 11 செவ்வாய் உத்ரம் மெய்ப்பொருள் நாயனார்

நவம்பர் மாஸ கிரஹநிலை

வி 0 0 கே
0

07 உ கும்பம் வக் வியா

17உ விருச்சிகம் சூரி

20 உ மீனம் வியா

28 உ தனுசு செவ்

0
0 0
ரா செ பு சூ சு சனி

வாஸ்து

நவம்பர் மாஸம் 24ம் தியதி புதன்கிழமை காலை மணி 11.00 - 11.30க்குள் வாஸ்து பூஜை செய்யலாம்.