உங்களைப் பற்றி:
"துலாத்தான் எங்கும் உண்டு" என்பதற்கேற்ப எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் துலா இராசி வாசகர்களே, நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர்.
எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:
இது வரை உங்களுக்கு பல விதமான முறையிலும் விரையங்களையும் லாபங்களாக்கிய குருபகவான் இனி என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.
முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்பவேண்டாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை முடிந்த வரை தவிர்க்கவும். எந்த காரியத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்காதீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை. வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதை செய்ய மறவாதீர்கள். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. வாழ்க்கைதுணையுடன் உறவு சிறக்கும். புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. தந்தையுடன் உறவு சிறக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது. உங்கள் வியாபாராத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். தூங்கப் போகும் முன் எந்த விதமான யோசனைகளும் வேண்டாம். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும். பொதுவில் இந்த குருப் பெயர்ச்சி தங்களுக்கு மிகவும் இனிதாக இருக்கும்.
நக்ஷத்திர ரீதியான பலன்கள்:
சித்திரை 3, 4ம் பாதங்கள்: முடிந்தவரை கடன் வாங்காமிலிருப்பது நல்லது. எந்த தருணத்திலும் டென்ஷன் கூடவே கூடாது. செவ்வாய் கிழமையன்று முருகன் வழிபாடு நன்மையைத் தரும்.
ஸ்வாதி: மனதில் எதையும் வைத்திராமல் யாருடனாவது கலந்துரையாடுங்கள். முடிந்தவரை தனிமையைத் தவிருங்கள். வெளியூர் வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் தகராறு வரலாம். முடிந்த வரை வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் : உற்சாகம் இல்லா காரியங்களில் ஈடுபட வேண்டாம். மனத்தை ஒருமுகப்படுத்தி எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள். அரசுவழியில் சோதனைகள் வரலாம் கவனம். கூட்டுதொழில் ஆரம்பிப்பதாய் இருந்தால் நன்கு பரிசீலித்து ஈடுபடவும். மகான்களை வழிபடவும்.
குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஸரஸ்வதி வழிபாடு நன்மையைத்தரும்.
லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம் | இராசி | பலன்கள் | பரிகாரம் |
மேஷம் | துலாம் | 60/100 | சுப்பிரமணிய புஜங்கம் படிப்பது |
ரிஷபம் | துலாம் | 60/100 | விநாயகர் அகவல் படிப்பது மற்றும் ஸ்ரீஸூக்தம் சொல்வது |
மிதுனம் | துலாம் | 55/100 | விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது |
கடகம் | துலாம் | 65/100 | ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் சொல்வது |
ஸிம்ஹம் | துலாம் | 55/100 | ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது |
கன்னி | துலாம் | 60/100 | விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது |
துலாம் | துலாம் | 60/100 | கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது. |
விருச்சிகம் | துலாம் | 60/100 | கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது. |
தனுர் | துலாம் | 65/100 | ஹனுமத் கவசம் சொலவது. |
மகரம் | துலாம் | 65/100 | கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது. |
கும்பம் | துலாம் | 55/100 | லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது. |
மீனம் | துலாம் | 65/100 | தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது |
லக்னமே தெரியாது | துலாம் | 60/100 | கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது. |
குறிப்பு: [1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது? நீங்கள் துலாம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் துலாம் இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் துலாம் இராசி என்பவர்கள் கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது பரிகாரமாகும். [2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம். |
நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:
* | நக்ஷத்திரங்கள் | ||
பலன்கள் | சித்திரை - 3, 4 ம் பாதங்கள் | ஸ்வாதி | விசாகம் - 1, 2, 3 ம் பாதங்கள் |
இராசி | துலாம் | துலாம் | துலாம் |
இராசியாதிபதி | சுக்ரன் | சுக்ரன் | சுக்ரன் |
நக்ஷத்திர அதிபதி | செவ்வாய் | இராகு | வியாழன் |
அதிதேவதைகள் | துவஷ்டா | வாயு | இந்திராக்னி |
கணம் | இராக்ஷஸ் கணம் | தேவகணம் | இராக்ஷஸ் கணம் |
நாடி | மத்ய | பார்ஸுவ - இடது | பார்ஸுவ - இடது |
மிருகம் | பெண் புலி | ஆண் எருமை | ஆண் புலி |
பக்ஷி | மரங்கொத்தி | தேனீ | செவ்வாக் |
விருக்ஷம் | வில்வம் | மருது | விளா |
இரஜ்ஜு | தொப்புள் | கழுத்து | வயிறு |
வேதை நக்ஷத்ரம் | மிருகசீர்ஷம் அவிட்டம் | உரோஹினி | கார்த்திகை |
அதிர்ஷ்டம் தரும் எண்கள் | 1, 3, 4, 6, 7, 9 | 1, 2, 3, 6, 7, 9 | 1, 3, 6, 7, 9 |
அதிர்ஷ்டம் தரும் திசைகள் | வடக்கு | கிழக்கு, வடக்கு | மேற்கு, வடக்கு |
குறிப்பு: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே. |
No comments:
Post a Comment