Tuesday, November 30, 2010

மீனம் - குருப் பெயர்ச்சி பலன்கள்



உங்களைப் பற்றி:

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை விரையஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி ஸ்வயஸ்தானத்தில் அமர்ந்து என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். அனைத்திலும் விரையம், எந்த பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கும் நல்ல காலம் பிறந்து விட்டது. கடுஞ்சொற்கலை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களையும் நினைத்து பாருங்கள். நண்பர்கள் தேவைதான், அதற்காக எப்போதுமே நண்பர்கள்தான? ஆனால் ஒன்று நட்புக்காக உயிரையே கொடுக்கும் தியாகசுடர் நீங்கள். நல்லது. தைரியத்தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள், ஆனால் உங்கள் அடிமனதில் சின்ன பயம் இருக்கும். இனி அந்த பயம் வேண்டாம். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பது இருக்கட்டும். முதலில் நீங்கள் நன்று படியுங்கள். வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். பிள்ளைகள் இல்லாதவர்கள் பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். ஆனாலும் நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கீறீர்கள். அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே க்ஊடாது. ஒரு இடத்திற்கு கிளம்பும் முன் சீக்கிரம் கிளம்புங்கள். எந்நேரமும் டென்ஷணாகவே இருக்காதீர்கள். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல ப்எயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது. நல்லதூக்கம், சாப்பாடு என வாழ்க்கையை நன்கு அனுபவிக்கிறீர்கள். மொத்ததில் தடைக்கற்களை சாதனைகளாக மாற்றும் வித்தைகள சொல்லிக் கொடுக்கும் விதமாக இருக்கும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

பூரட்டாதி 4ம் பாதம் : வெளியூர் பயணங்களால் அனுகூல்யம் உண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியையும் மகான்களையும் வியாழக்கிழமைகளில் தரிசனம் செய்து வாருங்கள்.

உத்திரட்டாதி : எதிரிகளின் பலம் என்ன என்று உங்களுக்கு தெரிய வரும். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். அனுமன் காயத்ரியை சொல்ல சொல்ல வாழ்வில் இனிதே நடக்கும்.

ரேவதி : உடல்நலம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வும் இடமாறுதலும் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஆராதனம் செய்தால் எல்லா நலமும் கிடைக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: விநாயகர் அகவல், ஸ்லோகம் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் மீனம் 60/100 சண்முக கவசம் படிப்பது
ரிஷபம் மீனம் 65/100 ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் மீனம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் மீனம் 70/100 ஸ்ரீசியாமளா தண்டகம் சொல்வது
ஸிம்ஹம் மீனம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி மீனம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் மீனம் 60/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது
விருச்சிகம் மீனம் 70/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது
தனுசு மீனம் 60/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம் மீனம் 70/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் மீனம் 55/100 துர்க்கா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது
மீனம் மீனம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
லக்னமே தெரியாது மீனம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் மீனம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மீனம் இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 55% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: துர்க்கா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது. . எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மீனம் இராசி என்பவர்கள் தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் பூரட்டாதி 4 உத்திரட்டாதி ரேவதி
இராசி மீனம் மீனம் மீனம்
இராசியாதிபதி வியாழன் வியாழன் வியாழன்
நக்ஷத்திர அதிபதி வியாழன் சனி புதன்
அதிதேவதைகள் அஜைகபாத் அகிர்புத்னியன் பூஷா
கணம் மனுஷ கணம் மனுஷ கணம் தேவ கணம்
நாடி பார்ஸுவ - வலது மத்ய நாடி பார்ஸுவ - இடது
மிருகம் சிங்கம் பசு யானை
பக்ஷி உள்ளான் குயில் வல்லூறு
விருக்ஷம் மாமரம்(தோமா) வேம்பு இலுப்பை
இரஜ்ஜு வயிறு தொடை இரஜ்ஜு பாதம்
வேதை நக்ஷத்ரம் உத்திரம் பூரம் மகம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 5, 7, 9 1, 3, 4, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, மேற்கு கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

1 comment:

கோகுல் said...

மீன ராசிக்கு அருமையான பலன்கள் போட்டிருக்கீங்க. உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும். மிக்க நன்றி!