உங்களைப் பற்றி:
எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத கும்ப இராசி வாசகர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள்.
எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:
இது வரை ஸ்வயஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி தனஸ்தானத்தில் அமர்ந்து என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.
எதிலும் ஏமாற்றம், பங்கு தாரர்களுடன் மனக்கசப்பு, வேலை செய்யும் இடத்தினில் கூடுதல் வேலைப்பளு என மிகப்பெரிய சவாலை சமாளித்திருக்கிறீர்கள். பாராட்டுகள். கடந்த ஒரு வருடகாலமாக கத்தி மேல் நடந்தது போல் இருத்ததல்லவா?இனி அந்த நிலை மெல்ல மெல்ல மாறும். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. செய்யாத தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும் காலமிது. சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தியதே அந்த நிலைகளிலும் முன்னேற்றம் இருக்கும். எதிலும் தெய்வத்தை நம்பும் நீங்கள் உங்களுக்கு தெய்வம் உதவி செய்வதை மறந்து விடதீர்கள். தைரியமாக எதையும் எதிர் கொள்ள தயாராகுங்கள். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும் காலமிது. படிப்பு, வாகனம் ஆகியவற்றில் லாபம் உண்டு. சின்ன சின்ன இடையூறுகளை களைந்தால் உங்கள் சாதனைகளை பார்க்கலாம். தாய் தாய் வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், பணி பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள். தூங்கப்போகும் முன், எங்கும் பயணிக்கும் முன் முன்னோர்கள் வழிபாடு முக்கியம். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பரிபூரண சுகத்தையும், அறிவையும் கொடுக்கும்.
நக்ஷத்திர ரீதியான பலன்கள்:
அவிட்டம் ,3,4ம் பாதம் : சிறுசிறு நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை. முருகனை வணங்குங்கள், முன்னின்று அனைத்தையும் நடத்துவான்.
ஸதயம் : இடையூறுகள் வந்தாலும் எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக போட்டிகள் வரலாம். வம்பு வழக்கு கூடவே கூடாது. துர்க்கையை வணங்கினால் எதிலும் வெற்றிதான்.
பூரட்டாதி 1,2,3 ம் பாதம் : பிள்ளைகளால் தொந்தரவு நேரலாம். வெளிவட்டாரபழக்கங்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும். வியாழபகவானை மனதில் நினைத்துக் கொண்டேஇருந்தால் மனதிடம் அதிகரிக்கும்.
குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: அபிராமி அந்தாதியில் தனந்தரும் பாடலை படிப்பது நன்மையைத்தரும்.
லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம் | இராசி | பலன்கள் | பரிகாரம் |
மேஷம் | கும்பம் | 55/100 | சஷ்டி கவசம் படிப்பது |
ரிஷபம் | கும்பம் | 65/100 | ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது |
மிதுனம் | கும்பம் | 55/100 | விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது |
கடகம் | கும்பம் | 65/100 | ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது |
ஸிம்ஹம் | கும்பம் | 50/100 | ஆதித்யஹ்ருதயமி சொல்வது |
கன்னி | கும்பம் | 50/100 | விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும் |
துலாம் | கும்பம் | 50/100 | நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது. |
விருச்சிகம் | கும்பம் | 60/100 | கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது |
தனுசு | கும்பம் | 55/100 | கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு |
மகரம். | கும்பம் | 60/100 | குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது. |
கும்பம் | கும்பம் | 55/100 | கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது. |
மீனம் | கும்பம் | 60/100 | தன்வந்திரி ஸ்லோகம், காயத்ரி சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது |
லக்னமே தெரியாது | கும்பம் | 55/100 | கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது. |
குறிப்பு: [1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது? நீங்கள் கும்பம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கும்பம் இராசியில் பிறந்து கடகம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கும்பம் இராசி என்பவர்கள் கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது. [2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம். |
நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:
* | நக்ஷத்திரங்கள் | ||
பலன்கள் | அவிட்டம் 3,4 | ஸதயம் | பூரட்டாதி் 1,2,3 |
இராசி | கும்பம் | கும்பம் | கும்பம் |
இராசியாதிபதி | சனி | சனி | சனி |
நக்ஷத்திர அதிபதி | செவ்வாய் | இராகு | குரு |
அதிதேவதைகள் | வஸுக்கள் | வருணன் | அஜைகபாத் |
கணம் | இராக்ஷஸ கணம் | இராக்ஷஸ கணம் | மனுஷ கணம் |
நாடி | மத்ய | பார்ஸுவ - வலது | பார்ஸுவ - வலது |
மிருகம் | பெண் சிங்கம் | பெண் குதிரை | சிங்கம் |
பக்ஷி | வண்டு | அண்டங்காக்கை | உள்ளான் |
விருக்ஷம் | வன்னி | கடம்பு | மாமரம்(தோமா) |
இரஜ்ஜு | சிரோ | கழுத்து இரஜ்ஜு | வயிறு |
வேதை நக்ஷத்ரம் | மிருகசீர்ஷம், சித்திரை | ஹஸ்தம் | உத்திரம் |
அதிர்ஷ்டம் தரும் எண்கள் | 1, 3, 4, 5, 7, 9 | 1, 3, 4, 6, 7, 9 | 1, 3, 6, 7, 9 |
அதிர்ஷ்டம் தரும் திசைகள் | கிழக்கு, தெற்கு | கிழக்கு, தெற்கு | கிழக்கு, தெற்கு |
குறிப்பு: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே. |
1 comment:
நண்பரே, நல்ல நாள் பார்ப்பது எப்படி என்று எழுதுங்களேன்!
Post a Comment