Thursday, March 19, 2026

🤔 யோகி - அனுயோகி - அவயோகி - பாகம் 02

 🤔 யோகி - அனுயோகி - அவயோகி - பாகம் 02

யோகி கணிதம்:

குழந்தை பிறந்த தேதி:

ஆண்

30.04.2021

1.30 அதிகாலை

சென்னை


குழந்தை பிறந்த போது இருக்கும் கிரகநிலை:

சூரியன் - 15:28 - பரணி 01ம் பாதம்

சந்திரன் - 23:29 - கேட்டை 03ம் பாதம்


யோகி கணக்கீடு முறை:

சூரியன் பாகை + சந்திரன் பாகை + 93 பாகை 20 கலை  = யோகி. 


015.28

223.29

093.20

-------

332.17

--------


பூரட்டாதி நான்காம் பாதத்தின் மீது யோகி புள்ளி விழுகிறது.

எனவே யோகி குரு - அனுயோகி குரு ஆகும்.

எனவே பூரட்டாதி நக்ஷத்ரத்தில் இருக்கும் கிரகத்தின் தசை புத்தியில் இந்த ஜாதகருக்கு அனுகூலம் வந்து சேரும்.


அவயோகி பூரட்டாதியில் இருந்து 6ம் நக்ஷத்ரம் - க்ருத்திகை ஆகும். இந்த ஜாதகருக்கு க்ருத்திகையில் புதன் அமர்ந்திருக்கிறார். இவர் பிறக்கும் போது புதன் தசை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் நடக்கிறது. இந்த எட்டு வருடங்களுமே இவர் ஜாதகத்தை பார்க்கும் போது குடும்பத்திற்கு சிரமத்தை கொடுக்கலாம். 

-------------------------------------------------------------

யோகி பலன்கள்

 🔥யோகி கிரகம் தனது திசையில் நல்ல பலன்களை கொடுப்பார். 

 🔥யோகி சாரத்தில் கிரகங்கள் அல்லது மனைவி நட்சத்திரம் இருந்தால் வாழ்க்கை உயர்வு, யோகங்கள் நடக்கும்.

 🔥இந்த மூலம் வேலை, செல்வம், உறவுகளில் மேன்மை ஏற்படும்.

அவயோகி பலன்கள்

அவயோகி திசையில் வருமான இழப்பு, வழக்கு பிரச்சனை, குடும்ப பாதிப்பு போன்ற கெடு பலன்கள் ஏற்படலாம்.

​லக்னாதிபதி அல்லது தசை கிரகம் அவயோகியாக இருந்தால் கடும் தடைகள் ஏற்படும். 

👍பரிகாரங்கள்

அவயோகி கிரகத்தின் தெய்வ வழிபாடு, அனைத்திலும் எச்சரிக்கையாக நடப்பது, தான தர்ம செயல்கள் தீமைகளைக் குறைக்கும்.

🙏 அடியேன் தாசன் 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரம்பரை ஜோதிடர்

+91 78 45 11 95 42


No comments: