Wednesday, March 18, 2026

🤔 யோகி - அனுயோகி - அவயோகி

 

🤔
யோகி - அனுயோகி - அவயோகி

சில ஜாதகங்களில் கிரகங்கள் உச்சமாகி ராஜயோகத்தை தரும் இடத்தில் இருந்தாலும் அந்த ஜாதகரின் வாழ்க்கை முழுவதும் துன்பத்திலேயே உளல்கிறது. இதற்கு காரணம் அவருக்கு யோகத்தை தர வேண்டிய கிரகங்கள் அவயோகியின் தொடர்பில் இருப்பது தான். ஒரு ஜாதகத்தை ஆராயும் போது முதலில் யோகி அனுயோகி அவயோகிகளை கண்டறிவதே முக்கியமாகும்.

யோகி கணக்கீடு முறை:
சூரியன் பாகை + சந்திரன் பாகை + 93 பாகை 20 கலை = யோகி.
இந்த மூன்றின் கூட்டுத் தொகையை மேஷத்தை முதலாக கொண்டு கணக்கிட எந்த நட்சத்திரத்தில் பாகை விழுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியே யோகி ஆகும்.
அந்த ராசியின் அதிபதி அனுயோகி.

யோகி நட்சத்திரத்தில் இருந்து கணக்கிட வரும் ஆறாவது நட்சத்திரத்தின் அதிபதி அவயோகியாகும்.
யோகியும் அனுயோகியும் நல்ல பலன்களையும் அவயோகி தீய பலன்களையும் தருவார்கள். ஒரு ஜாதகத்தில் யோகி என்பவர் மிகச்சிறந்த பலனை அந்த ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்குவார். யோகி கெடாமல் நல்ல நிலையில் உள்ள ஜாதகங்கள் யோக ஜாதகங்கள் ஆகும். யோகியும் அனுயோகியும் தசா புத்திக்கு அப்பாற்பட்டு அந்த ஜாதகருக்கு நல்ல பலன்களை கொடுப்பார்கள். ஒரு ஜாதகத்தில் யோகியானவர் வக்ரம் நீசம் ஆகாமல் இருக்க வேண்டும் - நமக்கு நற்பலன்கள் கிடைக்கும். அவயோகி ஆறு அல்லது எட்டுக்குடையவரின் சாரமோ - அஸ்தங்கதமோ - வக்கிரமோ பெற்றிருந்தால் கெடுபலன்கள் குறையும். யோகி அவயோகியின் சாரம் பெற்றாலும் - அவயோகியானவர் யோகியின் சாராம் பெற்றாலும் கெடுப்பலன்களை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நாளை மீண்டும் தொடர்வோம்.

🙏
அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பரம்பரை ஜோதிடர்
+91 78 45 11 95 42

No comments: