ஷோடசாம்சம் - 16 என்ற எண்ணின் மகத்துவம்
🤔 16 என்ற எண் மிகவும் உயர்வு பொருந்தியது. ”ஷோடச கலா பூரணம்” என்பது அமாவாசையில் ஆரம்பித்து பௌர்ணமி வரை. 16 கலைகள் முதல் கலையில் ஆரம்பித்து 16வது கலையை அடைகிற போது சந்திரன் பூரண சந்திரன் ஆகிறது.
வாழ்க்கையில் 16 விதமான செல்வங்களையும் உண்டா இல்லையா என்பதை ஷோடசாம்சத்தை கொண்டு ஆராய முடியும். ஷோடசாம்சம் என்பது ஒரு ராசியை 16 சம பிரிவாக பிரிப்பது. ஒரு பாகை 52 கலை 30 விகலை என்பது அம்சத்தில் ஒரு பாகமாகும்.
சந்தோஷம் - துக்கம் - வாகனம் - வீடு மண் மனை ன்றவற்றினை இதன் மூலம் அறிய முடியும். ஷோடசாம்சத்தில் ராகு கேதுவின் தொடர்பு மிக மிக முக்கியமானதாக கொள்ள வேண்டும். வாழ்க்கை சுகங்களை இதன் மூலமாக சுலபமாக கணக்கிட முடியும்.
ஷோடசாம்சம் அதாவது D16 chart என்பது ஜோதிடத்தில் பகுதி. இதன் மூலமாக ஆடம்பர வாழ்க்கை - நமக்கு சந்தோஷத்தை கொடுக்கக் கூடிய விஷயங்கள் - எப்படி கிடைக்கும் என்பதை நமக்கு காட்டும்.
⦁ வாகனப் பிராப்தி
⦁ பணப்பரிவர்த்தனை
⦁ விலை உயர்ந்த பொருட்கள்
⦁ ஆடம்பரம் மூலமாக சந்தோஷம்
⦁ வாகனங்கள் மூலமாக ஏற்படக்கூடிய விபத்து
⦁ முன் ஜென்மத்தில் இருந்த பழக்கவழக்கங்கள்
ஆகியவற்றை நாம் கண்டுபிடிக்க முடியும்.
👍 பொதுவாக இந்த ஷோடசாம்சத்திற்கு சந்திரன், சுக்கிரன் மற்றும் ராகு - கேது வைத்து பலன்கள் கூற வேண்டும். ஷோடசாம்ச லக்னத்திற்கு 6 - 8 - 12 ஆம் இடங்களில் லக்னாதிபதியோ அல்லது தசா நாதனோ இருந்தால் பலன்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். இந்த ஷோடசாம்சத்தில் நாம் 1 - 4 - 8 - 9 - 12ம் இடங்களை முக்கியமாக எடுக்க வேண்டும்.
👍கோச்சாரம்:
கோச்சார ரீதியாக நம்முடைய தசா நாதன் லக்னம் - ராசி - சூரியன் (விதி - மதி - கதி) ஆகிய ஸ்தானங்களுக்கு எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை வைத்து கோச்சார ரீதியாக பலன்களை நாம் கணிக்க வேண்டும்.
👍உதாரணம்:
குழந்தை பிறந்த தேதி:
ஆண்
30.04.2021
1.30 அதிகாலை
சென்னை
⦁ சித்திரை மாதம்
⦁ கேட்டை நக்ஷத்ரம் - விருச்சிக ராசி
⦁ மகர லக்னம் - அவிட்டம் 01ம் பாதசாரம்
⦁ புதன் தசை குரு புத்தி நடக்கிறது.
👍ஷோடசாம்ச லக்னம்: ரிஷபம்.
👍கிரகநிலை விபரம்:
1. லக்னத்தில் செவ் - சுக்கிரன். சுக்கிரன் ஆட்சி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் ஆட்சி - சுக ஸ்தானத்தில் சந்திரன்.
2. சுகஸ்தானத்தை செவ் - சனி பார்க்கக்கூடிய அமைப்பு. தசாநாதன் புதன் தனவாக்கு ஸ்தானத்தில் ஆட்சியாக இருப்பது சிறப்பு என்றாலும் - சுகஸ்தானத்தை இரண்டு பகை கிரகங்கள் பார்ப்பது சரி இல்லை.
3. வீடு மண் மனை வாகன யோகம் இக்குழந்தைக்கு இருக்கிறது.
4. புதன் தசை முடிந்து கேது தசையும் முடிந்து இக்குழந்தையின் 15 வயதில் ஆரம்பிக்கும் சுக்கிர தசை மிக யோகமானதாக இருக்கும். அதுவரை இக்குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
🙏 அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பரம்பரை ஜோதிடர்
+91 78 45 11 95 42

No comments:
Post a Comment