மிக மிக முக்கியமான அறிவிப்பு:
Note: Please share this post.
தற்போது நடக்கக்கூடிய சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படாதீர்கள். முக்கியமாக ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு ராசிக்காரர்கள் பயப்படாதீர்கள், எந்த ராசிபலனையும் பார்த்து பயப்படாதீர்கள்.
ராசிபலன்கள் அனைத்துமே பொதுவானவைதான். உங்கள் ஜாதகப்படி மாறும்.
உங்கள் ஜாதகத்தில் லக்னம், தசாபுத்தி, சனியின் சாரம், ஷட்பலம், அஷ்டவர்க்க பரல்கள் என எவ்வலவோ உள்ளன. பொதுவான பலன்களை நினைத்து குழப்பிக் கொள்ளாதீர்கள்.
உங்கள் கடமைகளை சரிவர செய்யுங்கள் - முடிந்த வரை முயலுங்கள் - சரியான நேரத்தை கடைபிடியுங்கள் - சோம்பேறித்தனத்தை விட்டொழியுங்கள் - எதிர்மறை கருத்துக்களை விதைப்பவர்களின் தொடர்புகளை துண்டியுங்கள் - குல தெய்வத்தை வணங்குங்கள் - முன்னோர்களை தினமும் வணங்குங்கள். இந்த பரிகாரங்களே போதுமானது.
உங்கள் மீது நீங்கள் முதலில் நம்பிக்கை வையுங்கள் - உங்களால் இந்த சனிப்பெயர்ச்சியை எதிர்கொள்ள முடியும் என்பதை நீங்கள் முதலில் நம்புங்கள்.
No comments:
Post a Comment