Thursday, January 4, 2018

சூரியன் - தொடர்: பகுதி 02

சூரியன் - தொடர்: 02

அனுபவ ஜோதிடம்:
கேது - அஸ்வினியை - செயல்படும் மூளையாகவும்
சுக்கிரன் - பரணியை - அழகு நெற்றி, புருவம், உடலமைப்பு
சூரியன் - கார்த்திகையை - வெப்பம் கொண்ட கண்ணாகவும்
சந்திரன் - ரோகினியை - குளிர் கொண்ட நாசியாகவும்
செவ்வாய் - மிருகசீரிஷம் - அடக்கம் வேண்டிய நாவாகவும்
ராகு - திருவாதிரை - இயக்கம் கொண்ட உடலாகவும்
குரு - புனர்பூசம் - நல்ல மனமாகவும்
பூசம் - சனி - வாழ்க்கைக்குத் தேவையான வயிறு, உணவு, தொழிலாகவும்
ஆயில்யம் - புதன் - வாழத் தகுதியான நேர்மையாகவும்
எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக சூரியனின் சஞ்சாரத்தை எடுத்துக் கொண்டால் சித்திரை மாதம் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் போது - காலபுருஷத் தத்துவம் படி படிப்படியாக தலையிலிருந்து இறங்கும் போது புருவத்திற்கு வரும் போது சுக்கிரனின் நக்ஷத்ரமான பரணியின் மூன்றாம் பாதத்தில் சஞ்சாரம் செய்யும் அதாவது புருவத்தில் சூரியன்  சஞ்சரிக்க ஆரம்பிக்கும் போது அக்னி நக்ஷத்ரம் ஆரம்பிக்கும். 



ஆன்மீக ரீதியாக சிவனுக்கு நெற்றிக்கண் உண்டு. நெற்றிக்கண்ணிலிருந்து பிறந்தவர் முருகன். முருகனுக்கு உகந்தது கிருத்திகை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.

அதனால்தான் கண்ணைக் குறிக்கக்கூடிய கிரகம் சூரியன் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். கண்ணுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் சூரிய நமஸ்காரம் செய்வது முக்கியமாகும். இதுவே பரிகாரம். கண் கண்ணாடி அணியும் ஒரு சிலருக்கு தினமும் சூரிய நமஸ்காரம் செய்த பின் கண்ணாடி தற்போது உபயோகிப்பதில்லை.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

No comments: