மிக கவனமாக படிக்க வேண்டிய விஷயம்:
சனி பகவானுடைய சஞ்சாரம் தனுசு ராசிக்குள் கடந்த 19ம் தேதி வாக்கியப் பஞ்சாங்கப்படி நிகழ்ந்தது. ஒரு மாதம் கூட முழுமை பெறவில்லை.
தனுசு ராசி என்பது தெய்வங்களைக் குறிக்கக் கூடிய ராசியாகும்.
உதாரணமாக ஏதேனும் ஒரு கோவிலுக்கு ப்ரஸ்ணம் பார்க்க முற்படும் போது - தனுசு லக்னம் உதயமானால் அந்த கோவிலின் தேவதை நல்ல நிலையில் - சாந்நித்யம் பெற்றிருக்கிறது என பொருள் கொள்ள வேண்டும். உதய லக்னம் தனுசுவாக இருக்கும் பட்சத்தில் இதை முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு தான் கிரகங்கள் - அதன் தன்மைகள் - அதன் இருப்புகள் ஆகியவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
கோச்சார ரீதியாக தனுசுவில் சனியின் சஞ்சாரம் இருக்கும் போது கோவில்கள் - அதை சார்ந்த விஷயங்களுக்கு கடும் விவாதம் எழும். 2019 பிப்ரவரி மாதம் கேது பகவான் தனுசுவிற்கு மாறும் போது - சனியுடன் இணையும் போது இந்த விவாதமானது இன்னும் அதிகமாகும். அந்த வேளைகளில் ஆஸ்திகர் - நாஸ்திகர் சண்டை அதிகமாக நடைபெறும். அதன் பின் 2020ல் குரு பகவான் தனுசு ராசிக்கு மாற்றம் பெற்ற பின் படிப்படியாக இது குறையும்.
பல சித்தர்களும் - யோகிகளும் - மகான்களும் - நாயன்மார்களும் - ஆழ்வார்களும் களமாடிய நாட்டில்......
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com
No comments:
Post a Comment