நேற்று பார்த்த குல தெய்வ ப்ரஸ்ண விளக்கம்:
ப்ரஸ்ண லக்னம்: கன்னி
லக்னாதிபதி புதன் மறைவில்லை.
உபய லக்னம் - பெண் அம்சம்.
ரிஷபம் - கன்னி - மகரம் வந்தால் ஊரின் பிரதான தெய்வம் இல்லை. உப தெய்வம். ப்ரஸ்ண திசையில் தெற்கு. எனவே ஊருக்கு தெற்கு திசையில் கோவில் அமைந்திருக்கிறது.
லக்னத்தை சனி பார்ப்பதால் ப்ரஸ்னம் பார்க்கும் இவர்களுக்கும் கோவிலுக்கும் தற்போது தொடர்பு இல்லை. ஆனால் பஞ்சமாதிபதி சனியுடன் லக்னாதிபதி இணைவு - பாக்கியாதிபதிபதி சுக்கிரன் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் மிக வலு. எனவே தேவதையின் சாந்நித்யம் அருமை.
இவர்கள் அந்த தேவதையை வணங்காவிட்டாலும் தேவதையின் அருள் இந்த குடும்பத்திற்கு இருக்கிறது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com
No comments:
Post a Comment