Sunday, January 7, 2018

வளமுடன் வாழ தை வெள்ளி - ஆடிச் செவ்வாய் வழிபாடு:

வளமுடன் வாழ தை வெள்ளி - ஆடிச் செவ்வாய் வழிபாடு:
உத்தராயண புண்ணிய காலம் தொடங்கும் தை மாதமும் - தக்ஷிணாயன புண்ணிய காலம் தொடங்கும் ஆடி மாதமும் சுமங்கலி வழிபாட்டிற்கு மிக முக்கிய மாதங்களாகும்.

இந்த வழிபாட்டிற்கு தை மாதம் வெள்ளிகிழமையையும் - ஆடி மாதம் செவ்வாய்கிழமையையும் எடுத்துக் கொள்வார்கள்.

ஏன்?

தை மாதம் சூரியன் மகர ராசியில் சஞ்சரிப்பார். மகரத்திற்கு ஐந்தாம் வீடு - பூர்வ புண்ணிய ஸ்தானம் - ரிஷபம் - ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன் - அவரின் கிழமை வெள்ளி.



ஆடி மாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பார். கடகத்திற்கு ஐந்தாம் வீடு - பூர்வ புண்ணிய ஸ்தானம் - விருச்சிகம் - விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய் - அவரின் கிழமை செவ்வாய்.

ரிஷபம் - விருச்சிகம் ஆகிய இரண்டு வீடுகளுமே சந்திரனுக்கு மிக முக்கியமானவை. ரிஷப ராசியில் சந்திரன் உச்சமாகவும் - விருச்சிக ராசியில் சந்திரன் பலமற்றும் காணப்படுவார். சந்திரன் கிரகமானது தன்மையில் பெண்ணைக் குறிக்கக்கூடியது.

எப்படிச் செய்வது?
ஒற்றைப் படை வரும் வகையில் (உதாரணமாக 1, 3, 5, 7, 9) சுமங்கலிகளுக்கு மஞ்சள் - குங்குமம் - வெற்றிலை - பாக்கு - பழம் - ஜாக்கெட் பிட் - தேங்காய் - நம்மால் முடிந்த தக்ஷணை ஆகியவற்றை தை வெள்ளி அல்லது ஆடி செவ்வாய் கிழமைகளில் மாலை வேளையில் கொடுத்து சுமங்கலிகளிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வதால் மிக நன்மைகளைப் பெற முடியும்.

இதைப் பற்றி பேச நிறைய இருக்கிறது, பேசுவோம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

No comments: