கேள்வி: எனது பெயரை எண் கணிதப்படி மாற்றியமைக்கலாமா? - திரு.ஜான், திருச்சி. (பாகம் - 01)
பதில்: முதலில் ஒன்றை தெளிவாக சொல்லி விடுகிறேன். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே. இவையனைத்தும் ஆதாரபூர்வமாகவும் யதார்த்தமாகவும் ஆராய்ந்து பார்த்துதான் சொல்லப்படுகிறது. யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க ஜோதிடம் ஒன்றும் கடைச்சரக்கல்ல. அது புனிதமானது.
சரி விஷயத்திற்கு வருவோம். திருச்சி.திரு.ஜான் அவர்களுக்கு மட்டுமல்ல, ஏகப்பட்ட பேருக்கு இந்த சந்தேகம் உண்டு. ”ஐயா எனது பெயர் எண் கணித படி சரியாக உள்ளதா? இல்லை மாற்றம் செய்ய வேண்டுமா? எந்த எண்ணில் எனது பெயர் இருக்க வேண்டும்?” போன்ற கேள்விகள் பல அனுதினமும் வருகின்றன. அவர்களுக்கெல்லாம் மட்டுமல்ல அனைவருக்குமே நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் பேரை மாற்றினாலோ, நீங்கள் பிறந்த தேதிக்கு ஏற்றவாறு உங்கள் பெயரை மாற்றி அமைப்பதனாலோ எதுவும் மாறிவிடப்போவதில்லை. ஜோதிடத்தில் எதையுமே மாற்ற இயலாது. மேலும் நம் அனைவருக்குமே நமது பெற்றோர்களும் நமது முன்னோர்களும்தான் முதல் கடவுள். அப்படியிருக்க அவர்கள் வைத்த பெயரை யாரோ ஒருவர் சொன்னதற்காக நீங்கள் பெயரை மாற்றலாமா? இதில் தினமும் 200 தடவை, 500 தடவை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் சொன்னார் “சார், நான் எனது பெயரை R.S.SHANKAR என்பதை R.S.R.SHANKAR என்று மாற்றி விட்டேன். அதற்கு 3000 ரூபாய் பீஸ் வாங்கி விட்டார் அந்த ஜோஸ்யர். ஆனால் எனக்கு எதுவுமே மாறவில்லை’ என்றார். நான் அவரை மிகவும் கடிந்து கொண்டேன். எங்காவது நாம் போய் ஏமாந்து விட்டு வந்து ஐயய்யோ இந்த ஜோதிடம் பொய் என்று சொல்கிறோம்.
தொடரும்....
2 comments:
தலைவரே !
திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதுபோல் ஜோதிடத்தின் 3அவது கண் "எண் கணிதம்" (numerology & nameology)ஆகும்.
பெயரை மாற்றி அமைப்பது பொழுதுபோக்கோ அல்லது விளையாட்டு காரியமோ அல்ல.
பெயர் மாற்றம் என்பது பிறந்த தேதி , நேரம் முதலியவை கொண்டு தூய்மையாக கணக்கிடப்படுபவை.
இதற்கு விளக்கம் நாளை கொடுக்கப்படும்.
Post a Comment