Thursday, June 24, 2010

கொஞ்சம் பழைய பதிவு - ஸ்ரீ காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால் ஏதேனும் ஆபத்து உண்டா?

ஸ்ரீ காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால் ஏதேனும் ஆபத்து உண்டா?


எந்த ஆபத்தும் இல்லை. கடந்த காலங்களில் கோவில் ராஜகோபுரமோ, கோவில் விமானமோ, மதில் சுவரோ இடிந்து விழுந்தால் நாட்டிற்கு ஆபத்து, நாட்டின் அரசுக்கு ஆபத்து, நாட்டை ஆள்பவருக்கு ஆபத்து, நாட்டிலுள்ள மக்களுக்கு ஆபத்து என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நடைபெற்றிருக்கும் சம்பவம் வெறும் சம்பவம்தான். யாரும் பயப்பட வேண்டாம். மேலும் சில ராசிக்காரர்களுக்கு ( மேஷம், மிதுனம், கடகம், விருச்சிகம், தனுசு, மகரம் ) இதனால் ஆபத்து என்றெல்லாம் புரளியை சில பத்திரிகைகள் எழுதியுள்ளன. யாரும் இதை நம்ப வேண்டாம். அந்த ராஜகோபுரம் இடிந்து விழுந்ததற்கு பல காரணாதிகள் உண்டு. உதாரணமாக அந்த ராஜகோபுரம் களி மண்ணைக் கொண்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இல்லை இல்லை எங்களுக்கு பயமாக இருக்கிறது என்பவர்கள் அருகிலுள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள். வீட்டில் நெய் தீபம் ஏற்றுங்கள். அவ்வளவு போதும். மேலதிக விபரங்களுக்கு எனக்கு மெயில் செய்யலாம்.

2 comments:

Anonymous said...

Good. Keep it Up!!!

Anonymous said...

Fine